கவிதை : புடிக்குமா ? புடிக்காதா ?

பிடிக்காதது போல் நடித்து பிடித்திருக்கிறதென்றால் சம்மதமே. பிடித்தது போல் நடித்து பிறிதொரு நாளில் பிடிக்காது என்று சொல்லி விட்டுப் போவதை விட எனினும் உன் மௌனத்துக்கும் சத்தத்துக்கும் இடையேயான முனகல்களின் முகவரியில் மிதப்பது சம்மதமா சம்மட்டியா என தெரியாத அவஸ்தை நீள்கிறது. பரவாயில்லை பிடித்தது போல் நடி. பிறிதொருநாளில் பிடிக்காதென்று சொன்னாலும் பரவாயில்லை. ஒருவேளை பிடிக்காதது போல் நடித்து உண்மையில் பிடிக்காமலேயே போய்விடுவதை விட.
More