என் செய்வேன் பிரியமே

உன் நினைவுகள் துரத்த அறைக்குள் மூடி தாளிட்டுக் கொண்டேன். சுவர்களெங்கும் அறையப்பட்டிருந்த உன் சிரிப்புகள் சிதறி விழுகின்றன. இருக்கைகளில் அமர்ந்திருக்கும் உன் சொற்கள் சரிகின்றன. போர்வை மூடி படுக்கையில் கவிழ்கையில் கீழிருந்து முளைக்கின்றன உன் தந்த விரல்கள். இமைத் திரைகளை இறக்கினால் விழிகளுக்குள் உளிகளாய் உன் ஸ்பரிசங்கள் மிதக்கின்றன. என் அவஸ்தைகளின் அங்குலமும் அறியாத நீ அடக்குதலின் அங்குசத்தை உதடுகளில் தளும்பத் தளும்ப நிரப்பி வைத்திருக்கிறாய். மீண்டும் மீ...
More

சார்பு

நன்றாக இருக்கிறது என்று நிறையவே சாப்பிட்டாய் வாங்கிய சந்தையைச் சொல்லும் வரை. கூந்தலில் சூடிக் கொள்ள தயக்கம் கொள்ளவேயில்லை செடியின் தாய்வீட்டைச் சொல்லும் வரை. இப்போது எல்லாவற்றையும் நிராகரிக்கிறாய். சுவையும் மணமும் உனக்குப் பிடித்தே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாய் மறுக்கிறாய். யார் எழுதியதானாலும் கடைசியில் கைழுத்திடுவது யாரென்பதே முக்கியமுனக்கு. சிரிப்பு தான் வருகிறது சிப்பி பிடிக்காது என்பதற்காய் முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்.
More

அடையாளங்கள்

உன்னைச் சந்தித்தபோது மெல்லப் புன்னகைத்தேன் உற்சாகக் கண்களோடு உற்று நோக்கினேன். நீயோ நான் புறக்கணித்ததாய்ப் புலம்பியிருக்கிறாய். காதுவரைக்கும் உதடுகள் இழுத்துப் பிடிக்கவில்லை தான், சத்தம் எறிந்து உன்னைச் சந்திக்கவில்லை தான், தெரிந்திருக்கவில்லை எனக்கு. அடையாளங்களே அவசியமென்று தெரிந்திருக்கவில்லை எனக்கு. மெல்லிய புன்னகையில், கண்களில் மிதந்த மனசில், கண்டு கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். இன்னொரு முறை வா. ம‌ன‌தை வாசிக்க‌ ம‌ன‌ம‌ற்ற‌ உன‌க்காய், முகத்தை ...
More

உன்னைப் பிரிந்தபின்

  உன்னைப் பிரிந்தபின் என் வாழ்க்கை வயலில் விளைச்சலே இல்லை, என் ஆனந்தத் தோட்டத்தின் திராட்சைச் செடிகள் வைக்கோல்களாய் உருமாறிவிட்டன. என் கனவுகளின் கதவிடுக்கில் இன்னும் உன் குரலே கசிகிறது நாம் செலவிட்ட பொழுதுகளின் விழுதுகளில் தான் ஊசலாடுகிறது எனது இயக்கமும் உயிரின் மயக்கமும். என்றெல்லாம் சொல்வாய் என நம்பிக் கொண்டிருந்தேன். உன் பிரிவின் கண்ணீர் துளியைக் கையில் ஏந்தியபடி. உற்சாக அரட்டையும், பரவச விளையாட்டுமாய் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருக்கிறாய் மழ...
More

ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல…

  ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல தேடிக் கொண்டிருக்கிறேன் கவிதை வரிகளை, அது யாராலோ களவாடப்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே வெளியேறிச் சென்றிருக்கலாம். முள் செடிகளிடையே முடங்கியிருக்கலாம். பள்ளத்தில் விழுந்து காயமாகியிருக்கலாம். அல்லது வெள்ளத்தில் விழுந்து மாயமாகியிருக்கலாம். எனினும் தேடல் தொடர்கிறது. கட்டப்படாத வார்த்தைக்குக் கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது. தொலைந்த ஆட்டின் வரவுக்காய் மலையடிவாரத்திலேயே காத்திருக்கின்றன மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளு...
More

காதலியுங்கள்

காதலியுங்கள் பாதங்களுக்குக் கீழ் ஓர் பூந்தோட்டம் தொடர்ந்து வரும். ஆழ்மனதில் தினமும் அகழ்வாராய்ச்சி நடக்கும் நீர்த்துளியிலிருந்தும் மேகத்தைப் பிரித்தெடுக்கும் மந்திரம் புலப்படும் வார்த்தைகள் வலுக்கட்டாயமாய் வெள்ளையடிக்கப்படும் விரல்களின் நுனிகளிலும் சிறகுகள் முளைக்கும் சுவாசிக்க மறந்து நாசிகள் நங்கூரமிடும் இமைகளை மறந்து விழிகள் விரிந்திருக்கும் நயாகராவின் நீர்ச்சரிவும் நிசப்த மண்டபமாகும் உயிருக்குள் ஓர் உருக்காலை உற்பத்தியாகும் மனசுக்குள் நிதமும் ...
More

கிராமமும், நகரமும்

எப்போதேனும் சண்டை போடும் நகரத்துத் தம்பதியருக்கு விவாகரத்து விருப்பமாயிருக்கிறது. எப்போதுமே சண்டை போரும் கிராமத்துக் குடும்பத்துக்கு சேர்ந்து வாழ்தலே சந்தோசமாய் இருக்கிறது
More

மழலை இனிமை

என் கார் கண்ணாடியில் கிறுக்கி விட்டுச் செல்லும் விரல்களை எரிச்சலில் திட்டிக் கொண்டிருந்தேன் என் மகளின் அழகிய விரல்கள் வரையத் துவங்கும் வரை
More

பொதுவுடமை

கிடைப்பதைக் கரைந்தழைத்து பகிர்ந்தளித்து உண்ணும் காகம் எரியும் வீட்டிலும் உருவும் நிலை பார்க்கும் மனிதன். பார்ப்பதை ஊர்ந்து கொண்டே ஊருக்குரைத்து உண்ணும் எறும்பு சுனாமிப் பிணங்களிலும் சங்கிலி பறிக்கும் மனிதன். சுயநலச் சுருக்குப் பைகள் இடையில் கட்டிக் கொள்ளாமல் விலங்குகள். சுருக்குப் பைகளுக்கு இடையே கூடு கட்டிக் குடியிருக்கும் மனிதன் சுருங்கக் கூறின், ஐந்தறிவுகளுக்கு எல்லாமே பொதுவுடமை ஆறறிவுகளுக்கு பொதுவுடமையும் தனியுடமை
More

பார்வை

பார்வை திருமணம் நிகழ்ந்தேறியது. நண்பர்கள் சொன்னார்கள் பந்திச் சாப்பாடு பிரமாதம், நண்பிகள் சொன்னார்கள் பெண்ணின் நகைகள் பிரமாதம் வந்தவர்கள் சொன்னார்கள் வளைகுடாக் கடல்போல அலங்காரம் பிரமாதம், சென்றவர்கள் சொன்னார்கள் விசால மண்டபம் வசதிகள் பிரமாதம். இருக்கை துடைத்து எழுந்தவர்கள் சொன்னார்கள் கூட்டம் பிரமாதம். பிரமாதங்களின் பிடியில் முக்கியமற்றுப் போன முக்கியங்களாக பூச்செண்டுடன் புன்னகைத்தனர் மணமக்கள்
More