காலமாற்றம்

தாள லயத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்த காலத்திலும், காற்றின் முதுகெலும்பாய் கழுத்தை நீட்டும் சாய்ந்த தென்னையில் ஏறி குளத்தில் குதித்து நீச்சலடித்த காலத்திலும், உச்சிக் கொம்பு மாங்காயை எச்சில் ஒழுக குறிபார்த்து கல்வீசிக் கைப்பற்றிய காலங்களிலும் வரப்புக்கும் நிலப் பரப்புக்கும் ஓடி ஓடி பொழுது போக்கிய பொழுதுகளிலும் தெரிந்திருக்கவில்லை, இப்போது தொப்பையைக் குறைக்க மூடிய அறையில் மூன்று மணி நேரம் மூச்சு முட்ட இயந்திரத்தில் ஓடும்போது தான் தெரிகிறது அன்று வாழ்க்கையே...
More

மழையவதாரம்

சாலை நெரிசலில் நனைந்து, சேறு வீசிய வாகனத்தைச் சாபமிட்டு, சாலை நீரில் அசுத்தமாகி, 'மழையும் மண்ணாங்கட்டியும்' என எரிச்சல்பட்டு, ஒரு வழியாய் வீடு சேர்ந்து தலை துவட்டி உடை மாற்றி... தேனீரும் கையுமாய் சன்னலோரத்தில் நிற்கையில் அழகாய் தெரிந்தது மழை.
More

மரித்து மீண்டவர்கள்

மரித்து மீண்டவர்களின் வாக்குமூலங்கள் வியப்பூட்டுகின்றன. சிலர் வெளிச்சச் சுரங்கத்துள் வழுக்கிச் சென்றார்களாம். சிலர் வானவில்லுக்கு மேலே பயணித்து மேகத்தின் உள்ளே சுவர்கத்தில் அமர்ந்தார்களாம். சிலர் இயேசுவை நேரில் கண்டு நலம் விசாரித்தும், சிலர் கைலாயத்தில் சிவனோடு கை குலுக்கியும், சிலர் ஆனந்தப் பூந்தோட்டத்தில் நர்த்தனம் ஆடியும் திரும்பி வந்தார்களாம். ஆனந்தக் கதைகள் அளப்பவர்கள் மீண்டும் மரித்துப் போக மறுத்து விடுவது தான் வியப்பளிக்கிறது. -  
More

பந்தல்கள்

  பேதங்கள் இல்லாமல் கட்டப்படுகின்றன பந்தல்கள் திருமண வீட்டின் கெட்டி மேளச் சத்தங்களில் அட்சதை தூவும் பந்தல்கள், தங்கள் அடுத்த பயணமாக சாவு வீடுகளின் விசும்பல்களை விழுங்குகின்றன. பூப்புனித நீராட்டு விழாக்கள் முடிந்த கையோடு பாராட்டு விழாக்களுக்குப் பயணப்படுகின்றன. அரசியல் கூட்டங்களில் காது பொத்திக் கிடப்பவை மறு நாள் சாதிக் கூச்சல்களுக்குக் கூரையாகிக் கொள்கின்றன. பந்தல்களுக்குப் பேதம் இல்லை. துயரங்களையும், ஆனந்தங்களையும் சுமந்து சுமந்து மறு பேச்சு பேசாமல் அ...
More

விட்டு விடுதலையாகி

கிராமத்து வீடு மாறிப்போய் விட்டது. முன்பு தொழுவம் இருந்த இடத்தில் தம்பி வளர்க்கிறான் லவ் பேர்ட்ஸ். முன்பு கோழி வளர்ந்த இடத்தில் அவனுடைய யமஹா நிற்கிறது. ஊஞ்சல் ஆடும் புளிய மரத்தைக் காணவில்லை. வரிசை வரிசையாய் ரப்பர் மரங்கள். முற்றத்தில் வந்திருக்கிறது ஒரு மீன் தொட்டி. ஆடு, மாடு, கோழி என்றிருந்த வீடு லவ்பேர்ட்ஸ், நிற மீன்கள் என நிறம் மாறியிருக்கிறது. சிக்னல் கிடைக்கையில் சிணுங்குகிறது அவன் செல்பேசி. ஃ  
More

