அம்மா

      சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். கல்வியும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வராதுடா ? உருட்டி விழுங்க... ஏழு கழுதை வயசாச்சு பொறுப்பு மட்டும் வரலை பொறுக்கிப் பசங்க சகவாசம் இன்னும் விடலை. அப்பாவின் திட்டுகளில் இல்லாத தன்மானம் சொல்லாமல் எழும்ப வெளியேறும் மகனை, கொல்லையில் நிறுத்தி சொல்லுவாள் அன்னை. மறக்காம 'மத்தியானம் சாப்பிட வந்துடுப்பா'
More

இறைவன் படைப்பில் தாய்.

ஆண் ஒருவரின் உடலில் இருந்து உயிரைத் தனியே எடுத்தால் அவன் பிணமாவான். பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்தால் அவள் தாயாவாள் ! தாய் எனும் உறவு, எந்த விதமான மகத்துவத்தோடும் ஒப்பிட முடியாத உறவு. தன்னலத்தின் ஒரு சிறு துரும்பு கூட இல்லாத தூய்மையைச் சொல்ல வேண்டுமெனில் தாயன்பைத் தான் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனதிலும் அம்மாவைப் பற்றிய பிம்பங்களும், பிரமிப்புகளும், நினைவுகளில் நீங்காமல் இருக்கும். பெரும்பாலான நினைவுகளை புரட்டிப் பார்த்தால் அவை பால்ய காலத்து நினைவுகளாகவே இருக்கும்....
More