கவிதை : மருதாணிக் கனவுகள்

அத்தனை குதிரைகளும் விடுப்பில் இருந்தாலும் காலத் தேர் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. என் வீட்டின் மெழுகிய திண்ணை சிமின்ட் பூசப்பட்டு, இப்போது கம்பி வேலைப்பாடுகளுக்குள் கைதியாய், பின்பக்கம் இருந்த சாம்பல் கூடும், சருகுக் குழியும் ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய், ஓட்டை வெறித்துப் பார்க்கும் என் படுக்கையறைக் கட்டில் இப்போது பாதி வழியில் காங்கிரீட் தட்டினால் தடுத்து நிறுத்தப்படுகிறது, அந்த நடு அறையின் பலகை அலமாரி தந்த வேப்பெண்ணை வாசம் இப்போதெல்லாம் வீசவில்லை விட...
More

கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

  மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல்  இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் உறங்கியே கிடக்கிற...
More

கவிதை : வாடகை அலைகள்

உன் வாழ்க்கை உனக்கான விருது, யாரோ தைத்த பொருந்தாத சட்டைக்குள் நீ நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன ? நிலம் மாறி நட்டாலும் மல்லி வாசம் மாறி வீசுமா ? தோட்டக் காரன் நட்டாலும் வீட்டுக் காரன் வைத்தாலும் ரோஜா பாகுபாடின்றி பூத்திடாதா ? உன்னை நீயே வனைந்து முடி, உன்னை விட அதிகமாய் உன்னை நேசிப்பவன் யார் ? உன்னை விட அழகாய் உன் இயல்புகள் அறிந்தவன் யார் ? உள்ளுக்குள் முத்திருக்கும் உண்மையை சிப்பியை விட அருகில் சீக்கிரமே உணர்வது யார் ? உன் வாழ்க்கையின் அடித்தளத்தை நீயே அ...
More

கவிதை : கூடா நட்பு

உன் ஊசிக்குத்தல்கள் இணைக்க என்றே நினைத்திருந்தேன் நீ நூல் கோர்க்காமல் குத்திக் கொண்டிருந்த சேதி தெரியாமல். நீயோ இன்னும் குத்திய இடத்திலேயே குத்திக் கொண்டிருக்கிறாய் என் கிழிசல் ஒட்டுப் போடப்படவில்லை. காயங்களின் காலங்கள் நீண்டபோது என் உறக்கம் கலைத்து எட்டிப் பார்த்தேன், நூல் இல்லா நிலையும் அறிந்தேன். காரணமற்ற காரணங்களுக்காய் என் முதுகைக் காட்டிக் கொண்டிருந்த அறியாமையால் இன்னும் கொஞ்சம் கூடிப் போனது வலி. நூல் கோர்த்துக் கொள் இல்லையேல் கிழிசலோடு எனை வாழவிட...
More

கவிதை : நிலாச் சாயம்

 இன்னும் வெள்ளை காயாத நிலாச் சாயம் என் மொட்டை மாடி முழுதும். நிலவைத் தின்னும் வேகத்துடன், வானில் வெள்ளை மேகங்கள் வறண்ட நாக்குகளோடு அலைகின்றன. யாரோ இறுகக்கடித்ததால் தான் அந்த நிலவில் கன்னத்தில் கருப்பு பதிந்திருப்பதாய் இறந்து போன ஏதேனும் ஓர் இதிகாசம் எழுதியிருக்கக் கூடும். எதையும் காதில் வாங்காமல், எத்தனை முறை போர்த்தி முடித்தாலும் முரண்டு பிடித்து, புரண்டு படுத்து மேகப் போர்வைக்கு வெளியே நழுவி விழுகிறது அந்த நிலாக் குழந்தை. சூரியனின் சிவப்பு ஒளியை உறிஞ்சி...
More

கவிதை : ஒரு துளித் தனிமை

  நேசமாய்த் தான் இருந்தேன். ஒவ்வோர் இதழ்களிலும் மெல்லியத் தழுவல், செடியின் கால்களுக்குக் காயம் தராத தண்ணீர் பாசனம். ஆனாலும் பூக்கள் புகார் செய்ததில் என் தோட்டக்காரன் வேலை தொலைந்து போய் விட்டது. எந்தச் சிறகையும் சிக்கெடுக்கும் நேரத்திலும் சிதைத்ததில்லை. எந்த அலகிலும் முத்தம் இட மறந்ததில்லை. இருந்தாலும் அத்தனை பறவைகளும் என்னை விட்டுப் பறந்து எங்கோ போய்விட்டன. நீந்தி வந்து இரைகொத்தும் என் நீச்சல் குள மீன்கள் கூட சத்தமின்றித் தோணியேறி அடுத்த ஆற்றுக்கு அவசரமாய் ...
More

கவிதை : எனக்கும், உனக்கும்….

வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம் ஆனால் தோல்விகள் மட்டுமே உனக்கு உளிகள் வழங்கும் என்பதை உணர்ந்து கொள். ஃ மழை நதி விதை விழுவதால் எழுபவை இவை. நீ மட்டும் ஏன் விழுந்த இடத்தில் உனக்கு நீயே கல்லறை கட்டுகிறாய். ஃ உன் சுவடுகள் சிறை பிடிக்கப்படலாம் உன் பாதைகள் திருடப்படலாம் பயப்படாதே பாதங்களைப் பாதுகாத்துக் கொள். ஃ நீ வெற்றி பெற்றதாய் நினைக்கும் பல இடங்களில் தோல்வி தான் அடைந்திருப்பாய் நீ தோற்றுப் போனதாய் நினைக்கும் பல தருணங்களில் வெற்றி தான் பெற்றிரு...
More