மனிதருக்குச் சிறகில்லை.

  இந்த மரத்துக்கும் எனக்கும் தலைமுறைப் பழக்கம். நான் சிறகு விரித்ததும் என் அடைகாப்பின் அடைக்கலமும் இந்த மரம் தான். இதன் கடந்த கால இலைகளுக்கும், நிகழ்கால முளைகளுக்கும் என் அலகுகள் வாழ்த்துச் சொன்னதுண்டு. இதன் கிளைகள் எல்லாம் என் நகப் பதிவுகளை புன்னகையோடு பெற்றுக் கொண்டவை தான். நான் மாடியில் கட்டிய குடிலுக்கு, அஸ்திவாரம் இதன் பூமியில் புதைந்த வேர்கள் தானே. இந்த மரம் தான் என் தாய் வீடும், நான் தாவும் வீடும். எனக்கும் இந்த மரத்துக்குமான உறவு உனக்க...
More

நெருக்குதல்கள்

  கவிதை எழுத மறந்து விட்டேன். எத்தனை முயன்றும் வரவில்லை. என் கவிதைச் செடிகளுக்கு செயற்கைத் தண்ணீர் பச்சையம் தரப் போவதில்லை. என் விரல்களின் நுனிகளில் இறுகக் கட்டியிருந்த வீணை நாண்கள் வெறும் கம்பிகளாய் நீள்கின்றன. என் நகங்களுக்குள்ளும் நான் நட்டுவைத்திருந்த நந்தவனங்களுக்கு, இயந்திர வாசம் இப்போது. பூக்களைப் பறித்துக் கொண்டு சாலையில் இறங்கினால் புழுதி வந்து போர்வை போர்த்துகிறது. கண்ணாடிக் கவிதையோடு வாசல் தாண்டினால் நெரிசல்களால் நெரிபட்டுப் போகிறது. அடை...
More

நேசிய கீதம்

    பாட்டி, இன்னும் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள். நீ சொன்ன இடம் தூரமில்லை. நீ நடக்கவேண்டாம். அங்கே செல்வதற்குள் உன் பாதத்தின் சுவடுகளில் மரணம் வந்து படுத்துக் கொள்ளலாம். நான் சுமக்கின்றேன், எம் தந்தையர் தலைமுறையையே சுமந்தவள் நீ, உன்னைச் சுமப்பதே என் தலைமுறையின் தலையாய கடமை. வலுவானதாய் உன்னிடம் இருப்பதே இந்தக் கைத்தடி மட்டும் தான் இறுகப் பற்றிக் கொள். கசக்கிப் போட்ட கதராடையாய் கிடக்கிறது உன் மேனி, என் பாசச்சூட்டில் கொஞ்ச நேரம் சுருக்கம் கள...
More

போலித் தீர்க்கத்தரிசி.

  அந்த அறை கவலை முகங்களால் அடுக்கப்பட்டு கலைந்து கிடந்தது. அழுவதற்காகவே தயாரிக்கப் பட்ட கண்களோடு காத்துக் கிடந்தது கூட்டம். அவர்களின் கவலைக் கைக்குட்டைகள் காய்ந்திருக்கவில்லை, கடலில் விழுந்த பஞ்சு மூட்டையாய் இதயமும் பாரமேறிக் கிடந்தது. அவர் வந்தார், அவர் கைகளில் துன்பத்தைத் துரத்தும் மந்திரக்கோல் இருப்பதாகவும், பாசக்கயிறோடு போட்டியிடும் கருப்புக் கயிறு இருப்பதாகவும் நம்பிக் கிடந்தது கூட்டம். அவர் பேசினார், அவருக்கு கடவுளே அகராதி அளித்ததாய், அவர...
More

தூரம்

  அவசரமாய்த் தொடர்பு கொள் ! தகவல் வந்த திசைக்கும் எனக்கும் இடையே சில மாநிலங்கள் இருந்தன. நேற்று வரை இம்மென்றால் இறக்கி வைத்த இணையம், இன்று உம்மென்று இருந்தது. என் மின்னஞ்சல் அச்சு ஒடிந்து போன ஒற்றைச் சக்கரத் தேராய் மலையடிவாரத்தில் மண்டியிட்டது. நைந்து போன வாழைநாராய் என் கணிப்பொறி இணைப்பு இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருந்தது. தொலை பேசியை அவசரமாய் இழுத்து பரபரப்பாய் அழுத்தினால், எதிர் பக்கத்தில் அது நிதானமாய் அடித்து ஓய்ந்தது. இன்னொரு முறை நிதானமாய் இய...
More

உனக்கு வயசாச்சு

முன்பெல்லாம், இருசக்கர வாகனம் உறுமிக் கொண்டு ஓடினால் தான் ஒத்துக் கொள்வாய், காதோடு ஒட்டவைத்த ஒலிபெருக்கி காது மடல்களையும் அதிரவைத்தால் தான் இசையென்று இயம்புவாய், காயப் போட்டிருக்கும் சேலையைக் கூட காமக் கண்ணோடு பார்ப்பாய், மாலை வேளைகளை தேவதைகளின் ஊர்வல நேரமென உற்சாகமாய் மொழிபெயர்ப்பாய், போங்கப்பா, உங்களுக்கு எதுவுமே புரியாது என்று அப்பனுக்கே கலாச்சார அகரம் கற்றுத் தருவாய், கோயிலுக்கு உள்ளே வரவே முப்பது முறை முரண்டு பிடிப்பாய். இப்போது உன்னில் புது மாற்றங்...
More

அரசு

  அரசு, வன்முறை கேட்டு அதிர்ச்சியடைகிறது துயரம் கண்டு அனுதாபம் தருகிறது. பண்டிகை நாட்களில் வாழ்த்து தருகிறது. அழிவு கண்டு உறுதி தருகிறது தேர்தல் தேதிகளில் வாக்குறுதி தருகிறது. ஆட்சி முடியும் வரை ஏமாற்றம் தருகிறது.
More