தினத்தந்தி வாரம் 6 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் வைரஸ்கள் மிரட்டலாய் வடிவெடுத்திருக்க இன்னொரு காரணம் அது பரவக்கூடிய வேகம். அல்லது அது பரவலாம் என எதிர்பார்க்கப்படும் வேகம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 17.6 மில்லியன் அமெரிக்கர்கள் சுமார் 8.6 பில்லியன் டாலர்களை மொபைல் வைரஸ், மொபைல் ஏமாற்று அழைப்புகள் போன்றவற்றால் இழந்திருக்கிறார்கள் என்கிறது ட்ரூகாலர் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று. பத்து ஆப்ஸ் களில் ஒன்றில் ஏதோ ஒரு மால்வேர் இருக்கிறது என கடந்த ஆண்டு நடந்த 'சீட்டா மொபைல்' ஆய்வு ஒன்று தெரிவித்தது. அதில் அறுபது சதவீதத்துக்கும் மேலானவை...
More

தினத்தந்தி வாரம் 5 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் தயாரிப்பு நிறுவனங்களே இப்போதெல்லாம் பல அடுக்கு பாதுகாப்பை கொடுக்கிறார்களே என சிலர் கேட்பதுண்டு. குறிப்பாக பயோமெட்ரிக் அம்சங்களை ஸ்மார்ட் போனில் புகுத்தி, கைரேகையைக் கொண்டு போனை அன்லாக் செய்வது, முகத்தை ஸ்கேன் செய்து அன்லாக் செய்வது இப்படிப்பட்ட அம்சங்களை அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் இத்தகைய வெளிப்படையான பாதுகாப்பு அம்சங்கள், மொபைல் தொலைந்து போகாமல் பாதுகாக்கலாமே தவிர அதற்குள் வைரஸ் நுழைவதை தடுப்பதில்லை. மொபைலுக்கு ஆன்டி வைரஸ் தேவையா என்பதைக் குறித்த சர்ச்சை வல்லுநர்களிடை...
More

தினத்தந்தி வாரம் 4 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ? ஒரு எளிய வழி சொல்கிறேன். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களின் பட்டியலுக்கு செட்டிங்ஸ் வழியாகச் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் தரவிறக்கம் செய்யாத ஏதேனும் ஒரு ஆப்ஸ் அதில் இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அது வைரஸின் வேலையாய் இருக்கலாம். நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் எதையும் புதிதாக நிறுவவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்ட சூழலில் கூட உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உண்டு. அது ...
More

தினத்தந்தி வாரம் 3 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா ? அப்படியென்றால் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், உங்கள் மொபைல் போனிலுள்ள தகவல்களையெல்லாம் எப்படி சுடலாம் என எங்கோ ஒருவர் மென்பொருட்களால் சில்மிஷ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். அவர்கள் முக்கியமாகக் குறி வைப்பது உங்கள் மொபைல் போனில் இருக்கும் நண்பர்களின் செல்போன் எண்களை. உங்கள் கணினிக்குள் வைரஸை எப்படியாவது நுழைத்து விட்டால், பின்னர் உங்கள் போனின் தகவல்களெல்லாம் அவர்கள் கைக்குப் போய்விடும். நீங்கள் அனுப்பாமலேயே நண்பர்களுக்கு...
More

தினத்தந்தி வாரம் 2 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

கம்ப்யூட்டர் வைரஸ் ! எனும் வார்த்தை முதலில் அறிமுகமான காலத்தில் எல்லோரும் பயந்தார்கள். அது கணினியின் கீபோர்ட் வழியாகவும், மானிட்டர் வழியாகவும் மக்களைத் தாக்கும் என நினைத்தார்கள். அதனால் கிளவுஸ் போட்டுக்கொண்டு கீபோர்டைப் பயன்படுத்தியவர்கள் ஏராளம். ஃப்ளாப்பி டிஸ்கை ஏசி காற்றில் காட்டி விட்டு கணினியில் போடுங்கள் என அறிவுறுத்தியவர்கள் பலர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ் என்பது மென்பொருள் என்பதும், அது பன்றிக் காய்ச்சல் போல கண், காது, மூக்கு, கைவிரல் வழியே பரவாது என்றும்...
More

ரகசியத்தை விற்கும் வாட்ஸப்.

கடந்த சில மாதங்களாக வாட்ஸப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த ஒரு செய்தி தகவல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. வாட்ஸப் தகவல்களையெல்லாம் ஃபேஸ்புக் எடுத்துக் கொள்ளப் போகிறது எனும் அச்சம். இந்த அச்சம் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் நிறுவனத்தை 2014ல் வாங்கியதில் இருந்தே மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது தான். சமீபத்தில் வாட்ஸப் அதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டது. தன்னை விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்துக்கு தன்னிடமிருக்கும் தகவல்களைக் கொடுக்கப் போகிறேன் என்பது தான் அது. இதில் அ...
More

வன்முறையை விதைக்கின்றனவா சமூக‌ வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களின் பங்கு சமூகத்திற்கு மாபெரும் வரமாகவும், மிகப்பெரிய‌ சாபமாகவும் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி பல இடங்களுக்குப் பரவ வானொலியோ, அச்சுப் பத்திரிகையோ தான் ஊடகமாக இருந்தது. செய்திகள் பரவும் வேகமும், அதன் மூலம் உருவாகும் தாக்கங்களும் ஊகிக்கக் கூடிய அளவிலேயே இருந்தன. ஆனால் இன்று அப்படியில்லை, ஒரு செய்தி விதையாக ஒரு இடத்தில் விதைக்கப்பட்ட உடனே அதை சமூக வலைத்தளங்கள் உலகின் கடை கோடி எல்லை வரைக்கும் எடுத்துச் செல்கின்றன. அந்த செய்தி வாசிப்பவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப வ...
More

வன்முறையை விதைக்கும் சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களின் பங்கு சமூகத்திற்கு மாபெரும் வரமாகவும், மிகப்பெரிய‌ சாபமாகவும் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி பல இடங்களுக்குப் பரவ வானொலியோ, அச்சுப் பத்திரிகையோ தான் ஊடகமாக இருந்தது. செய்திகள் பரவும் வேகமும், அதன் மூலம் உருவாகும் தாக்கங்களும் ஊகிக்கக் கூடிய அளவிலேயே இருந்தன. ஆனால் இன்று அப்படியில்லை, ஒரு செய்தி விதையாக ஒரு இடத்தில் விதைக்கப்பட்ட உடனே அதை சமூக வலைத்தளங்கள் உலகின் கடை கோடி எல்லை வரைக்கும் எடுத்துச் செல்கின்றன. அந்த செய்தி வாசிப்பவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப வ...
More