காலேஜ் போறீங்களா ? இத படிங்க !

கல்லூரிக்குச் செல்கிறீர்களா ? கல்லூரிக் காலம் மகிழ்வுகளின் வேடந்தாங்கல். கவலைகளின் திவலைகளுமின்றி ஆனந்த மழையில் இளமை ஆர்ப்பரிக்கும் காலம். முதியவர்களுடைய ஞாபக அடுக்குகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் கல்லூரி காலக் களேபரங்களின் சுகமான ராகம் கேட்கக் கூடும். பள்ளிக்கூட மாணவர்களின் மனதில் கல்லூரிக் காலம் குறித்த கனவுகளின் வண்ணச் சாலை நீளமாகத் தெரியும். கல்லூரிக் காலம் வரங்களின் காலம். இந்தக் காலத்தில் என்ன விதைக்கிறோம் என்பதை வைத்தே எதிர்கால விளைச்சல் அமையும். நமது களஞ்சியம் தானியங்களுக்கானதா, ப...
More