காலமாற்றம்

தாள லயத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்த காலத்திலும், காற்றின் முதுகெலும்பாய் கழுத்தை நீட்டும் சாய்ந்த தென்னையில் ஏறி குளத்தில் குதித்து நீச்சலடித்த காலத்திலும், உச்சிக் கொம்பு மாங்காயை எச்சில் ஒழுக குறிபார்த்து கல்வீசிக் கைப்பற்றிய காலங்களிலும் வரப்புக்கும் நிலப் பரப்புக்கும் ஓடி ஓடி பொழுது போக்கிய பொழுதுகளிலும் தெரிந்திருக்கவில்லை, இப்போது தொப்பையைக் குறைக்க மூடிய அறையில் மூன்று மணி நேரம் மூச்சு முட்ட இயந்திரத்தில் ஓடும்போது தான் தெரிகிறது அன்று வாழ்க்கையே...
More

கூடப் பொறந்த பாசம் !

கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளை “கூடப் பொறந்ததுக” என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம். சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும்  ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள்.  இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது த...
More

மக்கா நம்ம சாள மீனு….

சாளை மீன் ஆங்கிலத்தில் சார்டைன் என அழைக்கப்படும் சாளை மீன் அற்புதமான மீன் உணவு. நிஜமாகத் தான் சொல்கிறேன். மற்ற மீன்களில் இருப்பதை விட பல சிறப்பம்சங்கள் இந்த சாளை மீனில் உண்டு. கேரளாவிலும், குமரியிலும் சாளை என்று அழைக்கப்படும் இந்த மீனை மத்தி என மற்ற இடங்களில் அழைக்கிறார்கள். ஆனால் அதிலும் இரண்டு வகை உண்டு. நான் சொல்வது அளவில் சின்னதாக இருக்கும் சாளை மீன் பற்றி ! தனிப்பட்ட முறையில் என்னுடைய ஃபேவரிட் மீன் எது என கேட்டால் சட்டென சாளை மீன் என்று சொல்வேன். அதிலும் பொரித்த சாளை மீன் எனது சூப...
More

வஞ்சிரம் மீன் : சாப்பிடும் முன்னாடி படிங்க…

பெரும்பாலான உணவகங்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. விளம்பரங்களில் நேர்த்தியாகப் பொரித்து வைக்கப்பட்டிருக்கும் நீள் வட்ட மீன் துண்டைப் பார்த்திருப்பீர்களே. பெரும்பாலும் அது வஞ்சிரமாகத் தான் இருக்கும். அலாதியான சுவை. அதிலும் ஃப்ரெஷ் மீனில் இருக்கும் சுவை ரொம்பவே மெய்மறக்க வைக்கும். கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் இதை நெய்மீன் என்று சொல்கிறார்கள். குழம்பு வைத்தாலும், பொரித்தாலும் சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த மீன் தமிழகம் முழுவதுமே மிகவும் விரும்பிச் சாப்பிடும்...
More

நெத்திலி மீன்…ம்ம்ம்…

  மீன் வகைகளிலே ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். கருவாடாகவும் இது மிக அற்புதமான சுவையைத் தரும். பச்சை மிளகாய் மிதக்கும் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு சுவை அறிந்தவர்களுக்கே தெரியும். மாங்காய், முருங்கைக்காய் என இந்த குழம்பு இடத்துக்குத் தக்கபடி பல்வேறு முகம் காட்டும் என்பது சுவாரஸ்யமான அம்சம். இந்த நெத்திலி மீன் சுவையில் மட்டுமல்லாமல் பயன்களிலும் அசரடிக்கக் கூடிய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பம்சம். மேலை நாடுகளில் இந்த மீனைக் கொண்டு சால்ட், பிஸ்ஸா, பாஸ்தா ...
More

ஆக்டபஸ் சாப்பிட்டிருக்கீங்களா ?

