ஆட்டோ வேளச்சேரி வருமா ?

  'என்னது நூற்றைம்பது ரூபாவா ? நான் ஆட்டோவை விலைக்கு கேக்கலேப்பா. வேளச்சேரி வரைக்கும் போகணும், அதுக்கு கேட்டேன்' எரிச்சலில் சொன்னேன் நான். 'வேளச்சேரி வரைக்கும் போகணும் இல்லையா சார். இன்னும் சரியா விடியக் கூட இல்லை. திரும்பி வரதுக்கு சவாரி கிடைக்காது சார். நியாயமா தான் கேட்டிருக்கேன்' ஆட்டோக்காரன் எத்தனையாவது முறையாக இதே வார்த்தைகளைச் சொல்றானோ ? நாகர்கோவிலிலிருந்து ஒரு தனியார் பஸ்ஸில் ஏறி அதிகாலையிலேயே கிண்டியில் வந்து இறங்கியாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள் ஓடிக...
More

வழியனுப்பல்

  அடுத்தவாரம் அமெரிக்கா செல்லவேண்டும். புராஜக்ட் மேனேஜர் அவசர அவசரமாய் அழைத்துச் சொன்னபோது விஜயால் நம்ப முடியவில்லை. ஏறக்குறைய இல்லை என்றாகியிருந்த வாய்ப்பு அது, திடீரென மீண்டும் உயிர்கொண்டு எழுந்திருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பே அமெரிக்கன் கவுன்சிலேட்டில் காத்துக் கிடந்து விசா வாங்கியாகிவிட்டது. இதோ அதோ என்று புறப்படும் காலம் வந்ததும் புராஜக்ட் கேன்சலாகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். அதன் பின் வாய்ப்பு வரும் வருமென்று காத்திருந்து கடைசியில் இனிமேல் இப்போதைக்கு அமெரிக்காவை...
More

பாசம்

'மகேஷ் இன்னும் வரலையா ? அவன் வராம பொணத்தைத் தூக்கலாமா ?' கூட்டத்தில் யாரோ கேட்டார்கள். அழுது அழுது சிவந்துபோன கண்களுடன் நித்தியானந்தத்தின் குடும்பமே அவருடைய பிணத்தைச் சுற்றி உறைந்து போய் உட்கார்ந்திருந்தது. அவருடைய மூத்த மகன் மகேஷ் மட்டும் இன்னும் வரவில்லை. சென்னையில் ஒரு நல்ல கம்பெனியில் கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தான் மகேஷ். அவனுக்கு எல்லாமே அவனுடைய அப்பா என்றுதான் இருந்தது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. 'தகவல் சொல்லிட்டீங்களா ?' 'காலையிலேயே சொல்லிட்டோம். ஆனா அவனுக்கு ஏதோ அவசர...
More

பிழையற்ற பிழைகள்

  இன்னும் கொஞ்ச நேரத்தில் இரயில் வண்டி சென்னையை அடைந்து விடும். நீண்ட நாட்களுக்குப் பின்பு சென்னை வருகிறேன். அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை வராமலேயே ஊருக்குப் போயிருந்தேன். சென்னை இரயில்வே நிலையத்தில் மாமாவும் குடும்பமும் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை வரலேண்ணா மாம்பலத்துல இறங்கி ஆட்டோ பிடிக்க வேண்டியது தான். ஆட்டோ சார்ஜ் இப்போ எவ்வளவோ ? பதினான்கு மணி நேரப் பயணம் என்பது மிகவும் சலிப்பான பயணம் தான். இரயிலில் என்பதால் கொஞ்சம் தூங்கவாவது முடிகிறது. பஸ் என்றால் அவ்வளவு தா...
More