தாயில்லாமல்

இப்போதும் எங்கேயோ ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். எப்போதும் எங்கேனும் ஒரு மகன் தன் தாயை மிதித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் எங்கேயோ எழுதப்படாத வலிகளின் வரிகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன அன்னையரின் டைரிகள். எப்போதும் எங்கேனும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு கவிதை தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.
More

காமம் விலகாக் காதல்

என் கவிதை தேசத்தின் கர்வக் கிரீடமே. உன் நினைவுச் சரிவுகளில் வெள்ளாட்டுக் குட்டியாய் தள்ளாடித் திரிகிறது மனது. தேவதை ஒன்றை தேவலோகம் அனுப்பியதாய் தேகங்களில் சுடுகிறது தனிமை. ஸ்பரிசங்களின் அகராதியை புரட்டிப் பார்க்க தருணங்களின் தயவின்றி உருகிக் காய்கிறது இளமை. ஏகாந்தத்தின் பள்ளத்தாக்குகளில் காதலின் புதைகுழிக்குள் ஊமையின் குரலென மூழ்கிச் சாகிறது கிழமை. உன் பிறந்த நாளில் விரல்களின் விண்ணப்பங்களை உன் மேனியின் முகவரிக்கு அனுப்பி வைக்காத அவஸ்தை மோகத்தின் முனகல்கள...
More

கடும்புனல்

நேற்றைய தழுவல்களின் விரல்கள் தனிமையிலும் காது வருடுகின்றன. மாலை நேரம் முளைக்கும் போதில் தாபத்தின் கனவுகளும் வேகத்தைக் கூட்டுகின்றன. ஆடைகளின் பாரம் தாங்காமல் வியர்வை அவிழ்கிறது. மோக கற்பனைகளால் நிர்வாணமாகின்றன இரவுகள். போர்வைகளுக்கு வாய் முளைத்தால் புரியும் படுக்கை அறைகளின் ரகசிய மூச்சுகள். நரம்புகளுக்குள் நகரும் நரகமாய் மேனி தேய்த்து முன்னேறும் நாகங்கள். புரளல்களுக்கும் உளறல்களுக்கும் இடையே நசுங்கி வெளியேறும் இரவு. விடியலில் இரவு துடைத்து கனவு கழுவ...
More

பால்ய ஆடைகள்

சில ஆடைகள் விசேஷமானவை. சிறுவயதில், விழாக்கால நாள் வரை காத்திருந்து பெற்றுக் கொள்ளும் புத்தாடை மணம் இன்னும் நாசிகளில் உயிர்ப்புடன். வருட இடைவெளி வாங்கிக் குவித்த ஆடைகள் ஆயிரமெனினும் இன்னும் நினைவிருக்கும் பால்ய கால ஆடைகளின் டிசைன்கள். அம்மாக்களின் அலமாரிகளில் திருமண வாசம் மாறாமல் மௌனித்திருக்கும் பட்டுப் புடவைகள் விலைமதிப்பற்றவை. காதல் பரிசளித்த ஆடை நேசம் பரிமளித்த ஆடை என எல்லோரிடமும் இருக்கக் கூடும் ஏதேனும் ஓர் ஆடை. காலக் கரையான் தின்று தீர்த்தாலும் இன்னு...
More

என் செய்வேன் பிரியமே

உன் நினைவுகள் துரத்த அறைக்குள் மூடி தாளிட்டுக் கொண்டேன். சுவர்களெங்கும் அறையப்பட்டிருந்த உன் சிரிப்புகள் சிதறி விழுகின்றன. இருக்கைகளில் அமர்ந்திருக்கும் உன் சொற்கள் சரிகின்றன. போர்வை மூடி படுக்கையில் கவிழ்கையில் கீழிருந்து முளைக்கின்றன உன் தந்த விரல்கள். இமைத் திரைகளை இறக்கினால் விழிகளுக்குள் உளிகளாய் உன் ஸ்பரிசங்கள் மிதக்கின்றன. என் அவஸ்தைகளின் அங்குலமும் அறியாத நீ அடக்குதலின் அங்குசத்தை உதடுகளில் தளும்பத் தளும்ப நிரப்பி வைத்திருக்கிறாய். மீண்டும் மீ...
More

கவிதை : புடிக்குமா ? புடிக்காதா ?

