சிறுகதை : கவிதைத் தொகுப்பு

சார். இதெல்லாம் என்னோட கவிதைகள் சார். இதை ஒரு புத்தகமா போடணும்ன்னு தான் ஒவ்வொரு பதிப்பகமா ஏறி இறங்கிட்டிருக்கேன். யாருமே முன் வர மாட்டேங்கறாங்க. நீங்க தான் மனசு வெச்சு இதை ஒரு புத்தகமா போடணும். தன் கையிலிருந்த ஒரு கட்டு கவிதைகளை பதிப்பாசிரியர் பாலராஜன் முன்னால் வைத்தான் மூர்த்தி. 'மூர்த்தி. கேள்விப்படாத பேரா இருக்கே ? ஏதாச்சும் புனைப்பெயர்ல கவிதைகள் எழுதறீங்களா ?' பாலராஜன் கேட்டார் இல்லை. என்னோட சொந்தப் பெயர்ல தான் எழுதறேன். பத்திரிகைகள்ல அதிகமா பிரசுரம் ஆனதில்லை. 'ம்.. அதான் புதுப...
More

பழைய காதலி !

  போச்சுடா. நேத்தும் நைட் ஃபுல்லா தூங்காம இருந்து சுடர் கூட கடலை போட்டியா ? சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான். வாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். 'ஆமா மச்சி. அவள மறக்க முடியல. அவளும...
More