பிளாஸ்டிக் இனி மெல்லச் சாகும்…

ஆடித் தள்ளுபடிக்கு கடையில் புடவை எடுத்து ஒவ்வொரு புடவையையும் ஒவ்வோர் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வாங்கி வரும் அம்மாக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீங்கு பற்றி ? பயணத்துக்குச் செல்லும் போதெல்லாம் நான்கைந்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி, தண்ணீரைக் குடித்து முடித்தபின் அலட்சியமாய் தூக்கி வீசும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது பிளாஸ்டிப் பொருட்கள் பூமியை மாசுபடுத்தி விடுமே எனும் கவலை ? சற்றே நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பாருங்கள் எத்தனை பொருட்கள்...
More

கால்சென்டர் ஊழியர்கள்

இந்த கால்செண்டர்,பி.பி.ஓ வேலை பார்க்கும் இளசுகள் ரொம்பப் பாவம். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களை ஏதோ பலான ஆசாமிகள் போல பார்ப்பார்கள். “கால் செண்டரா…ம்ம்ம்…ஜமாய் மச்சி” என நண்பர்கள் கிண்டலடிக்கவும் செய்வார்கள். உண்மையில் இந்த வேலை செய்பவர்களின் நிலமை ரொம்பப் பாவம். கஸ்டமர் என்ன மடத் தனமான கேள்வி கேட்டாலும் துளியூண்டு கூட எரிச்சல் காட்டாமல் அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும். “என்னய்யா எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் இருக்கு ?” என யாராவது கேட்டால். “தேங்க்யூ பார் காலிங் சார்… நான் பாக்கற...
More

டாப் 5 கேசினோ விளையாட்டுகள்

  போக்கர் ( Poker ) சூதாட்ட விடுதிகளில் விளையாடப்படும் ஹாட்டஸ்ட் விளையாட்டு போக்கர் தான். ஆயிரக்கணக்கில் பெட் கட்டுபவர்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்த விளையாட்டு தான். பணக்காரர்களுக்கு இது ஒரு வறட்டு கௌரவ விளையாட்டும் கூட. கிளு கிளு ஹீரோயினுடனும், ஒரு கையில் கோப்பையுடனும் ஜேம்ஸ்பாண்ட் விளையாடுவது பெரும்பாலும் இந்த விளையாட்டைத் தான். சாதாரண சீட்டாட்டம் தான் இது. யாரிடம் அதிக மதிப்புடைய கார்ட்கள் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி. இரண்டு ஜோடி, மூன்று ஜோடி, வரிசை அது இது என ஏகப்பட்ட வகைகளில...
More

இப்படியும் ஒரு சூதாட்டப் பிரியர்

இப்படியும் ஒரு சூதாட்டப் பிரியர்   ஆஸ்திரேலியாவின் மெகா கோடீஸ்வரர் கேரி பெக்கர்.  இவர் ஒரு சூதாட்ட வெறியர். இவர் சூதாட வருகிறார் என்றாலே கெசீனோக்களுக்கு ஜுரம் எடுக்கும். காரணம் மில்லியன் கணக்கில் தான் இவர் பந்தயம் கட்டுவார். ஜெயித்தால் விடுதிகள் இவருக்கு பல மில்லியன் கொடுக்க வேண்டியிருக்கும். இல்லையேல் அடித்தது ஜாக்பாட் என விழா எடுத்துக் கொண்டாடலாம். 1990ல் லண்டனிலுள்ள ஒரு பிரபல கெசீனோவில் நுழைந்து பதினைந்து மில்லியன் பவுண்ட்களை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் நான்கு மேஜைகளில்...
More

Dangerous Games

ஹாயாக காலாட்டிக் கொண்டே விடுதிகளில் விளையாடும் சூது ஒருவகை. வெட்ட வெளியில் விளையாட்டுகளில் பெட் கட்டுவது இன்னொரு வகை. அதிலும் டேஞ்சரஸ் விளையாட்டுகளில் இந்த பெட்டிங் பரபரக்கும். ஹாக் டவ் அல்லது சிக்கன் விளையாட்டு சிக்கன் விளையாட்டு என்றதும் ஏதோ குந்திகிட்டு பார்க்கும் கோழிச் சண்டை என நினைக்காதீர்கள். இது ஒரு சிலிர்ப்பூட்டும் கார் சண்டை. ஒரு நேர் சாலையின் நடுவே ஒரு வெள்ளை கோடு வரையப்பட்டிருக்கும். இரண்டு புறமிருந்தும் இரண்டு பேர் காரை ஓட்டிக் கொண்டு எதிரும் புதிருமாக வரவேண்டும் அனல் பறக்...
More

