செங்கடலாகுமா கருங்கடல்

செங்கடலாகுமா கருங்கடல் கருங்கடல் உலக மேப்பில்  முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் கடல். சுற்றுலாத்தலம், கப்பல்களின் வழிப்பாதை, ஆழ்கடல் குழாய்கள், எண்ணெய் வளம், எரிவாயு வளம், போர்க் கப்பல்களின் தளம் இத்யாதி.. இத்யாதி என பல்வேறு முகங்கள் இதற்கு உண்டு. உலகின் நாடுகளெல்லாம் இப்போது கருங்கடலின் மீது இருக்கும் கண்களையெல்லாம் வைத்திருக்கின்றன. விஷயம் அங்கே கிடைக்கும் எண்ணை வளம். ஏற்கனவே கருங்கடலின் அடிப்பாகத்தில் பல நாடுகளையும் இணைக்கும் எரிவாயு, எண்ணைக் குழாய்கள் இருக்கின்றன. ரஷ்யா, இங்கில...
More

What is that கடல் எல்லை ?

மீன் பிடிக்கப் போனவர்கள் எல்லை தாண்டி விட்டார்கள். எல்லை தாண்டியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இதெல்லாம் சமீப காலமாக இந்திய மீனவர்களின் உயிரை உலுக்கும் பிரச்சினை. கடலுக்குப் போன மீனவன் திரும்பி கரைக்கு வரும் வரை அவனுடைய குடும்பம் அருவாமனை மீனாகிறது. மீனவனுக்குக் கடல் அமுத சுரபி. அவனுடைய தாய்மடி. அதில் எல்லைகள் போட்டு தொல்லைகள் தொடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனும் தார்மீகக் கேள்வி எல்லோருக்குள்ளும் உண்டு. அதற்கு முன் இந்த கடல் எல்லை சமாச்சாரத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது. முன்...
More

உலகின் மிகச் சிறிய போர்

  உலக வரலாற்றிலேயே மிகச் சிறிய போர் 1896ல் நடந்த ஆங்கிலோ ஸான்ஸிபர் (Anglo-Zanzibar) போர் தான். யூ.கேவுக்கும் ஸான்சிலருக்கும் இடையே நடந்த இந்தப் போர் ஜஸ்ட் 38 நிமிடங்களில் கதம் கதம் ! இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு தான் இந்த ஸான்ஸிபர். ஒரு காலத்தில் ஓமன் நாட்டு சுல்தான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் ஓமனிடமிருந்து ஓடி சுதந்திர நாடு என பிரகடனப்படுத்திக் கொண்டது. “ஆமா, ஆமா நீ தனி நாடு தான் ஜமாய் “ என பிரிட்டன் சைடு சப்போர்ட் வழங்கியது. சப்போர்ட் பண்ணினவன் சும்மா இருப்பா...
More

போர்க்கைதிகளின் பரிதாப நிலை

  போரில் பிடிபடுபவர்களின் நிலமை அதோ கதி தான் என்கிறது வரலாறு. மாட்டும் முன் உயிர் போய்விட்டால் அது போன ஜென்மத்தில் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் குற்றுயிரும் குலை உயிருமாக துடி துடிக்க வேண்டியது தான்.  சில திடுக்கிடும் கதைகள் இங்கே…நமக்கெல்லாம் தெரிந்த ஒரு போர்க்குற்றத்தை நான் தவிர்த்திருக்கிறேன். நடுங்கும் விரல்களை நிறுத்த முடியவில்லை. ஜெர்மன் நாசி போர்க்கைதிகளின் மீது ஜெர்மன் நாசிகள் சகட்டு மேனிக்கு சோதனைகள் செய்தார்கள். இரண்டாம் உலகப் போர...
More

பயனிலிகள்

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா. அல்லா துணை நானே உலகின் ஒளி. வாகனங்களின் பின்புறம் வாசகங்கள். எந்த வாகனமும் நிற்கவில்லை சாலை கடக்கத் தவிக்கும் மனிதருக்காய்.
More