மேன்ஷன்

எல்லா மேன்ஷன்களிலும் காணக்கிடைக்கிறது. கட்டிலுக்கு அடியில் காலி பீர் பாட்டில்கள், ஆஷ்டிரே-வாகிப்போன சிகரெட் கவர்கள், மூலையில் பதுங்கிக் கிடக்கும் பீடித் துண்டுகள், இவைகளோடு சேர்ந்து வேலையில்லை என்று வரப்பெற்ற நிராகரிப்புக் கடிதங்களும், எங்கிருந்தோ வந்திருக்கும் நலம் விசாரிப்பு லெட்டர்களும் ஃ
More

பழைய புகைப்படங்கள்

பஞ்சத்தில் அடிபட்ட பல்லிபோல என்று விமர்சிக்கப்பட்ட என்னுடைய பழைய புகைப்படங்கள். திருவிழாப் பயணத்தில் சிறுநீர் கழிக்கையில் யாரோ எடுத்த சிறுவயதுப் புகைப்படம். தலையில் ஆப்பிரிக்க காடுகளை வளர்த்துத் திரிந்த கல்லூரிப் புகைப்படங்கள். எலும்பும் தோலுமாய் பரிசோதனைக்கூட எலும்புக்கூடு கணக்கான பள்ளிக்கூட புகைப்படங்கள், எத்தனையோ கிண்டல்களைச் சுமந்தாலும் எல்லாம் பத்திரமாய் இருக்கின்றன என்னிடம். கடந்து வந்த பாதைகள் தரும் சுகம் நிகழ்கால சோகங்களை தரையிறக்க உதவுகின்றன எப்படியே...
More

Poem : மௌனத்தின் வசீகரம்

உறக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலையின் புனிதமாய் இருக்கிறது பூக்களில் உறங்கும் மெளனம். இதழ்களின் இடுக்கில் இரவில் இளைப்பாறிய இருள் புறப்படுகையில் பரிசளித்துச் சென்ற பனித்துளியில் கலையாமலும், மகரந்தச் சலங்கை கட்டி பூச்சிகள் அரங்கேற்றம் நடத்தும் சிறகு நாட்டியத்தில் சிதையாமலும், காலைத் தென்றல் குளிர் சுருட்டி காது குடைகையில் கலையாமலும் இன்னும் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கிடக்கிறது மெளனம் ஓர் சத்தத்தின் முத்தத்தால் எழுப்பி விடும் வேகத்தில் தடதடத்து தோற்கிறது தொலை தூர...
More

Christianity : அழைப்பு

செல் ! ஆபிரகாமுக்கு வந்தது அழைப்பு ! ஊர் எனும் ஊரை விட்டார். குவித்து வைத்த‌ செல்வத்தையெல்லாம் குதிகாலால் ஒதுக்கினார். ஏன் ? எதற்கு ? எப்படி ? ஆபிரகாம் கேட்கவில்லை. மாலுமியாய் கடவுள் வந்தால் வரைபடங்கள் தேவையில்லை. ஒற்றை விதையிலிருந்து மானுடத்தை மலர வைத்தார் இறைவன். மோசே ! தார்மீகக் கோபத்தால் எகிப்தியனை எதிர்த்தார். கொலை எனும் உலையில் சிக்கி அச்சத்தை அணிந்தார். உயிரை சுருக்குப் பையில் சுருட்டி பயத்தின் பதுங்கு குழிகளில் பதுங்கியே வாழ்ந்தார். செருப்பைக் க...
More

காதலின் சுற்றுப்பாதை

பல்லவி. பூவைத் தீண்டும் தென்றல் போலே என்னைத் தீண்டினாய் - நான் தீயைத் தீண்டும் காலம் வேண்டும் என்றா வேண்டினாய் ? காதல் என்னும் சுவாசக் காற்றை நீதான் ஊற்றினாய் - பின் மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை ஏனோ மாற்றினாய் சரணம் 1 முத்தம் மட்டும் கன்னம் தொட்டால் காதல் வாழுமா - நான் நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன் போதல் நியாயமா ? சித்தம் கொண்டு என்னைத் தீண்டு பாவம் நானம்மா - ஓர் யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல் சாபம் ஏனம்மா ? சரணம் 2 வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில் உன்னைக் க...
More