புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன. பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது ! ...
More

கண்ணோடு காண்பதெல்லாம்…

    சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது. ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் ப...
More

3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது ?

இது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3டி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது? திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வ...
More

சென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.

சென்சார் என்றதும் ஏதோ புதுப் படத்துக்கான அனுமதி வாங்கும் சமாச்சாரம் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பார்க்கப் போவது தொழில்நுட்பத்தில் இன்று நீக்கமற நிறைந்திருக்கும் சென்சார் கருவிகள். இதை தமிழில் உணரிகள் என்று அழைக்கலாம். பெரிய அலுவலகங்களில் நீங்கள் ஒரு அறைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டென மின் விளக்குகள் எரியும். கொஞ்ச நேரம் ஆட்கள் அறையில் இல்லாவிட்டால் விளக்குகள் அணையும், இவை சென்சார்களின் கைங்கர்யமே. நீங்கள் ஒரு கதவின் முன்னால் செல்லும் போது தானாகவே கதவுகள் திறப்பதும...
More

வை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.

திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார். வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப்  பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய...
More

ஏ.டி.எம் : தெரியும்.. ஆனா, தெரியாது

எப்படா பேங்க் திறக்கும் பணம் எடுக்கலாம் என காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. பணம் எடுப்பதற்காக அரை நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டு வங்கியில் கியூ கட்டி நின்றதெல்லாம் நம் அப்பாக்களின் காலம். இப்போதைய ஏ.டி.எம் வசதி அதையெல்லாம் நிறுத்தி விட்டது என்றே சொல்லலாம். எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி ஏ.டி.எம் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பரிமாற்றம், அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்காக மட்டுமே வங்கிப் படி ஏறினால் போதும் என்பதே இன்றைய நிலமை. பெரு...
More

ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது

  தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை ! இரவு நேரம் வேறு ! என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் ! இப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ் போணும்பா” என விலாசத்தைக் கொடுத்தால் போதும். கிளம்பு, இங்கே லெப்ஃட் எடு, நேரா போ, அடுத்த வளைவில் ர...
More

அப்பாவின் ரகசியம்

வசந்தியால் நம்பவே முடியவில்லை. ரொம்ப சிலிர்ப்பாய் இருந்தது. இத்தனை நாள் தனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சே என்று முதன் முதலாய் வருத்தப்பட்டாள். அம்மா ஏன் இந்த விஷயத்தை என்கிட்டே மறைச்சாங்க ? என்ற கேள்வியே அவளுக்குள் காற்றாடி போல ராட்சசத் தனமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது. மாலையில் நடந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் அவளுக்குள் சினிமா போல ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி விரிவடைந்து கொண்டிருந்தது. அந்தப் புள்ளி இந்த வாக்கியம் தான். "வசந்தி. வேலாயுதன் மாமா மதுரையில இருந்து போன் பண்ணினாங்க, நாளைக்க...
More

செல்ஃபி !

1. இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள் செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌. பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்...
More