இரால் மீன் : ஆண்கள் ஸ்பெஷல் !

    ஷ்ரிம்ப், ப்ரான்ஸ், இரால்  என்று அழைக்கப்படுவதெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். கடல் உணவுப் பிரியர்களில் ஷிரிம்ப் சாப்பிடாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களின் ஃபேவரிட் உணவு ஷிரிம்ப் என்பதிலும் சந்தேகம் இல்லை. இரால் வகைகள் எக்கச் சக்கம் உண்டு. அளவிலும், நிறத்திலும் அவை பல விதம். என்ன நிறத்தில் இருந்தாலும் அவற்றை வேக வைத்தபின் பெரும்பாலும் ஒரே நிறத்தில் வந்து விடும். ஒருவித ஆரஞ்ச் நிறம். மற்ற கடல் மீன்களைப் போலவே ஷிரிம்ப் பல்வே...
More

மீன் முட்டை சாப்பிடலாமா ?

  முட்டை சாப்பிடுவீங்களா ? என்று உங்களிடம் கேட்டால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது என்ன ? வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சுடச் சுட பொரித்துத் தரும் ஒரு ஆம்லெட். லைட்டாக பெப்பர் போட்டு சுடச்சுட வாயில் தள்ளும் ஒரு ஆஃப் பாயில், ஒரு அவித்த முட்டை, அல்லது குறைந்த பட்சம் கடையில் அடுக்கி வைத்திருக்கும் முட்டைகள். எப்படியோ ஒருவகையில் உங்கள் கண்னுக்கு முன் நிழலாடுவது கோழி முட்டை தான் இல்லையா ? நாம் இங்கே அலசப் போவது மீன் முட்டையைப் பற்றி ! மீன் சாப்பிடும் பலருக்கும் மீன் முட்டை பற்றி அதி...
More

கருவாடு சாப்பிடலாமா ?

கருட புராணம் தெரியுமோ இல்லையோ, மீன் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த புராணம் கருவாடு புராணம். கிராமத்து நினைவுகளை அசைபோடுகையில் எனது நாவில் தவறாமல் கருவாட்டுச் சுவை வந்து போவதுண்டு. விறகு அடுப்பில் பாட்டி சாம்பலுக்குள் புதைத்துவைத்து சுட்டுத் தரும் கருவாடும், அதை ஒருகையில் பிடித்துக் கொண்டு பழைய கஞ்சி குடித்ததும், டோமினோஸ் பிஸ்ஸாக்களால் சமரசம் செய்து கொள்ள முடியாத சுவை. சரி, எனது புராணம் கிடக்கட்டும், கருவாட்டுக்கு வருகிறேன். கருவாடு பற்றித் தெரியாத நபர்கள் இருந்தால் அவர்கள் அடுத்த இரண்டு ...
More

மீன் சில சுவாரஸ்யமான குறிப்புகள்

  உலகின் பழமையான இனங்களில் ஒன்று தான் மீன் இனம். சுமார் 450 மில்லியன் வருஷங்களுக்கு முன்பே இது தோன்றிவிட்டதாம் ! அதாவது நம்ம “ஜுராசிக் பார்க்” டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே நீந்தத் தொடங்கியவை தான் மீன் இனம். உலகில் 25,000 மேற்பட்ட வகையான மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டமல் குறைந்த பட்சம் 15,000 மீன் வகைகளாவது இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இது பல மடங்காகவும் எகிறலாம் ! உலகிலுள்ள மீன்களில் 40 சதவீதம் மீன்களும் நல்ல தண்ணீரில் வாழ்பவையாம். உலகிலுள்ள தண்ணீரில்...
More

TIPS : நல்ல‌ மீனா பாத்து வாங்கணுமா ?

  வெண்டைக்காயை ஒடிச்சு பாத்து வாங்கணும், முருங்கையை முறுக்கிப் பாத்து வாங்கணும் என சொல்லும் பலருக்கும் மீனை எப்படி வாங்குவது என்பதில் சந்தேகமும் சிக்கலும் உண்டு. நல்ல மீன் என நினைத்து வாங்கிக் கொண்டு வரும் மீன் வீட்டில் வந்து சமைக்கும் போது கெட்டுப் போயிருக்கும் விஷயம் தெரியும். ஒரு நாள் நல்லா இருப்பது போலத் தெரியும் மறுநாள் கெட்டுப் போனதாய் தெரியும். ஆனால் மீன் வாங்குவதில் எக்ஸ்பர்ட் ஆன மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப சிம்பிள் மேட்டர். தூரத்திலிரிந்தே பார்த்து சொல்லி விடுவார்கள். அவர்கள் ம...
More

மீன் சாப்பிடும் முன்னாடி…. Just a min.

