Christianity : மறைக்கல்வி

“எல்லோருக்கும் மறைக்கல்வி “எல்லோருக்கும் மறைக்கல்வி” எனும் வாக்கியத்தைக் கேட்டதும் நமக்குள் பல கேள்விகள் எழக் கூடும். இதன் பொருள் என்ன ? உண்மையில் எல்லோருக்கும் மறைக்கல்வி வேண்டும் என்பதை விவிலியம் போதிக்கிறதா ? நமது ஆண்டவர் இயேசு மறைக்கல்வி எல்லோருக்கும் வேண்டும் என்று ஏதேனும் சொன்னாரா ? என இந்த கேள்விகளின் பட்டியல் நீளக் கூடும். அந்தக் கேள்விகள் தருகின்ற பதில் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். எது மறைக்கல்வி அறிவொளி இயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் ஏதாவது ...
More

தேவதைகளும் மழலையரும்

  தூக்கத்தில் மழலை மெல்லப் புன்னகைக்கும்போது ஏதோ தேவதூதர்கள் கனவில் வந்து விளையாடுகிறார்கள் என்று அம்மா சொல்வார்கள். அது உண்மையா இல்லையா என்பது தெரியாது ஆனால் அந்தப் புன்னகை மட்டும் ஒரு தேவதையின் புன்னகைக்குரிய அத்தனை புனிதத்துவத்தோடு இருக்கும். அந்தப் புன்னகையை எதனுடன் ஒப்பிடக் கூடும் ? காலைப் பனியில் முகம் கழுவி நிற்கும் அழகிய பூவுடனா ? அழகாய் இருக்கும் எல்லாம் புனிதத்துவத்துடன் பொருந்துவதில்லையே ? தேவதைகளை கண்டதுண்டா ? கவலைப்படவேண்டாம். தேவதைகளுடன் ஒப்பிடும் புனிதம் மழலைகளுக்கு இ...
More

என்ன பயன்

நாய்க்குட்டி காலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கிறது. கையிலிருக்கும் பந்தை தூரமாக எறிகிறோம். நாய்க்குட்டி ஓடிப் போய் அதைக் கவ்விக் கொண்டு வந்து நம்முடைய கைகளில் தருகிறது. மீண்டும் எறிகிறோம், மீண்டும் நாய்க்குட்டி அதைக் கொண்டு வந்து தருகிறது. செயல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எறிவதும் பெறுவதுமாக. வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட கடிகாரமுள் போல வெளியேறாத செயல். என்ன பயன் ? நாட்கள் தோறும் ஒரே மாதிரியான செயல்கள். அவை வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகி பின் தலைமுறைகளாகின்றன. வட்டத்துக்குள் சிக்...
More

இன்னொரு கிரகம்

  அப்பல்லோ பதினைந்தில் விண்வெளிப்பயணம் செய்து வந்த ஜேம்ஸ் இர்வின் தன்னுடைய திகிலும், வியப்பும் கலந்த பயணத்தை விவரிக்கும்போது இவ்வாறு கூறுகிறார். 'நிலவுக்கு நான் சென்று வந்தது இத்தனை சிலிர்ப்பூட்டும் அனுபவம் என்றால், மண்ணுலகிற்குக் கடவுள் வந்த அனுபவம் அதை விடச் சிலிர்ப்பூட்டக் கூடியது !'. நிலவுக்குச் சென்ற பயணம் அவரை ஒரு நல்ல ஆன்மீகவாதியாக மாற்றியது ஒரு ஆச்சரியமான உண்மை. நான் என்னும் அகந்தையும், என்னைச் சுற்றிய உலகம் என்னும் இறுமாப்பும் உயரத்துக்குச் செல்லச் செல்லக் கரைந்து விடுமா...
More

