பாரதி வாழ்த்து

எல்லா கவிதைப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கிறது ஒரு பாரதி வாழ்த்து ! சிலர் நீ இப்படிச் சொன்னது இப்படியாயிற்றே என்று புலம்ப, சிலர் நீ சொல்லாவிட்டால் சொல்லே இருந்திருக்காது என விளம்ப, இன்னும் சிலர் தப்புத் தப்பாய் புரிந்து கொண்டதற்கான தடையங்களோடு விளக்க, மிச்சமிருப்போர் பாரதியை விட அதிகமாய் யானையைப் பாடி, முடித்துக் கொள்கிறார்கள் பாரதி வாழ்த்தை. இவ்வாறாக என் தொகுப்பிலும் இடம்பெறக் கூடும் இந்த பாரதிப் பாடல்.
More

சன்னலுக்கு வெளியே கவிதைகள்

சன்னலோர ரயில் பயணம் ரம்மியமானது. தண்டவாளத்தில் நீச்சலடித்து முன்னேறும் ரயிலும், பின்னோக்கிப் பாயும் இயற்கையும், அருகிருக்கும் தண்டவாளத்தின் மேலமர்ந்து கூடவே ஓடிவரும் வெளிச்சமும், பொத்தாம் பொதுவாக கையாட்டிச் சிரிக்கும் குதூகலக் குழந்தைகளும், தூரத்துக் குளத்தில் வெட்கத்தை அலசிக் காயப்போடும் கிராமக் குயில்களும், ரயில்வே கேட்டில் பரபரப்புகளுடன் பார்த்திருக்கும் வாகனக் குரல்களும், வெளியே விரிந்திருக்கும் புத்தகம், யதார்த்தத் திரைப்படம்… என சன்னலோர ரயில் பயணம் ரம...
More

க‌விதையும், அழகும்

எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. பிரசவத்தின் வலியை சிரித்துக் கொண்டே சொல்வதும், சிரிக்கும் குழந்தையை அழுது கொண்டே அறிவிப்பதும் சாத்தியமில்லை. குருதிப் போரையும் கண்ணீர்ப் பூவையும் ஒற்றைச் சாடிக்குள் சொருகி வைக்கவும் முடிவதில்லை. பேனாவும் காகிதமும் விரலும் மாறுவதில்லை தான். வலிகளும் வரிகளும் மாறி மாறித் தானே வருகின்றன. எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. கவிதைகளாய் இருந்தால் போதும்.
More

கவிதை : வயதானவர்களின் வாழ்க்கை

தலைப்புச் செய்திகளை மட்டுமே அவசரமாய் மேய்ந்து வந்த கண்கள், வரி விளம்பரங்களையும் விடாமல் படிக்கும். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வருகையிலும் விரல்கள் ரிமோட் தேடாது. ஃபேஷன் சானலின் எண் மறந்து போகும் நியூஸ் சேனல் எண் நினைவில் நிற்கும். அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி, தூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும். இந்தக் கால இசை சத்தம் என்று சத்தமாய்ப் பேசும். இளமைக் கலாட்டாக்கள் தவறுகளே என்பது தெரியவரும் பேசும் போதெல்லாம் அறிவுரை முறைக்கும் த...
More

கவிதை : வறுமை நினைவுகள்

ஓரம் கிழிந்ததால் தலைகீழாய் கட்டப்பட்ட அப்பாவின் வேட்டியும், வியர்வைப் போராட்டத்தில் அக்குள் கிழிந்த பனியனும், தரைக்கும் காலுக்குமிடையே மில்லி மீட்டர் தடிமனில் களைத்துத் தொங்கிய கடைவீதிச் செருப்பும், நினைவுக்கு வருகின்றன கிரெடிட் கார்ட் கொடுத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு “லூயிபிலிப்” சட்டை வாங்குகையில்
More

கவிதை : காதலிப்போர் கவனத்துக்கு…

காதல் தோற்றுப் போனால் தாடி வளர்ப்பதை வழக்கமாக்காதீர், தாடி முளைக்கத் துவங்காத நண்பர்களும் காதலித்துக் கொண்டிருக்கக் கூடும். காதலி என்று நீங்கள் சொல்லிக் கொள்பவர் வேறு யாருடனோ காஃபி குடிப்பதைக் காண்கையில் சுடச் சுடக் கவிதை எழுதி அழுது விடாதீர்கள் அல்லது குறைந்த பட்சம் எழுதியதை யாருக்கும் காட்டாதீர்கள். காதல் ஒரு முறைதான் வருமென்று ஒவ்வொரு முறையும் சொல்லித் திரியாதீர்கள், உங்கள் காதலி ஏற்கனவே காதலித்திருக்கக் கூடும். உன் பெயரைத்தான் என் மழலைக்குப் போடுவேன் என அடம்...
More

இயலாதவையே இயல்பு

ஏதேனும் வழியிருக்குமா ? நம் மாலை நேரப் பேச்சுகளை இரவு வந்து இழுத்து மூடக் கூடாது நாம் கைகோர்த்துக் கடக்கையில் சாலையின் நீளம் முடியவே கூடாது. நாம் பார்த்துக் கொள்ளும் பொழுதுகள் பிரியவே கூடாது. உன் மீதான என் பைத்தியம் தெளியவே கூடாது. ஏதேனும் வழியிருக்கிறதா ? கேட்கிறேன். நடக்க இயலாததைச் சொல்லத் தானே நீ கவிதை எழுதுகிறாய். இதையும் எழுதிக் கொள் என கவிதையாய் சிரிக்கிறாய் ! இதுவும் முடியக் கூடாதே என எழுதிக் கொள்கிறேன் நான் !
More