மலர்களே மலர்களே

தினசரி காலையில் விரல் வருடி ஊர்ஜிதப் படுத்துகிறேன் இன்னும் முளைக்கவில்லை மொட்டு. தரையில் ஈரமிருக்கிறதா தேவைக்கு பச்சையம் இருக்கிறதா என பரிசோதனைப் பார்வைகளைப் பதியமிடுகிறேன். உரங்களுக்கும் மண்புழுக்களுக்கும் கூட ஏற்பாடு செய்து பூக்கள் வேண்டி பிரார்த்தனைகளும் செய்தாயின்று. செழித்து வளரும் செடியில் எங்கும் மொட்டுகளைக் காணோம். பூக்களைக் காணும் கனவுகள் வெறித்து கரு விழிகள் இரண்டிலும் கூட பூக்கள் விழுந்து விட்டன. என் பூ தேடலைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்...
More

தாயில்லாமல்

இப்போதும் எங்கேயோ ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். எப்போதும் எங்கேனும் ஒரு மகன் தன் தாயை மிதித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் எங்கேயோ எழுதப்படாத வலிகளின் வரிகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன அன்னையரின் டைரிகள். எப்போதும் எங்கேனும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு கவிதை தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.
More

பால்ய ஆடைகள்

சில ஆடைகள் விசேஷமானவை. சிறுவயதில், விழாக்கால நாள் வரை காத்திருந்து பெற்றுக் கொள்ளும் புத்தாடை மணம் இன்னும் நாசிகளில் உயிர்ப்புடன். வருட இடைவெளி வாங்கிக் குவித்த ஆடைகள் ஆயிரமெனினும் இன்னும் நினைவிருக்கும் பால்ய கால ஆடைகளின் டிசைன்கள். அம்மாக்களின் அலமாரிகளில் திருமண வாசம் மாறாமல் மௌனித்திருக்கும் பட்டுப் புடவைகள் விலைமதிப்பற்றவை. காதல் பரிசளித்த ஆடை நேசம் பரிமளித்த ஆடை என எல்லோரிடமும் இருக்கக் கூடும் ஏதேனும் ஓர் ஆடை. காலக் கரையான் தின்று தீர்த்தாலும் இன்னு...
More

காலமாற்றம்

தாள லயத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்த காலத்திலும், காற்றின் முதுகெலும்பாய் கழுத்தை நீட்டும் சாய்ந்த தென்னையில் ஏறி குளத்தில் குதித்து நீச்சலடித்த காலத்திலும், உச்சிக் கொம்பு மாங்காயை எச்சில் ஒழுக குறிபார்த்து கல்வீசிக் கைப்பற்றிய காலங்களிலும் வரப்புக்கும் நிலப் பரப்புக்கும் ஓடி ஓடி பொழுது போக்கிய பொழுதுகளிலும் தெரிந்திருக்கவில்லை, இப்போது தொப்பையைக் குறைக்க மூடிய அறையில் மூன்று மணி நேரம் மூச்சு முட்ட இயந்திரத்தில் ஓடும்போது தான் தெரிகிறது அன்று வாழ்க்கையே...
More

பாரதி வாழ்த்து

எல்லா கவிதைப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கிறது ஒரு பாரதி வாழ்த்து ! சிலர் நீ இப்படிச் சொன்னது இப்படியாயிற்றே என்று புலம்ப, சிலர் நீ சொல்லாவிட்டால் சொல்லே இருந்திருக்காது என விளம்ப, இன்னும் சிலர் தப்புத் தப்பாய் புரிந்து கொண்டதற்கான தடையங்களோடு விளக்க, மிச்சமிருப்போர் பாரதியை விட அதிகமாய் யானையைப் பாடி, முடித்துக் கொள்கிறார்கள் பாரதி வாழ்த்தை. இவ்வாறாக என் தொகுப்பிலும் இடம்பெறக் கூடும் இந்த பாரதிப் பாடல்.
More

