வர்தா புயல்

மாநகரத்தின் மூலைகளெங்கும் மல்லாந்து கிடக்கின்றன‌ மரங்கள். பருவப் பெண்ணின் நாணம் போல‌ விழி கவிழ்ந்து நிற்கின்றன விளக்குக் கம்பங்கள். கால் நூற்றாண்டு ஆலமரங்களெல்லாம் வேர்களை விளம்பரத்திக் கொண்டு வீதிகளில் புரண்டு படுத்தன. சிரச்சேதம் செய்யப்பட்ட‌ வனமாய், மொட்டையடிக்கப் பட்ட‌ பொட்டல்காடாய் நிர்வாணியானது சென்னை. காட்டைப் பார்க்காத‌ தடுப்பூசி விலங்குகளெல்லாம் வண்டலூர் கூண்டுகளில் நடுங்கியே செத்தன. பர்தா போட்ட‌ பருவப் புயலாய் வர்தா வந்து வாரிப் போனது ! சென்னை வந...
More

நள்ளிரவு சூரியன்…

  “கேக்கறவன் கேணையனா இருந்தா நடு ராத்திரி சூரியன் உதிக்கும்”ன்னு சொல்வாங்க. ஆனா உண்மையிலேயே நடு ராத்திரி நீங்க வானத்தைப் பார்த்தீங்கன்னா சூரியன் தெரியும். ஆச்சரியமா இருக்கா ? ஆனா அதுக்கு நீங்க கொஞ்ச தூரம் போக வேண்டும். கோடை காலத்தில் ஆர்டிக் வளையத்தின் வடக்குப் பகுதியிலும், அண்டார்டிக்கா வளையத்தின் தெற்குப் பகுதியிலும் நடு ராத்திரியில் சூரியன் கொட்டக் கொட்ட முழித்திருக்கும். சில சமயங்களில் 24 மணி நேரமும் சூரியன் சார் டியூட்டி பார்ப்பார். அண்டார்டிக்காவின் தெற்குப் பகுதியில் ஜன வாச...
More

மலைகளுக்கு மாலையிடு.

மலைகளுக்கு மாலையிடு. மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள்உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல் இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு மிர்த்தி ற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் ...
More

கவிதை : மருதாணிக் கனவுகள்

அத்தனை குதிரைகளும் விடுப்பில் இருந்தாலும் காலத் தேர் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. என் வீட்டின் மெழுகிய திண்ணை சிமின்ட் பூசப்பட்டு, இப்போது கம்பி வேலைப்பாடுகளுக்குள் கைதியாய், பின்பக்கம் இருந்த சாம்பல் கூடும், சருகுக் குழியும் ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய், ஓட்டை வெறித்துப் பார்க்கும் என் படுக்கையறைக் கட்டில் இப்போது பாதி வழியில் காங்கிரீட் தட்டினால் தடுத்து நிறுத்தப்படுகிறது, அந்த நடு அறையின் பலகை அலமாரி தந்த வேப்பெண்ணை வாசம் இப்போதெல்லாம் வீசவில்லை விட...
More

கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

  மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல்  இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் உறங்கியே கிடக்கிற...
More

எங்கள் ஊர்

தென்னம் ஓலைகளில் வழுக்கி விளையாடும் ஈரக் காற்று. வாழை இலைகளில் உட்கார முயன்று முயன்று தோற்றுப் போய் வரப்புக் குச்சிகளில் வந்தமரும் கொக்குகள், ஓடையில் தங்க மணலின் மேல் வெள்ளி முதுகுடன் துள்ளி விளையாடும் மீன்கள், அடர்ந்து வளர்ந்த ஆலமர நிழலில் அமைதியாய் துயிலும் சர்ப்பக் குளம், பூமியின் புன்னகைப் புல்லரிப்புகளாய் எங்கும் பச்சைகளின் மாநாடு, பொறுங்கள், இதெல்லாம் சங்க உரையில் இருப்பதல்ல எங்கள் ஊரில் இருப்பது தான். 0 நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் தடுக்கினால் ...
More