கொடி திரை விமர்சனம்

சில படங்களில் சறுக்கலைச் சந்தித்து, தொடரியில் அதிவேக ரயிலில் இருந்து விழுந்து பலத்த அடிபட்ட தனுஷ், மீண்டு எழுந்து மீண்டும் மிடுக்கு காட்டியிருக்கும் படம் கொடி ! அரசியலில் சாதிக்க வேண்டும் எனும் வெறி ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது, அரசியல் போதையும் அரசியல் பதவியும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, பதவிக்காக ஒருவர் எதையெல்லாம் இழக்கத் தயாராகிறார் என்பதை காதல், பாடல், சமூகப் பொறுப்பு என பலவற்றைக் கலந்து கட்டி சொல்லியிருக்கிறார்கள். கொடி என்பது கதாநாயகனின் பெயர் என்பதிலிருந்த...
More

ஆண்டவன் கட்டளை : கிராமம் vs நகரம் ( திரை விமர்சனம் )

கிராமம், அடிமைகளையும் ராஜாவாய் உலவ வைக்கும் நகரம், ராஜாக்களையும் அடிமைகளாய் அலைய வைக்கும் புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை இரண்டாய் மடித்து அதன் நிறம் வெளியே தெரியக்கூடிய ஒரு மெல்லிய சட்டையில் போட்டுக் கொண்டு, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு நடப்பான் கிராமத்து ராஜா. அவனுக்கு வேறெதைப் பற்றியும் கவலையில்லை. முற்றத்துக்கு வெளியே கிடக்கும் காற்றும், காற்று முதுகு தடவிவிடும் நாற்றும், சோர்வுகளைக் கழற்றி எறியும் ஆறும் அவனுக்கு இலவச சேவை செய்யும். உறவுகளும், நட்பும், ஆடம்பரங்கள் தேவைப்படாத வ...
More

Top 10 தாதா படங்கள்

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதனால் தான் சர்வதேச அளவில் எல்லா மொழிகளிலும் தாதா திரைப்படங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. நாயகன், கபாலி என தமிழிலும் தாதா படங்கள் முத்திரை பதித்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தலை சிறந்த நூறு திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் சில தாதா திரைப்படங்கள் நிச்சயம் இருக்கும். தாதா படங்களின் முன்னோடி என ஹாலிவுட் படங்களைச் சொல்லலாம். அங்கே வரிசைகட்டி வந்த பல தாதா படங்கள் கல்லா கட்டியிருக்கின்றன. சர்வதேச அளவில் மறக்க முடியாத ப...
More

ரஜினி பற்றி ஷாரூக்.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தவிர்த்து விட்டு இந்திய சினிமாவை எழுதி விட முடியாது. தென்னிந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் முத‌ல் வ‌ட‌ இந்திய‌ ந‌டிக‌ர்க‌ள் வ‌ரை விய‌ந்து பார்க்கின்ற‌ ஒரு ந‌டிக‌ர். அவ‌ருட‌ன் ஒரு காட்சியிலாவ‌து த‌லைகாட்டி விட‌ வேண்டுமென்பது பல‌ ந‌டிக‌ர், ந‌டிகைய‌ரின் வாழ்நாள் இல‌ட்சிய‌ம். அவ‌ரை ஒரு முறையேனும் நேரில் பார்க்க‌ வேண்டுமென்ப‌து கோடானுகோடி ர‌சிக‌ர்க‌ளின் வாழ்நாள் ஆசை. ஒரு சினிமா ர‌சிக‌ராக‌ வ‌ள‌ர்ந்து, க‌ண்ட‌ர்ட‌ராக‌ ப‌ணியை ஆர‌ம்பித்து இன்று ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தை வ‌சீக...
More

இருமுகன் : திரை விமர்சனம்

மிரட்டலாய் ஆரம்பிக்கிறான் இருமுகன். போர்ன் அல்டிமேட்டம் இசையின் சாயலில், ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கோர்வையில், ஒரு மிரட்டலான தொனியில் படம் ஆரம்பிக்கிறது. கற்கால மனிதன் முதல் தற்கால மனிதன் வரை, மனித வரலாற்றில் வன்முறை ஆயுதங்களின் வளர்ச்சி, ஓவியங்களாக பின்னணியில் ஓட "வாவ்.. என மனம் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பறக்க விடுகிறது" ஒரு எழுபது வயது முதியவர், மலேஷியாவிலுள்ள இந்தியன் எம்பஸிக்குள் நுழைகிறார். இன்ஹேலர் ஒன்றை அடிக்கிறார், அசுர பலம் வருகிறது. அதிரடி சரவெடியாய் ஒரு சண்டை. படத்தின் மீதான எதி...
More