  ஆக்டபஸ் என்றதும் ஆஜானுபாகுவான தலையுடன் மலைப்பாம்பு போன்று நீண்ட ஒரு கொத்துக் கைகளுடன் அலையும் உருவம் தானே நினைவுக்கு வருகிறது ? இதையெல்லாமா சாப்பிடுவாங்க என மனசுக்குள் ஒரு சின்ன கேள்வியும் எழும் இல்லையா ? சாப்பிடலாம். ஆனால் அந்த பெரிய சைஸ் ஆக்டபஸை அல்ல, குட்டி ஆக்டபஸை. பிரபலமான உணவு வகையான சுசி, சூப்கள், பாஸ்தா போன்ற பலவற்றில் ஆக்டபஸின் அம்சம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக்டபஸ் எல்லாம் வேண்டாம் என ஒதுக்குவதற்கு முன் அதிலுள்ள விஷயங்களை ஒரு தடவை பார்த்து விடுவோமே. ஆக்டப...
More

ஆற்று மீன் ஆரோக்கியமானதா ?

மீன் என்றவுடனே நமது நினைவுக்குச் சட்டென வருவது கடல் மீன் தான் இல்லையா ? . ஆனால் ஆற்று மீன்கள் மிகப்பெரிய வர்த்தக எல்லையைக் கொண்டிருக்கின்றன. ஆற்று மீனை ஒரு கை பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் “ஃப்ரஷ் வாட்டர் ஃபிஷ்” என்பார்கள். நன்னீர் மீன்கள் அல்லது நல்ல தண்ணீர் மீன்கள் என்று சொல்லலாம். நல்ல தண்ணீரில் ஏதோ சில வகை மீன்கள் தான் இருக்கும் என நினைத்தால் அந்த நினைப்பை அப்படியே கடலில் போடுங்கள். உலகில் உள்ள மீன் வகைகளில் 41.21 சதவீதம் வகைகள் நல்ல தண்ணீரிலும்...
More

இரால் மீன் : ஆண்கள் ஸ்பெஷல் !

    ஷ்ரிம்ப், ப்ரான்ஸ், இரால்  என்று அழைக்கப்படுவதெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். கடல் உணவுப் பிரியர்களில் ஷிரிம்ப் சாப்பிடாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடல் உணவுகளில் பெரும்பாலானவர்களின் ஃபேவரிட் உணவு ஷிரிம்ப் என்பதிலும் சந்தேகம் இல்லை. இரால் வகைகள் எக்கச் சக்கம் உண்டு. அளவிலும், நிறத்திலும் அவை பல விதம். என்ன நிறத்தில் இருந்தாலும் அவற்றை வேக வைத்தபின் பெரும்பாலும் ஒரே நிறத்தில் வந்து விடும். ஒருவித ஆரஞ்ச் நிறம். மற்ற கடல் மீன்களைப் போலவே ஷிரிம்ப் பல்வே...
More

மீன் முட்டை சாப்பிடலாமா ?

  முட்டை சாப்பிடுவீங்களா ? என்று உங்களிடம் கேட்டால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது என்ன ? வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சுடச் சுட பொரித்துத் தரும் ஒரு ஆம்லெட். லைட்டாக பெப்பர் போட்டு சுடச்சுட வாயில் தள்ளும் ஒரு ஆஃப் பாயில், ஒரு அவித்த முட்டை, அல்லது குறைந்த பட்சம் கடையில் அடுக்கி வைத்திருக்கும் முட்டைகள். எப்படியோ ஒருவகையில் உங்கள் கண்னுக்கு முன் நிழலாடுவது கோழி முட்டை தான் இல்லையா ? நாம் இங்கே அலசப் போவது மீன் முட்டையைப் பற்றி ! மீன் சாப்பிடும் பலருக்கும் மீன் முட்டை பற்றி அதி...
More

கருவாடு சாப்பிடலாமா ?

கருட புராணம் தெரியுமோ இல்லையோ, மீன் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த புராணம் கருவாடு புராணம். கிராமத்து நினைவுகளை அசைபோடுகையில் எனது நாவில் தவறாமல் கருவாட்டுச் சுவை வந்து போவதுண்டு. விறகு அடுப்பில் பாட்டி சாம்பலுக்குள் புதைத்துவைத்து சுட்டுத் தரும் கருவாடும், அதை ஒருகையில் பிடித்துக் கொண்டு பழைய கஞ்சி குடித்ததும், டோமினோஸ் பிஸ்ஸாக்களால் சமரசம் செய்து கொள்ள முடியாத சுவை. சரி, எனது புராணம் கிடக்கட்டும், கருவாட்டுக்கு வருகிறேன். கருவாடு பற்றித் தெரியாத நபர்கள் இருந்தால் அவர்கள் அடுத்த இரண்டு ...
More