சென்னை வாழ்க்கை

அவசரமாய் கிளம்புகையில் தோளில் தொற்றிக் கொள்ளும் எரிச்சல் வீட்டிலிருப்போரை பிராண்ட, எதிரே வரும் ஆட்டோக்காரரை காரணமேயில்லாமல் திட்டி, பொறுமையைச் சோதிக்கும் நெரிசல் சாலையை நிறுத்தாமல் சபித்து, வழி விட மறுத்த சிக்னல் முன்னால் கோபத்தில் முனகி, அலுவலகம் சென்றதும் அதிகாரியைப் பார்த்து சிரிக்கக் கற்றுத் தந்திருக்கிறது சென்னை வாழ்க்கை.
More

மங்கையர்

  மடியில் நெருப்பைக் கட்டி அலைவதாக கிராமத்துத் தாய் வலியுடன் சொன்னாள் வயது வந்த மகளைப்பற்றி விறகடுப்பில் ஊதி ஊதி வியர்க்கும் முகத்தோடும் எரியும் விழிகளோடும் தங்கை சிரித்தாள். எங்கோ ஸ்டவ் வெடித்து ஏதோ ஓர் இளம் பெண் இன்னும் இறந்து கொண்டிருக்கிறாள். நாங்கள் கனல்கள் நீரையும் எரிக்கும் அனல்கள் என்று பெண்ணியக் கவிதைகள் சுட்டுக் கொண்டிருக்கின்றன. நங்கையர் நெருப்பாக இருக்கிறார்கள். நெருப்புக்கு நெருக்கமாகவும்.
More

அரசியல் செய்வோம் வா

இருட்டிலேயே நீண்ட நேரம் இருந்தால் பழகிப் போய் விடுகிறது இருட்டு. பிறகு வெளிச்சம் தான் சுமையாகி கண்கள் கூசும். ஒரு இருட்டை விட்டு இன்னோர் இருட்டுக்கு, தளம் மாறித் தளம் மாறி தாவிக் கொண்டிருப்போம். வா. வாங்கி வந்தவற்றை உண்டு இருட்டிலேயே பசியாறு. வாக்குறுதிகளை மட்டும் வெளிச்சத்தில் பரிமாறு.
More

இந்திராணி : பதறடித்த ஒரு படுகொலை.

ஒரு சின்ன செய்தியாக முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தேசத்தின் முதுகெலும்பை சில்லிட வைக்கும் பெரும் செய்தியாக உருமாறியிருக்கிறது. தனது சொந்த மகளை, அதுவும் திருமண வயதான மகளை, திட்டமிட்டு படுகொலை செய்து விட்டு எதுவுமே நடக்காதது போல் இயல்பு வாழ்க்கை வாழ்ந்த நாற்பத்து மூன்று வயதான இந்திராணி முகர்ஜி தான் வழக்கின் மையம். அஸ்ஸாமில் பிறந்து கவுகாத்தியில் வளர்ந்தவர் இந்திராணி. இவரது தந்தை ஒரு பொறியாளர். பெற்றோருடன் கவுகாத்தியில் வசித்து வந்த இந்திராணிக்கு முதல் காதலனாக அறிமுகமானார் சித்தார்த் தா...
More

மர்மங்களின் நாயகன் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் பிரித்துப் பார்க்க முடியாது. அஹிம்சையே வெல்லும் என ஒரு சாரார் முடிவெடுக்க வீரமே வெற்றி தரும் என இந்தியாவுக்கு வெளியே சென்று, இந்திய தேசிய ராணுவத்தை' அமைத்து, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரை மிரள வைத்தவர் அவர். 1897ம் ஆண்டு சனவரி 23ம் நாள் பிறந்த சுபாஷ் சந்திரபோஸின் மரண நாள் என்ன என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தியதி தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் சிக்கி பலியானார் என்பது தான் அறிவிக்கப்பட்ட செய...
More