டைம் மெஷின் சாத்தியமில்லை !

  நீங்கள் ஹாலிவுட் பட பிரியரென்றால் டைம் டிராவல் பற்றி நல்ல பரிச்சயம் இருக்கும். கால வாகனத்தில் ஏறி பழைய காலத்துக்கோ புதிய காலத்துக்கோ பயணிக்கும் புனைக் கதைகள் தான் இந்த டைம் டிராவல் கதைகள். ஹாலிவுட்டில் படமான அறிவியல் புனைக் கதைகளில் கணிசமானவை இந்த வகைப் படங்களே. பேக் டு த ஃபியூச்சர் போன்ற உலகப் புகழ் படங்கள் பலவும் இதில் அடக்கம். இப்போது அந்த டிரென்ட் தமிழ்த்திரைப்படங்களிலும் புகுந்து கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருப்பதும் நாம் அறிந்ததே. இந்த கால வாகனத்தை உருவாக்குவது நிஜத்தில் ச...
More

கருவுக்கும் தெரியும் காய்கறி வாசனை !

  குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது பெரும் சவால். அதிலும் காய்கறிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் கேட்கவே வேண்டாம். பெரும்பாலான குழந்தைகள் காய்கறி என்றாலே காததூரம் ஓடுவார்கள். அவர்களைப் பிடித்து சத்தான காய்கறிகளை ஊட்டுவதற்குள் பெற்றோரின் பாடு படு திண்டாட்டமாகிவிடும். இப்போது ஒரு புதிய ஆராய்ச்சி முடிவு இதற்கு ஒரு தீர்வுடன் வந்திருக்கிறது. அதாவது, தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் காய்கறிகளை விரும்பிச் சாப்பிட்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் காய்கறிகளைத் தாவி எடுத்து சாப்பிடுமா...
More

ஹைடெக் பிரஷ்.

  வேப்பங்குச்சியை வைத்துப் பல்துலக்கிய காலத்திலிருந்து பிரஷுக்குத் தாவி ரொம்ப காலமாகி விட்டது. அதன்பிறகு எலக்ட்ரானிக் பிரஷுக்கும் தாவி விட்டோம். பேட்டரி போட்டால் பிரஷ் தானாகவே பல் துலக்கித் தரும். இப்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் பிரஷ் கம்ப்யூட்டரோடு இணைந்து விட்டது. யூ.எஸ்.பி மூலமாக கணினியில் இணைத்து இந்த பிரஷை சார்ஜ் செய்து கொள்ளலாம் ! HX9332 எனும் இந்த புதிய தயாரிப்பைத் தந்திருப்பவர்கள் பிலிப்ஸ் நிறுவனத்தினர். புதிய எயர்ஃபிளாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பிரஷ் தயாரிக்கப்...
More

All in ONE : ஒரே ஒரு தடுப்பூசி !

  கொளுத்தும் வெயிலில் வறுபடும்போது எப்படா நாலு சொட்டு மழை விழும் என வானம் பார்ப்போம். லேசாகத் தூறல் விழ ஆரம்பிக்கும் போதோ சட்டென எல்லோருக்கும் தும்பல், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். மழை நீடித்தால் கொசுக்களின் அரசாங்கம் ஆரம்பித்துவிடும். பின் கேட்கவே வேண்டாம் இந்தக் காய்ச்சல், அந்தக் காய்ச்சல் என உடல்நிலை பாடாய்ப்படுத்தும். வழக்கமாய் வரும் தொல்லைகள் காலநிலைக் காய்ச்சல்கள் போதாதென்று கோழிக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என விதவிதமான புதுப் புது நோய்கள் வந்து பதறடிக்கும். டாக்டர் கொடுக...
More

ஐ.பி ( IP Address ) ! கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் இருந்து ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும் ? விஷயம் தெரிந்த சில மணி நேரங்களுக்குள் சைபர் கிரைம் காவலர்கள் வந்து உங்களை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். யாருக்குமே தெரியாத ஒரு ரகசிய இடத்திலிருந்து நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியது எப்படி போலீசுக்குத் தெரிந்தது ? என நீங்கள் வியந்து கொண்டே கம்பி எண்ண வேண்டியது தான். உங்களுக்கு இங்கே வில்லனாக மாறியது ஐ.பி அட்ரஸ் (IP ...
More

ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா ?

“கிரடிட் கார்ட் பார்த்திருக்கீங்களா ?” ங்கற மாதிரி அபத்தமான கேள்வியெல்லாம் நான் கேட்க மாட்டேன். உணவு, உடை, உறைவிடம் மாதிரி தேவையான ஒரு விஷயமாக கிரடிட் கார்ட் உருமாறிப் போன விஷயம் நான் அறிந்ததே ! ஆனால் அது சம்பந்தமாக வேறு ஒரு சின்ன கேள்வி ! “உங்களிடம் இருக்கும் கிரடிட் கார்ட், ஸ்மார்ட் கார்டா ? இல்லையா ?” என்பது தான் அந்தக் கேள்வி ! விசா கார்ட் தெரியும், மாஸ்டர் கார்ட் தெரியும். அதென்னப்பா ஸ்மார்ட் கார்ட் என சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. கவலைப் படாதீர்கள், அதைச் சொல்லத் தானே இந்த வாரம் வந்திர...
More