கதை எழுதும் நேரம்

1 முடியாது என்றால் அதன் அர்த்தம் முடியும் என்று என்றுமே முடிந்ததில்லை... நிமிராமல் எழில் சொன்ன பதில், திமிரால் சொன்னதாய் தோன்றியது தந்தைக்கு. மறுப்புக்குக் காரணம் வெறுப்பா ? மனசுக்குள் மறைந்திருக்கும் ஏதேனும் நெருப்பா ? உனக்கு மனைவியாகும் தகுதி அவளுக்கு இல்லையா ? அவளை உனக்கு மனைவியாக்கும் தகுதி எனக்குத் தான் இல்லையா ? தந்தையின் கேள்விகள் எழிலை எழுந்திருக்க வைத்தன. திருமணம் வேண்டாம் என்றது என் தனிப்பட்ட கருத்து. நெருப்புக்குள் இருந்து கொண்டு என்னால் பட்ட...
More

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன்    இது ஒரு அக்மார்க் உண்மைக் கவிதை   காதலுக்கு முன்னுரை தேவையில்லை . சில கதைகள் நிஜம் போன்ற தோற்றமளிக்கும், சில நிஜங்கள் கதை போன்ற தோற்றமளிக்கும்.இது ஒரு நிஜக் காதலின் கவிதை வடிவம். என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை அது நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே கவிதையாய் எழுதி அவனுக்குஅளித்துக் கொண்டிருந்தேன். அந்தக் காதலில் தான் எத்தனை சுவாரஸ்யமான திருப்பங்கள்!. விருப்பங்களின் விளை நிலத்தில் களைகளா, பயிர்களா என்று கணிக்க முடியாமல் தினம் தினம் முளைத்...
More

என்ன செய்யப் போகிறாய்

நம்ப முடியாத ... என்று சொல்வார்களே ! அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு இது. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது !    1. கீழே தூரத்தில் மேகங்கள் வானத் தடாகத்தின் தலை கீழ் தாமரைகளாய் மிதந்தன. மேலும் கீழும் அசைவதற்கு இசையாத மேக வீரர்களின் அணிவகுப்புக்கிடையே சத்தத்தைத் துரத்தியபடி நின்ற நிலையிலேயே ஓடிக் கொண்டிருந்தது அந்த விமானம். அதிகாலைச் சூரியன் மேகம் துளைத்து மெலெழும்பும் காட்சியை சன்னலோரம் அமர்ந்து ரசித்துச் சிலிர்த்தாள் மலர்விழி. ...
More