கிடாரி ஒரு தாமதமான‌ விமர்சனம்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப் பூ பூக்கும் என்று சொல்வார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் திரைத்துறையில் உதவி இயக்குனர், நிர்வாகத் தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றிய பிரசாத் முருகேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சுமார் இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக ஒரு பேட்டியில் அவர் சொன்ன ஞாபகம். இருக்கட்டும் படத்துக்கு வருவோம். கொம்பையா பாண்டியன் எனும் சாத்தூர் பகுதி கட்டப்பஞ்சாயத்து கில்லாடி குத்தப்படுகிறார். "என்னது ஆணிவேரையே சாச்சுடாய...
More