Christianity : சரியான பாதை

  உங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது வாழ்த்துக்கள் ! என்று சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏற்கனவே என்னுடைய நண்பர்கள் என்னை எச்சரித்திருந்ததனால் அது போலியான அழைப்பு என்று எனக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் அந்த நபருடன் பேசினேன். நானும், மனைவியும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் எனக்கு ஒரு இலட்ச ரூபாய் எப்படித் தரப்படும் என்பதை விளக்குவார்கள் என்றும் கூறினார். 'உங்களுக்கு எத்தனை ரூபாய் மாத ஊதியம் கிடைக்கிறது 'என்று அந்த...
More

குதர்க்கக் கேள்விகள்

  விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள். 'அப்பா.... தேவதைகள் தூங்குமா ?'. 'தூங்கும் என்று தான் நினைக்கிறேன்' தந்தை சொன்னார். 'அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?' மகள் கேட்டாள். விவிலியத்தை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்வ...
More

ஒரு உருமாற்றம்

  தங்கத்தைப் புடமிடும் பட்டறை. நெருப்பு அடர்த்தியாக இருக்கிறது. ஒரு சின்ன இடுக்கியால் தங்கத் துண்டு ஒன்றை எடுக்கும் புடமிடுபவர் அதை ஒரு இரும்புக் கல்லின் மேல் வைத்து அதன் மேல் வேகமாக நெருப்பைப் பாய்ச்சுகிறார். நெருப்பு பட்டுப் பட்டு அந்த தங்கத் துகள் நிறம்மாற அதை தனக்கு விருப்பமான வடிவத்தில் அதைச் செய்துகொள்கிறார் அவர். பாறை ஒன்று சிற்பியின் முன்னால் கிடக்கிறது. வடிவமற்ற வடிவத்துடன். சிற்பியின் கண்களுக்கோ அது ஒரு அழகிய சிலையாகத் தெரிகிறது. அவர் அதன் மேல் உளிப்பிரயோகங்களைச் செய்து ...
More

தன்னைப் போல…

ஒரு அணியின் வெற்றி என்பது அணிவீரர்கள் எவ்வளவு தகுதியானவர்கள் என்பதை வைத்துத் தீர்மானிக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் இயலாமைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. தோல்வி பெற்ற அணியில் வெற்றி பெற்ற அணியினரை விடத் திறமையான வீரர்கள் பலர் இருக்கக் கூடும். ஆனால் அணியின் வெற்றி என்பது கூட்டு முயற்சி. கிறிஸ்தவ வாழ்க்கையும் இதுவே. இயேசு நம்மை ஒரே உடலாக, ஒரே மனமாக இருக்க அழைப்பு விடுக்கிறார். நம்முடைய சுயநல எண்ணங்கள் அவற்றை அழித்துவிடக்கூடாது என்னும்...
More

நம்பிக்கை

நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் பல வேளைகளில் தடுமாறும் ஒரு விஷயம் நம்பிக்கை. கடவுளிடம் முழுமையாய் நம்பிக்கையை வைப்பதில் தடுமாற்றம். எந்த ஒரு செயலும் சரியாக அமையவேண்டுமென்றால் அதைத் தானே முன்னின்று நடத்தவேண்டும் என்னும் எண்ணம். கடவுளிடம் ஒப்படைப்பதில் வரும் தயக்கம். இந்த நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாகவும், பல தோல்விகளை வெற்றிகள் என்று நாம் கருதிக் கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போ...
More

Christianity படரும் நெருப்பு

  இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் கொழுந்துவிட்டெரிந்த காட்டுத் தீ சுமார் ஒரு இலட்சத்து முப்பத்து ஏழாயிரம் ஏக்கர் நிலத்தை சுட்டெரித்தது. வானம் அந்தக் கரும் புகையினால் மறைந்து போய்விட்டது, எங்கும் இருள் புகை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்பிழைக்க தங்கள் வீடுகளையும் உடமைகளையும் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்கள். கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டது அந்தக் காட்டுத் தீயை அணைக்க. அந்த முழு காட்டுத் தீயும் ஒரு சிறு பொறியிலிருந்து துவங்கியது தான். அந்த சிற...
More