“டைம்” ரொம்ப முக்கியம்

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்கவும் முடியாத, யாருக்கும் கொடுக்கவும் முடியாத ஒரு உன்னத பொருள் நேரம் தான். உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, “டைம் செம ஃபாஸ்டா ஓடிடுச்சு”, “நேரம் போகவே மாட்டேங்குது” என காலத்தைக் குறை சொல்கிறோம் ...
More

நேரமே கிடைக்கலீங்க

  “சுத்தமா நேரமே இல்லீங்க..” எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது நாள் முடிந்திருக்கிறதா ? நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொண்டே இருக்கிறார்கள். கடைகள் நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கின்றன. வீடுகளில் விளக்குகள் ஜாமங்கள் கடந்தும் கூட அணைக்கப்படாமல் இருக்கின்றன. சூரியனுக்கு முன்பே சாலைகளில் மக்கள் வந்து விடுகிறார்கள். மக்கள் ரொம்பவே பிஸி. எவ்வளவு தான் பிஸியாய் இருந்தாலும் கடைசியில் “நேரம் கிடைக்கல” எனும் புரா...
More

உடலைப் பேணினால், மனமும் வலுவாகும்

“நமது உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லையேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காது” என்கிறார் புத்தர். உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல, ஒன்றின் ஆரோக்கியமும், பலவீனமும் அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும். உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விஷயம் “ இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்” என்பது தான். அதற்குக் காரணம் இளம் வயதினரின் ஏன...
More

கல்வியால் ஆய பயன் !

ஆண்டு இறுதித் தேர்வு வந்தாலே போதும் பள்ளி மாணவர்களெல்லாம் எதோ கொள்ளி வாய்ப் பிசாசு கொல்லையில் காத்திருப்பது போல வெலவெலக்கத் துவங்குவார்கள். அரக்கப் பரக்க ஓடுவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும். “பையனுக்கு எக்ஸாம் இருக்குல்ல..” என்று தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருப்பார்கள். அந்த பர...
More

மன்னிப்பு மகத்துவமானது !

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு நாள் சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்ற...
More

அடுத்தவன் சொல்வதல்ல நீ…

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அந்த வடிவமாகவே நாம் மாறிவிடுகிறோம். பிறருடைய விருப்பங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமது இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் வேகத் தடையாக அமைந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த விமர்சனங்கள் பெரும் புதை குழிகளாய் மாறி நம்மை விழுங்கி விடுவதும் உண்டு. பிறர் ...
More

வீண் செலவு வேண்டாமே !

“நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே” என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. உங்களுக்கு எதிரே செல்லும் ...
More

எல்லாரையும் போல நானும்…

நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு போவார் ஒருவர். அவருக்குப் பின்னால் ஆடுகளெல்லாம் ஒரு தாள லயத்தில் நடந்து போகும். முன்னே செல்லும் ஆடுகள் பின்னால் செல்லும் ஆடுகளுக்கு வழிகாட்டும். முன்னால் செல்லும் ஆடுகள் குப்பையில் இறங்கினால் பின்னால் போகும் ஆடுகளும் குப்பையில் இறங்கும். முன்னால் செல்லும் ஆடுகள் ஓடினால் பின்னால் வருபவையும் ஓடும், நின்றால் நிற்கும். முன்னால் செல்லும் ஆடுகள் தான் பின்னால் வரும் ஆடுகளின் போக்கை நிர்ணயிக்கின்றன. இது நம் எல்லோருக்கும் தெரி...
More

நீ என்னவாக விரும்புகிறாய் ?   

                  “நீ என்னவாக விரும்புகிறாய்” – இந்தக் கேள்வியை பல வேளைகளில் பலரும் நம்மிடம் கேட்டிருப்பார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு பதில் நம்மிடம் தயாராய் இருந்திருக்கும். “நான் டாக்டராவேன், நான் இன்சினியராவேன், நான் டீச்சராவேன்” எனும் பதில்கள் பள்ளிக்கூடத்துக்கு.  அந்தப் பதில்கள் பெரும்பாலும் நமது பெற்றோரைப் பார்த்தோ, தெரிந்தவர்களைப் பார்த்தோ உருவாக்கிய பிம்பமாகவே இருக்கும். பலவேளைகளில் “டீச்சர் கேட்டா, சயிண்டிஸ்ட் ஆவேன்னு பதில் சொல்லுப்பா” என குழந்தைகளிடம் அவர்களுக்கான பதிலையு...
More

வேலையே வாழ்க்கையல்ல

“என் வீட்டுக்காரர் எப்பவுமே ஆபீஸ் ஆபீஸ்னு அதையே கட்டிகிட்டு அழறாரு” எனும் புலம்பலைக் கேட்டதில்லையெனில் நீங்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி போல இந்த புலம்பல்கள் எல்லா இடங்களிலும் காற்றைப் போல சர்வ சுதந்திரமாக அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. “ஆபீஸ் எனக்கு முதல் வீடு, வீடு எனக்கு இரண்டாவது ஆபீஸ்” எனும் கரகரப்பான குரல் மறு முனையிலிருந்து எழுகிறது. வீட்டில் தூங்குவதைத் தவிர வேறெதையும் பெருசாய் செய்துவிடாத மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்க...
More