காலேஜ் போறீங்களா ? இத படிங்க !

கல்லூரிக்குச் செல்கிறீர்களா ? கல்லூரிக் காலம் மகிழ்வுகளின் வேடந்தாங்கல். கவலைகளின் திவலைகளுமின்றி ஆனந்த மழையில் இளமை ஆர்ப்பரிக்கும் காலம். முதியவர்களுடைய ஞாபக அடுக்குகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் கல்லூரி காலக் களேபரங்களின் சுகமான ராகம் கேட்கக் கூடும். பள்ளிக்கூட மாணவர்களின் மனதில் கல்லூரிக் காலம் குறித்த கனவுகளின் வண்ணச் சாலை நீளமாகத் தெரியும். கல்லூரிக் காலம் வரங்களின் காலம். இந்தக் காலத்தில் என்ன விதைக்கிறோம் என்பதை வைத்தே எதிர்கால விளைச்சல் அமையும். நமது களஞ்சியம் தானியங்களுக்கானதா, ப...
More

வல்லினம், மெல்லினம், பாலினம்.

  இளம் வயது என்று சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு உற்சாகம் கரை புரள்கிறது. இளமை எதையும் சாதிக்கும் வயது. தொழில் நுட்பங்களின் பின்னணியில் பரபரப்பதும், வீரத்தின் முன்னணியில் பயணிப்பதும், சமூகத்தின் மையத்தில் இயங்குவதும் இளமையே ! திகைப்பூட்டும் வேகமும், வியப்பூட்டும் விவேகமும் கலந்த கலவை தான் இளமை. “பத்து இளைஞர்களை என்னிடம் தாருங்கள், உலகை மாற்றிக் காட்டுகிறேன்” எனும் விவேகானந்தரின் கூற்று நூறு முறையேனும் நமது காதுகளை எட்டியிருக்கும். முதுமைக்கும் இளைமைக்கும் ஒரே ஒரு வேறு பாடு தான். இள...
More

காதலின்றி அமையாது உலகு.

ஃ காதல் எனும் வார்த்தைக்கு இருக்கும் வசீகரம் வேறெந்த வார்த்தைக்கும் இல்லை. மதங்களின் மதில் சுவர்களோ, சாதிகளின் சதுப்பு நிலங்களோ, இனங்களின் தினவுகளோ, மொழிகளின் வாள்வீச்சுகளோ காதலை வெட்டி எறிய முடிவதில்லை. வெட்டி எறிய காதல் என்பது காய்கறியல்ல, அது காற்று ! காற்றை வெட்டித் துண்டுகளாக்கும் கத்தியை மானுடம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை ! உலகின் எந்த இலக்கியங்களும் தோன்றும் முன் தமிழில் காதல் தோன்றிவிட்டது. பண்டைய இலக்கியங்களில் காதல் ஏக்கங்களாலும், தீண்டல்களாலும், வீரத்தின் சாரல்களாலும் நனைந்து...
More