சன்னலுக்கு வெளியே கவிதைகள்

சன்னலோர ரயில் பயணம் ரம்மியமானது. தண்டவாளத்தில் நீச்சலடித்து முன்னேறும் ரயிலும், பின்னோக்கிப் பாயும் இயற்கையும், அருகிருக்கும் தண்டவாளத்தின் மேலமர்ந்து கூடவே ஓடிவரும் வெளிச்சமும், பொத்தாம் பொதுவாக கையாட்டிச் சிரிக்கும் குதூகலக் குழந்தைகளும், தூரத்துக் குளத்தில் வெட்கத்தை அலசிக் காயப்போடும் கிராமக் குயில்களும், ரயில்வே கேட்டில் பரபரப்புகளுடன் பார்த்திருக்கும் வாகனக் குரல்களும், வெளியே விரிந்திருக்கும் புத்தகம், யதார்த்தத் திரைப்படம்… என சன்னலோர ரயில் பயணம் ரம...
More

க‌விதையும், அழகும்

எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. பிரசவத்தின் வலியை சிரித்துக் கொண்டே சொல்வதும், சிரிக்கும் குழந்தையை அழுது கொண்டே அறிவிப்பதும் சாத்தியமில்லை. குருதிப் போரையும் கண்ணீர்ப் பூவையும் ஒற்றைச் சாடிக்குள் சொருகி வைக்கவும் முடிவதில்லை. பேனாவும் காகிதமும் விரலும் மாறுவதில்லை தான். வலிகளும் வரிகளும் மாறி மாறித் தானே வருகின்றன. எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. கவிதைகளாய் இருந்தால் போதும்.
More

கவிதை : வயதானவர்களின் வாழ்க்கை

தலைப்புச் செய்திகளை மட்டுமே அவசரமாய் மேய்ந்து வந்த கண்கள், வரி விளம்பரங்களையும் விடாமல் படிக்கும். தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வருகையிலும் விரல்கள் ரிமோட் தேடாது. ஃபேஷன் சானலின் எண் மறந்து போகும் நியூஸ் சேனல் எண் நினைவில் நிற்கும். அதிகாலை மூன்றுமணி தூங்கப் போகும் நேரமென்பது மாறி, தூக்கம் வராமல் எழும்பும் நேரமென்றாகும். இந்தக் கால இசை சத்தம் என்று சத்தமாய்ப் பேசும். இளமைக் கலாட்டாக்கள் தவறுகளே என்பது தெரியவரும் பேசும் போதெல்லாம் அறிவுரை முறைக்கும் த...
More

கவிதை : வறுமை நினைவுகள்

ஓரம் கிழிந்ததால் தலைகீழாய் கட்டப்பட்ட அப்பாவின் வேட்டியும், வியர்வைப் போராட்டத்தில் அக்குள் கிழிந்த பனியனும், தரைக்கும் காலுக்குமிடையே மில்லி மீட்டர் தடிமனில் களைத்துத் தொங்கிய கடைவீதிச் செருப்பும், நினைவுக்கு வருகின்றன கிரெடிட் கார்ட் கொடுத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு “லூயிபிலிப்” சட்டை வாங்குகையில்
More

படிகளில் காத்திருக்கும் கதைகள்.

கிராமத்து வீட்டின் வாசல்படிகளில் அமைதியாய் அமர்ந்திருக்கின்றன கதைகள். படிகளில் அமர்ந்து பேன் பார்க்கையில் பாட்டி சொன்னவையாய் இருக்கலாம். சிறுகல் பொறுக்கி பாறை விளையாடுகையில் சகோதரி சொன்ன கதைகளாகவும் இருக்கலாம். கரிக்கட்டையால் கோடு கிழித்து படிகளில் புரண்டு விளையாடுகையில் தம்பி சொன்னதும் இருக்கலாம். குளித்து விட்டுக் குதித்தோடுகையில் வழுக்கி விழுந்து உடைந்துபோன என் முன் பல்லின் கதையும் அதிலே ஒன்று !  யாரேனும் வந்தமர்ந்தால் சொல்லி விடும் துடிப்புடன் எதிர்பார்ப்ப...
More

அப்பா….

காயங்களைக் காலங்கள் ஆற்றிவிடும் என்பது மெய் என்று எல்லோரையும் போல் நம்பிக்கொண்டிருந்தேன். ஆறு வருடங்கள் என்கிறது நாள்காட்டி, நூறு வருடங்களின் பொதி சுமந்த பாரம் நெஞ்சில். வருடங்களின் கரைதல் துயரங்களின் கரையேறுதலை இன்னும் கற்றுத் தரவில்லை. இன்றும் கிராமத்து ஓட்டு வீட்டின் முற்றங்களில் அப்பாவின் சுவடுகளை நினைவுக் கைகள் தழுவத் துடிக்கின்றன. என் தொலைபேசி அழைப்பில் பதறியடித்து ஓடிவந்த பாதச் சுவடுகளல்லவா அவை ! பழுதடைந்த படிகளில் பாதம் பதிக்கையில் உள்ளறையிலிருந்து பர...
More