HELL HOLE (நரக வாசல் )

நரகமல்ல, அதைவிடக் கொடியது ! உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது. ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய்...
More

டாப் 5 ஹாலிவுட் சைக்கோ  மூவீஸ்

  ஹாலிவுட்டில் சைக்கோப் படங்களுக்குப் பஞ்சமில்லை. காரணம் பெரும்பாலான சைக்கோக்கள் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிரட்டிய ஹாலிவுட் திரைப்படங்களில் சில. சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ் (Silence of the Lambs ) அந்தோணி ஹாப்கின்ஸ் சைக்கோ கொலையாளியாக பின்னிப் பெடலெடுத்த திரைப்படம் இது. மன நல மருத்துவராய் இருந்து சைக்கோ ஆனவர். மனிதர்களைக் கொன்று தின்னும் ஹானிபல் வகை வேறு ! அவருடைய பார்வையும் அசைவுகளும், முகபாவமும் நரம்புகளில் பயத்தை ஊற்றுவது சர்வ நிச்சயம். ஹாலிவுட்டின...
More

ஜோக்கர் : திரை விமர்சனம்

ஒரு ஆப்பிள் பழத்துக்குள் இருக்கும் விதைகளை எண்ணி விட முடியும். ஆனால் ஒரு விதைக்குள் இருக்கும் ஆப்பிள் பழங்களை எண்ணி விட முடியாது ! ஜோக்கர் திரைப்படம் அப்படி ஒரு விதையாக தமிழ்த் திரையுலகிலும், தமிழ் சமூகத்திலும் விழுந்திருக்கிறது. அது எத்தனை கனிகளைக் கொடுக்கப் போகிறது என்பது அந்த விதை விழுந்த நிலங்களைப் பொறுத்தது. மனநிலை சரியில்லாதவன் போன்ற ஒரு ஜோக்கரை அறிமுகப்படுத்தி, அவனது வாழ்க்கையையும், வலியையும், சமூக அக்கறையையும் காட்சிப்படுத்தி, கடைசியில் "ஜோக்கர் யாருப்பா ? அவனா ? நீயா ? " என கொ...
More

டாப் 5 கேசினோ விளையாட்டுகள்

  போக்கர் ( Poker ) சூதாட்ட விடுதிகளில் விளையாடப்படும் ஹாட்டஸ்ட் விளையாட்டு போக்கர் தான். ஆயிரக்கணக்கில் பெட் கட்டுபவர்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்த விளையாட்டு தான். பணக்காரர்களுக்கு இது ஒரு வறட்டு கௌரவ விளையாட்டும் கூட. கிளு கிளு ஹீரோயினுடனும், ஒரு கையில் கோப்பையுடனும் ஜேம்ஸ்பாண்ட் விளையாடுவது பெரும்பாலும் இந்த விளையாட்டைத் தான். சாதாரண சீட்டாட்டம் தான் இது. யாரிடம் அதிக மதிப்புடைய கார்ட்கள் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி. இரண்டு ஜோடி, மூன்று ஜோடி, வரிசை அது இது என ஏகப்பட்ட வகைகளில...
More

இப்படியும் ஒரு சூதாட்டப் பிரியர்

இப்படியும் ஒரு சூதாட்டப் பிரியர்   ஆஸ்திரேலியாவின் மெகா கோடீஸ்வரர் கேரி பெக்கர்.  இவர் ஒரு சூதாட்ட வெறியர். இவர் சூதாட வருகிறார் என்றாலே கெசீனோக்களுக்கு ஜுரம் எடுக்கும். காரணம் மில்லியன் கணக்கில் தான் இவர் பந்தயம் கட்டுவார். ஜெயித்தால் விடுதிகள் இவருக்கு பல மில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும். இல்லையேல் அடித்தது ஜாக்பாட் என விழா எடுத்துக் கொண்டாடலாம். 1990ல் லண்டனிலுள்ள ஒரு பிரபல கெசீனோவில் நுழைந்து பதினைந்து மில்லியன் பவுண்ட்களை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் நான்கு மேஜைகளில்...
More