தில்லு முல்லு..தில்லு முல்லு

தில்லு முல்லு..தில்லு முல்லு கேசீனோக்களில் தில்லு முல்லு செய்வது ஒரு கலை. மாட்டினால் பெண்ட் நிமிர்த்தி விடுவார்கள். இதற்காகவே சப்பாடு போட்டு வளர்த்த பாடி கார்ட்கள் எல்லா கேசினோக்களிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள். அப்படி இருந்தும் மக்களுடைய கண்களிலும் , “கன்”களிலும் மண்ணைத் தூவிய அசகாய சூரர்கள் இவர்கள்.   ரிச்சர்ட் மார்கஸ் (Richard Marcus) கேசினோக்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் ரிச்சர்ட் மார்கஸ் . இவரும் இவரது கூட்டாளிகளுமாக கேசினோக்களை சகட்டு மேனிக்கு முட்டாளாக்கியி...
More

விளையாடு மங்காத்தா

இங்கே ஆடணும் சூது !   சூதாட்டம் என்றதும் ஏதோ ஆலமரத்தடியில் கைலி கட்டிக் கொண்டு ஆடும் சமாச்சாரம் என்று நினைக்கும் அப்பாவியா நீங்கள். அப்படியானால் நீங்கள் இதைப் படியுங்கள். உலகிலேயே அதிக பணம் புரளும் ஹை டெக் இடங்கள் இந்த சூதாட்ட விடுதிகள். லாஸ் வேகஸ் நகரங்களில் சூதாட்டம் இருக்கலாம், ஆனா சூதாட்டத்துக்காகவே ஒரு நகரம் இருக்குமா ? இருக்கிறது. அது தான் அமெரிக்காவின் நவேடாவிலுள்ள லாஸ் வேகஸ். “பணக்காரத்தனம்” ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அதன் அர்த்தம் புரியணும்ன்னா ஒரு முறை இந்த ந...
More

சீட்டுக்கட்டு !!!

கட்டு கட்டு … சீட்டுக்கட்டு உலகிலேயே பழமையான சூதாட்டங்களில் ஒன்று சீட்டாட்டம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் இந்த விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1300களில் எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவை தான் கிட்டத் தட்ட இப்போதைய சீட்டுக் கட்டுகள். சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52 ! பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் சீட்டாட்டம் உலகெங்கும் வேகமாகப் பரவியது. முன்பெல்லாம் சீட்டுகள் மரக்கட்டை, மண்பாண்டங்கள் போன்றவற்றில் தான் செய்யப்பட்டன. பிற்காலத்தில் தான் அவை...
More

சார்பு

நன்றாக இருக்கிறது என்று நிறையவே சாப்பிட்டாய் வாங்கிய சந்தையைச் சொல்லும் வரை. கூந்தலில் சூடிக் கொள்ள தயக்கம் கொள்ளவேயில்லை செடியின் தாய்வீட்டைச் சொல்லும் வரை. இப்போது எல்லாவற்றையும் நிராகரிக்கிறாய். சுவையும் மணமும் உனக்குப் பிடித்தே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாய் மறுக்கிறாய். யார் எழுதியதானாலும் கடைசியில் கைழுத்திடுவது யாரென்பதே முக்கியமுனக்கு. சிரிப்பு தான் வருகிறது சிப்பி பிடிக்காது என்பதற்காய் முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்.
More

அடையாளங்கள்

உன்னைச் சந்தித்தபோது மெல்லப் புன்னகைத்தேன் உற்சாகக் கண்களோடு உற்று நோக்கினேன். நீயோ நான் புறக்கணித்ததாய்ப் புலம்பியிருக்கிறாய். காதுவரைக்கும் உதடுகள் இழுத்துப் பிடிக்கவில்லை தான், சத்தம் எறிந்து உன்னைச் சந்திக்கவில்லை தான், தெரிந்திருக்கவில்லை எனக்கு. அடையாளங்களே அவசியமென்று தெரிந்திருக்கவில்லை எனக்கு. மெல்லிய புன்னகையில், கண்களில் மிதந்த மனசில், கண்டு கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். இன்னொரு முறை வா. ம‌ன‌தை வாசிக்க‌ ம‌ன‌ம‌ற்ற‌ உன‌க்காய், முகத்தை ...
More