ராகிங் : விளையாட்டல்ல விபரீதம்

  பள்ளிப்படிப்பை முடித்து கனவுகளுடன் கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களின் முன்னால் விஸ்வரூபமெடுத்து ஒரு அரக்கனைப் போல கோரப் பற்களுடன் ஆக்ரோஷமாய் நிற்கிறது ராகிங். மூத்த மாணவர்களுக்கு பொழுது போக்காக இருக்கும் ராகிங் புதிய மாணவர்களை பல விதங்களில் கொடுமைப்படுத்துகிறது. ஆடல், பாடல் செய்யச் சொல்லும் சிறு ராகிங் துவங்கி, அவர்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் அதிகபட்ச வன்முறை வரை பெரும்பாலான கல்லூரிகளிலும், விடுதிகளிலும் இன்று ராகிங் கொடிகட்டிப் பறக்கிறது. ராகிங் தொல்...
More

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்

  சமீபத்தில் அமெரிக்க அரசு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான விளையாட்டுப் பொருட்களை திரும்ப அனுப்பி விட்டது. இந்த விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதே இந்த முடிவின் காரணமாகும். . நச்சுத்தன்மை அதிகமான வர்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துதல், பென்சில் போன்றவற்றில் குழந்தைகளுக்கு ஊறு விளைவிக்குமளவுக்கு லெட் தன்மை அதிகம் இருத்தல் உட்பட பல்வேறு காரணங்கள் இந்த தடைக்குக் காரணமாக வெளியிடப்பட்டுள்...
More

அர்த்தமிழக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

  மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது இரண்டு இளம் பெண்களை எண்பது இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளனர். சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த புத்தாண்டு நள்ளிரவுக் கொண்டாட்டங்களில் விபத்து நேர்ந்ததில் நீச்சல் குளத்தில் விழுந்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார் பலர் காயமடைந்திருக்கின்றனர். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி கொச்சியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுகளெல்லாம் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்னும் பெயரில் புகுத்தப்படும் வர...
More

காத்திருப்பு நேரம் வீணல்ல

  இன்றைய அவசர வாழ்க்கை முறை பொறுமைக்கு விடை கொடுத்து விட்டது. கிராமத்து வரப்புகளில் காலார இயற்கையோடு கதைபேசிக் கடந்து போகும் வாழ்க்கையல்ல நகரத்து அவசர வாழ்க்கை. விடியலில் எழுந்து, இரவில் வீடு வந்து சேரும் நீளமான, அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. புழுதிக்காற்றைச் சுவாசித்து அயர்ச்சியுடன் துயின்று, வெப்பத் தூக்கத்தை முடித்து சோர்வுடனே துவங்குகிறது பெரும்பாலான காலைகள். சாலைகளிலும், அலுவலகங்களிலும் காத்திருக்கும் நேரமே பெரும்பாலான நேரத்தைக் குடித்து விடுகிறது. மூடப்பட்டிருக்கும் ரயில்வே க...
More

நேர்முகத் தேர்வு : TIPS

  நேர்முகத் தேர்வு குறித்த பயமும், தயக்கமும் படபடப்பும் பெரும்பாலானோரிடம் இருப்பது இயல்பே. சரியான திட்டமிடுதல் மூலம் இந்த தேவையற்ற பதட்டத்தை விலக்கி நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நேர்முகத் தேர்வு என்பது குற்றவாளியிடம் வழக்குரைஞர் நடத்தும் விசாரணை அல்ல என்பதை முதலில் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அந்தப் பணிக்குத் தகுதியான நபர் என்னும் எண்ணம் நிர்வாகத்துக்கு இருப்பதால் தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்னும் உயர்ந்த சிந்தனை முதலில் உள்...
More

வன்முறையை விதைக்கும் சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களின் பங்கு சமூகத்திற்கு மாபெரும் வரமாகவும், மிகப்பெரிய‌ சாபமாகவும் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி பல இடங்களுக்குப் பரவ வானொலியோ, அச்சுப் பத்திரிகையோ தான் ஊடகமாக இருந்தது. செய்திகள் பரவும் வேகமும், அதன் மூலம் உருவாகும் தாக்கங்களும் ஊகிக்கக் கூடிய அளவிலேயே இருந்தன. ஆனால் இன்று அப்படியில்லை, ஒரு செய்தி விதையாக ஒரு இடத்தில் விதைக்கப்பட்ட உடனே அதை சமூக வலைத்தளங்கள் உலகின் கடை கோடி எல்லை வரைக்கும் எடுத்துச் செல்கின்றன. அந்த செய்தி வாசிப்பவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப வ...
More

விழா நாட்களை எப்படிக் கொண்டாடலாம் ?

ஊரெங்கும் வெடிக்கும் பட்டாசுகள், சாலைகளெங்கும் பறந்து திரியும் காகிதக் குப்பைகள், காற்றுடன் கைபிடித்துத் திரியும் கரிய புகை, வீட்டுக்கு வந்து சேரும் பலகாரங்கள், விடியல் முதல் இரவு வரை தொலைக்காட்சியில் சிரிக்கும் அரிதார முகங்கள்,  புத்தம் புதிதாய் காத்திருக்கும் பட்டாடை இவற்றைத் தவிர விழா நாள்என்றவுடன் என்னென்ன நினைவுக்கு வருகின்றன ? இதைத் தவிர வேறென்ன நினைவுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா ? இந்த தீபாவளியை எப்படி வித்தியாசமாகக் கொண்டாடவேண்டும் என யோசிக்கிறீர்களா ? இதை முயன்று பாருங்களேன். ...
More

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5

எதிர்பாரா இனிமைகள் இருக்கட்டும் ! வசந்திக்கும், ஆனந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இருவரும் கடந்த சில நாட்களாக ஒழுங்காகப் பேசிக்கொள்வதில்லை. ஆனந்த் அலுவலக வேலை என காலையிலேயே கிளம்பி, இராத்திரி தான் வருகிறார். இடைப்பட்ட நேரங்களிலும் அதிகம் போன் செய்வதில்லை. வேலை வேலைன்னு வேலையையே கட்டிகிட்டு அழுங்க ! என வசந்தி எரிச்சல் பட, என் வேலையோட கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது என ஆனந்த் திருப்பி எரிச்சல் பட, உறவில் சின்ன விரிசல். வசந்தி தன் தோழியரிடம் இதைப்பற்றிப் புலம்ப அவர்கள...
More

தோளில் கை போடலாமா ?

ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஆணாதிக்கத்தின் கூறுகள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். சமூக அந்தஸ்து, கருத்து மரியாதை, பணியிட நிராகரிப்புகள், தலைமை மறுப்புகள், சமநிலையற்ற ஊதியம் என பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் பல இடங்களில் இன்றும் தொடர்கின்றன. பெண்களுக்கு சமூகத்தில் சமமான அந்தஸ்து வேண்டும் என்று கேட்பது கூட ஒருவக...
More

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார். "ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?" " அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்" சீடர்கள் சொன்னார்கள். "ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே " குரு கேட்டார். சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக...
More