சன்னலுக்கு வெளியே கவிதைகள்

சன்னலோர ரயில் பயணம் ரம்மியமானது. தண்டவாளத்தில் நீச்சலடித்து முன்னேறும் ரயிலும், பின்னோக்கிப் பாயும் இயற்கையும், அருகிருக்கும் தண்டவாளத்தின் மேலமர்ந்து கூடவே ஓடிவரும் வெளிச்சமும், பொத்தாம் பொதுவாக கையாட்டிச் சிரிக்கும் குதூகலக் குழந்தைகளும், தூரத்துக் குளத்தில் வெட்கத்தை அலசிக் காயப்போடும் கிராமக் குயில்களும், ரயில்வே கேட்டில் பரபரப்புகளுடன் பார்த்திருக்கும் வாகனக் குரல்களும், வெளியே விரிந்திருக்கும் புத்தகம், யதார்த்தத் திரைப்படம்… என சன்னலோர ரயில் பயணம் ரம...
More

க‌விதையும், அழகும்

எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. பிரசவத்தின் வலியை சிரித்துக் கொண்டே சொல்வதும், சிரிக்கும் குழந்தையை அழுது கொண்டே அறிவிப்பதும் சாத்தியமில்லை. குருதிப் போரையும் கண்ணீர்ப் பூவையும் ஒற்றைச் சாடிக்குள் சொருகி வைக்கவும் முடிவதில்லை. பேனாவும் காகிதமும் விரலும் மாறுவதில்லை தான். வலிகளும் வரிகளும் மாறி மாறித் தானே வருகின்றன. எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. கவிதைகளாய் இருந்தால் போதும்.
More

கவிதை : வயதானவர்களின் வாழ்க்கை

தலைப்புச் செய்திகளை மட்டுமே அவசரமாய் மேய்ந்து வந்த கண்கள், வரி விளம்பரங்களையும் விடாமல் படிக்கும். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வருகையிலும் விரல்கள் ரிமோட் தேடாது. ஃபேஷன் சானலின் எண் மறந்து போகும் நியூஸ் சேனல் எண் நினைவில் நிற்கும். அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி, தூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும். இந்தக் கால இசை சத்தம் என்று சத்தமாய்ப் பேசும். இளமைக் கலாட்டாக்கள் தவறுகளே என்பது தெரியவரும் பேசும் போதெல்லாம் அறிவுரை முறைக்கும் த...
More

கவிதை : வறுமை நினைவுகள்

ஓரம் கிழிந்ததால் தலைகீழாய் கட்டப்பட்ட அப்பாவின் வேட்டியும், வியர்வைப் போராட்டத்தில் அக்குள் கிழிந்த பனியனும், தரைக்கும் காலுக்குமிடையே மில்லி மீட்டர் தடிமனில் களைத்துத் தொங்கிய கடைவீதிச் செருப்பும், நினைவுக்கு வருகின்றன கிரெடிட் கார்ட் கொடுத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு “லூயிபிலிப்” சட்டை வாங்குகையில்
More

இறை நம்பிக்கை இருக்கட்டும்

இறை நம்பிக்கை இருக்கட்டும்   இறைவனைத் தேடி மனிதர்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகின்றனர். சிலருக்கு இறைவன் மலைகளின் உச்சியில் இருப்பார் எனும் நம்பிக்கை. எனவே மலைகளை நோக்கிஅவர்கள் நடக்கிறார்கள். சிலருக்கு ஆண்டவன் சில சிற்பங்களின் உள்ளே சிக்கிக் கிடக்கிறானோ எனும் சந்தேகம். எனவே அவர்கள் அத்தகைய சிற்பங்கள், சிலைகள் இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டேஇருக்கிறார்கள். சிலருக்கு அவன் நதிகளில் கலந்திருப்பதாய் நம்பிக்கை. அவர்கள் புனித நதிகளை நோக்கி பயணங்கள் செல்கின்றனர்.சிலருக்கு அவன...
More