எம்.ஜி.ஆரும் அம்மா பாசமும்

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரது ரசிகர்களும், மக்களும், தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை. அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்கள். "பிறந்த நாள் தான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய மலர்ச்சியைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம...
More