மீன்களோட பயன்களைப் பற்றிப் படித்து பரபரப்பா மீன் கடைக்கு ஓடும் முன் இந்த ஒரு அத்தியாயத்தையும் கூட கையோடு படிச்சுட்டு போங்க. மீன் ரொம்ப நல்லது ! அதில் மாற்றுக் கருத்து இல்லை. இல்லையென்றால் இப்படி ஒரு புக் எழுத வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில மீன்களைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும் ! முக்கியமாக, சில வகை மீன்களில் மெர்க்குரி உண்டு. ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் எந்த வகை மீன்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளும், தாய்மை நிலையில் இருக்கும் பெண...
More

கணவாய் மீன் ( Squid) சாப்பிடலாமா ?

  மீன் வகையில் வந்தாலும் கணவாய் மீன் கொஞ்சம் ஸ்பெஷல் குணாதிசயங்கள் கொண்டது. சாதாரண மீன் சுவையிலிருந்து ரொம்பவே வேறுபடுவதால் கணவாய் மீனுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. உலகெங்கும் கணவாய் மீன் பல்வேறு வகைகளில் பரிமாறப்படுகிறது. மசாலா போட்டுச் சமைப்பது, பொரிப்பது, கிரிலில் வைத்து வேக வைப்பது என பல வகைகளில் இது உருவாக்கப்படுகிறது. சிலர் பாஸ்தா போன்ற உணவுகளில் கணவாய் மீனைச் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. அனீமியா எனப்படும் ரத்த சோகை நோய் அறிகுறை உடையவர்கள் ஓடிப் போய் கணவாயிடம் சரண்...
More

சிப்பி சாப்பிடுங்க ! அது ஆண்கள் ஸ்பெஷல் !

கடல் வாழ் உயிரினங்களில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பிடிப்பது சிப்பி. கடலிலும், ஆறுகளில், குளங்களிலும் சிப்பிகள் பல வகைகளில் வாழ்கின்றன. சிப்பியில் ஏகப்பட்ட நல்ல சத்துகள் நிரம்பியிருக்கின்றன. சிப்பியின் சுவை கொஞ்சம் வித்தியாசமானது. அதை ரசிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் தான். ஆனால் அதன் ருசியை உணர்ந்தவர்கள் அதை விட்டு விலகுவதேயில்லை. எந்த வயதினரும் சிப்பியை சாப்பிடலாம் என்பது முதலில் மனதில் எழுதப்பட வேண்டிய விஷயம். கடல் வாழ் உயிரினங்களுக்கே உரிய ஸ்பெஷலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இதில் அபரி...
More

நண்டு சாப்பிடுவது நல்லதா ?

கடல் மீன் பிரியர்களின் பிரியத்துக்குரிய பட்டியலில் இருக்கும் ஒரு உணவு நண்டு. ஆனால் அசைவம் சாப்பிடும் எல்லோருமே நண்டு சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. இறைச்சி வகைகளை ஒரு கை பார்க்கும் பலரும் நண்டை விட்டு வைப்பது உண்டு. ஆனால் நண்டுப் பிரியர்கள் நண்டை எங்கே கண்டாலும் விடுவதில்லை. அது ஒரு வகையான ருசி போதையைத் தந்து விடுகிறது. அப்படி நண்டை விரட்டி விரட்டிச் சாப்பிடும் நண்பர்கள் இந்த நிமிடத்திலிருந்து உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். காரணம் நண்டில் அத்தனை சத்து இருக்கிறது. ...
More

ஆஸ்த்மா இருக்கா, மீன் வாங்குங்க

ஆஸ்த்மா நோயைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆண்டுதோறும் சராசரியாக இரண்டரை இலட்சம் உயிர்களைப் பலிவாங்கக் கூடிய நோய் இது. சுமார் 30 கோடி பேர் உலகெங்கும் ஆஸ்த்மா நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது புள்ளி விவரக் கணக்கு ஒன்று ! ஆஸ்த்மா நோயாளிகள் மீன் தொடர்ந்து சாப்பிட்டால் ஆஸ்த்மாவை வெற்றி கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். அதற்கு ஒரு காரணம் வைட்டமின் டி. ஆஸ்த்மா அதிகம் இருக்கும் மக்களுக்கு உடலில் வைட்டமின் டி சத்து குறைவாக இருக்கும். அவர்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் உடலில...
More