நா.முத்துக்குமார் : அதிர்ச்சியும், நினைவலைகளும்

அதிர்ச்சி, பேரதிர்ச்சி. நம்பவே முடியவில்லை. நண்பர் நா.முத்துகுமார் இப்போது நம்முடன் இல்லை. அதிர்ச்சியிலிருந்து மனம் விடுபட மறுக்கிறது. எனது அலுவலகத் தோழனின், பள்ளித் தோழன் அவர். ஆயினும் எங்களிடையே இருந்த நட்புக்குக் காரணம் அவரது எழுத்துகளும், அதன் வசீகரமும் தான். 2001ம் ஆண்டு. நான் அமெரிக்காவில் பணிபுரிந்து கொண்டிருந்த காலம். எனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிடவேண்டுமென சிந்தித்தபோது மனதில் வந்த முதல் பெயர் நா.முத்துகுமார் தான். அவரிடம் ஒரு முன்னுரை வாங்கி நூலை வெளியிடவேண்டும் என்பது மட்...
More