பிடிக்காதது போல் நடித்து பிடித்திருக்கிறதென்றால் சம்மதமே. பிடித்தது போல் நடித்து பிறிதொரு நாளில் பிடிக்காது என்று சொல்லி விட்டுப் போவதை விட எனினும் உன் மௌனத்துக்கும் சத்தத்துக்கும் இடையேயான முனகல்களின் முகவரியில் மிதப்பது சம்மதமா சம்மட்டியா என தெரியாத அவஸ்தை நீள்கிறது. பரவாயில்லை பிடித்தது போல் நடி. பிறிதொருநாளில் பிடிக்காதென்று சொன்னாலும் பரவாயில்லை. ஒருவேளை பிடிக்காதது போல் நடித்து உண்மையில் பிடிக்காமலேயே போய்விடுவதை விட.
More

Christianity : வரமும், வளமும் நிறைந்த குமரி.

இந்தியாவின் வேறெந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு குமரிக்கு உண்டு. தமிழகத்தின் சின்ன சொர்க்கம் என்று குமரியைச் சொல்லலாம். அழகான காலநிலையும், இனிமையான வாழ்க்கைச் சூழலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையும் என குமரிமாவட்டம் மற்ற எல்லா மாவட்டங்களையும் விட ரொம்பவே ஸ்பெஷலானது. தமிழக மாநிலங்களிலேயே கல்வியறிவில் முன்னிலையில் நிற்கும் மாவட்டம் என்பதிலும் நமக்குப் பெருமை உண்டு. கற்றவர்கள் நிரம்பியிருக்கும் தளம் என்பதால் தான், தேவையற்ற அரிவாள் கலாச்சாரங்களோ, இனச் சண்டைகளோ இல்லாமல் அமைதியாகவே இருக்...
More

என் காதல்

கும்மிருட்டுப் பாதையில் தைரியமாய் எடுத்து வைக்கும் பாதப் பதிவுகள் போன்றவை என் காதல் விண்ணப்பங்கள். பாம்புகள் பதுங்கியிருக்கலாம். படுகுழுகள் பசித்திருக்கலாம் விலங்குகள் விழித்திருக்கலாம் அல்லது பாதையே இல்லாமல் இருக்கலாம். எனினும் கனவுகளின் வெளிச்சத்தை மனம் தூக்கிச் சுமக்கும் காதல் லாந்தரில். நள்ளிரவில் வைத்தியரைத் தேடி ஓடும் பிள்ளைத் தாச்சியின் கணவன் போல தைரியமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன காதலின் விண்ணப்பங்கள். பின்னணியில் ஓர் தாய்மைத் தாயின் தவிப்பொலியைச் சும...
More

மரம், பரம ரகசியம்

அலெக்ஸ் எர்லாண்ட்சன் : மரம், பரம ரகசியம்   அலெக்ஸ் எர்லாண்ட்சன் சுவீடனில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பம் என்றாலே மரங்களோடு தொடர்பு இருப்பது இயல்பு தானே. அலெக்ஸ்க்கும் மரங்கள் என்றால் கொள்ளை பிரியம். எப்போதும் மரங்களில் விளையாடிக் கொண்டிருந்த அவர், 1925 முதல் மரங்களை வளர்க்க ஆரம்பித்தார். அதுவும் எப்படி ? தனக்குப் பிடித்தமான வித விதமான டிசைன்களில். முதலில் பேப்பரில் அவருக்குப் பிடித்தமான ஒரு படத்தை வரைவார். பின் தோட்டத்திலுள்ள ம...
More

சூதாட்ட சூரப்புலிகள்

டோய்ல் பிரன்சன் கிரிக்கெட்டில் டான் பிராட்மேன் போல போக்கர் விளையாட்டில் லெஜண்ட் டோய்ல் பிரன்சன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக போக்கர் விளையாட்டில் உலகையே அதிர வைத்தவர் இவர். போக்கர் விளையாட்டில் இவர் வாங்கிக் குவித்த பட்டங்களும், பரிசுகளும் கணக்கில் அடங்காதவை. பத்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் இவர். போக்கர் விளையாட்டின் மூலமாக மில்லியன் டாலர் சம்பாதித்த முதல் சீரியஸ் விளையாட்டுக்காரரும் ஐயா தான். அமெரிக்காவின் டெக்ஸாஸ் காரரான இவர் விளையாட்டில் ஆர்வம் காரணமாக லாஸ் வேகஸின் செட்டிலானார...
More