பயனிலிகள்

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா. அல்லா துணை நானே உலகின் ஒளி. வாகனங்களின் பின்புறம் வாசகங்கள். எந்த வாகனமும் நிற்கவில்லை சாலை கடக்கத் தவிக்கும் மனிதருக்காய்.
More

த‌மிழும், ம‌னைவியும்

விலகலில் வியாபித்துக் கிடக்கும் என் விழியோர வெற்றிடங்கள். மோகத்தின் கருகிப் போன தீக்குச்சிகள் திரி தாண்டி திரி தாண்டி பரவி எரியும் ஆத்மார்த்த ஸ்னேகத்தின் படிக்கட்டு வெளிச்சங்கள், கடந்த மாதங்களின் எரிச்சல் திட்டுகளெல்லாம் நித்திரைத் திண்ணைகளில் கூர்மையாகிக் கிடக்கும். கையசைத்து அனுப்பி வைத்த ரயில்வே நிலைய நினைவுகள், சுகப்பிரசவ பிரார்த்தனைகள் எல்லாம் அடர்ந்து பரவும் உள்ளுக்குள் எழுத முடியாத நாட்களில் விரல்களில் எழும் அழுகை மனசுக்குள். மனைவியாய் பார்க்கத் தோணுது த...
More

தமிழ் என் தந்தை

  பால்யத்தில் பிரம்பும் கையுமாய் பயமூட்டிய அப்பா, பள்ளி நாட்களின் பரிசுக் கைகளுக்கு முத்தமிட்டு, தேர்வு முடிவுகளில் சத்தமிட்டு, குழப்பிய அப்பா, கல்லூரி காலத்தில் கண்டித்தபோது தலைமுறை இடைவெளியென திட்டு வாங்கிய அப்பா, வேலை வாங்கிய சேதி அறிந்து ஊருக்குள் அதை நிமிர்ந்து சொல்லி கண் நிறைத்த அப்பா. ஒவ்வொரு காலத்திலும் புரியப் படாமல் அடுத்த படிகளில் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த என் அப்பா. அப்படியே, அகரம் ஆத்திச் சூடி திருக்குறள் இலக்கணம், கவிதை என அழைத...
More

தமிழ் என் தாய்

<a href="https://xavi.files.wordpress.com/2015/10/108220275.jpg"><img class="size-medium wp-image-2691" src="https://xavi.files.wordpress.com/2015/10/108220275.jpg?w=300" alt="Silhouette of mother kissing child on head" width="300" height="202" /></a> வளைகுடாக்கள் கால் நீட்டிப் படுத்திருக்கும். இந்திய வறுமை வயிறுகள் ஆண்டு வருமானத்தின் பாதிப் பணத்தை விசாவுக்கென ஏஜெண்டு தொப்பைகளில் தாரை வார்க்கும். அமெரிக்கச் சாலைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கொஞ்சம் பருக்கை வினியோ...
More

தமிழ் என் மழலை

மழலையே என் கால்நூற்றாண்டுக் கனவுகளின் மனித வடிவமே, உன்னை நான் எப்படிக் கொஞ்சுவேன் ? என் மனசின் பதுங்கு குழிகளில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துக் கிடக்கும் உன்னை சிக்கனம் இன்றி எப்படிக் கொஞ்சுவேன் ? நீ சுவர்க்கத்தின் விளக்கவுரை. உனை கர்ப்பத்தில் சுமந்தபோதே கர்ப்பனைகளைச் சுமந்தேன். உன் உதைகளை எல்லாம் கதைகளாய் எழுதிட தாய்மை முழுவதும் தவித்துக் கிடந்தேன். இயற்கையின் இருக்கைகளில் எங்கும் உனக்கான உவமைகள் உட்கார்ந்திருக்கவில்லையே. விலகிப் போனால் மூச்சுக்கு அணைபோட...
More

தமிழ் என் காதலி.

மனதைப் பிசையும் சீருடன் அசையும் நடைகள் உனதடி நயமும் உளதடி – அன்பே உனைநான் தமிழெனச் சொல்லவோ ? புரியும் புன்னகை புதிதாய் தோன்றுது, புரியா மெளனம் மரபாய் தெரியுது – கவிதையே உனைநான் தமிழெனக் கொள்ளவோ ? நகைப்பில் நவீனம் பார்வையில் படிமம் விளக்கத் தெரியா விளக்காய் தெரிகிறாய் – புதுமையே உனைநான் தமிழெனில் தவறோ ? உனையே உரைத்து உயிரை நுரைத்து மூச்சு நரைக்க மனதில் கரைக்கிறேன் – வியப்பே உனை நான் தமிழெனில் பிழையோ ? விலக நினைத்தால் அகல மறுத்தாய் விலக்க முடியா நிலையது தந்தாய் ...
More

சென்னை வாழ்க்கை

அவசரமாய் கிளம்புகையில் தோளில் தொற்றிக் கொள்ளும் எரிச்சல் வீட்டிலிருப்போரை பிராண்ட, எதிரே வரும் ஆட்டோக்காரரை காரணமேயில்லாமல் திட்டி, பொறுமையைச் சோதிக்கும் நெரிசல் சாலையை நிறுத்தாமல் சபித்து, வழி விட மறுத்த சிக்னல் முன்னால் கோபத்தில் முனகி, அலுவலகம் சென்றதும் அதிகாரியைப் பார்த்து சிரிக்கக் கற்றுத் தந்திருக்கிறது சென்னை வாழ்க்கை.
More

மங்கையர்

  மடியில் நெருப்பைக் கட்டி அலைவதாக கிராமத்துத் தாய் வலியுடன் சொன்னாள் வயது வந்த மகளைப்பற்றி விறகடுப்பில் ஊதி ஊதி வியர்க்கும் முகத்தோடும் எரியும் விழிகளோடும் தங்கை சிரித்தாள். எங்கோ ஸ்டவ் வெடித்து ஏதோ ஓர் இளம் பெண் இன்னும் இறந்து கொண்டிருக்கிறாள். நாங்கள் கனல்கள் நீரையும் எரிக்கும் அனல்கள் என்று பெண்ணியக் கவிதைகள் சுட்டுக் கொண்டிருக்கின்றன. நங்கையர் நெருப்பாக இருக்கிறார்கள். நெருப்புக்கு நெருக்கமாகவும்.
More

பாரதிக்கு ஒரு மடல்

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்பதற்கு முன் சற்று யோசித்திருக்கலாம் பாரதி... நீ ஜாதிச் சங்கத்துக்கு ஆள் சேர்த்ததாகக் சொல்கிறது எதிர்கட்சி
More

மழலைக் காலம்

காகிதக் கப்பல் எப்போதுமே யுத்தத்துக்கு உபயோகப்படாது. வகுப்பறை விமானங்கள் தூர தேசம் செல்வதில்லை. பனங்காய் வண்டி பயணத்துக்குப் பயன்படுவதில்லை. கடற்கரை மணல் வீடு வசிப்பதற்கு வசதிப்படாது. மர இலை சுருட்டிச் செய்த ஊதலைக் கொண்டு எங்கும் கச்சேரி நடந்த முடியாது. மழலை வயது கற்றுக் கொள்கிறது ! எது பிற்காலத்தில் பயன்படாது என்பதை ! 0
More