Christianity : இதற்குமேல் இயேசுவாலும் முடியாது

இதற்குமேல் இயேசுவாலும் முடியாது ! மகள் இறந்து விட்டாள் போதகரை இனியும் ஏன் தொந்தரவு செய்கிறீர் ? இதற்குமேல் இயேசுவால் எதுவும் செய்ய முடியாது என நினைத்தார்கள். நீர் இங்கே இருந்திருந்தால் லாசர் இறந்திருக்க மாட்டானே ! கதறிய சகோதரிகள் நினைத்தனர் இனிமேல் எதுவும் பயன் இல்லை. நலம் பெற விரும்புகிறாயா எனும் கேள்விக்கு "குளத்தில் இறக்கி விட ஆளில்லை" என்றான் முப்பத்தெட்டு வருட‌ படுக்கை மனிதன். இறக்கி விடாவிடில் இறக்க வேண்டும் ! என்றே அவன் நினைத்தான். இறந்து போகும் முன...
More

Christianity : அழைப்பு

செல் ! ஆபிரகாமுக்கு வந்தது அழைப்பு ! ஊர் எனும் ஊரை விட்டார். குவித்து வைத்த‌ செல்வத்தையெல்லாம் குதிகாலால் ஒதுக்கினார். ஏன் ? எதற்கு ? எப்படி ? ஆபிரகாம் கேட்கவில்லை. மாலுமியாய் கடவுள் வந்தால் வரைபடங்கள் தேவையில்லை. ஒற்றை விதையிலிருந்து மானுடத்தை மலர வைத்தார் இறைவன். மோசே ! தார்மீகக் கோபத்தால் எகிப்தியனை எதிர்த்தார். கொலை எனும் உலையில் சிக்கி அச்சத்தை அணிந்தார். உயிரை சுருக்குப் பையில் சுருட்டி பயத்தின் பதுங்கு குழிகளில் பதுங்கியே வாழ்ந்தார். செருப்பைக் க...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 4

  நீ, யார் கடனுக்கோ பொறுப்பேற்றிருந்தாலோ, அன்னியனுக்காய் பிணையாய் நின்றால், அவனை வருந்தி வேண்ட வருந்தாதே. வலைகளில் சிக்கிய மான், புரண்டு படுத்து துயிலாது, பொறியில் சிக்கிய கிளி கண் மூடி கனா காணாது. நீ விடுவிக்கப் படும் வரை போராடு. உன் ஞானம் உன் மேலான இக்கட்டுகளின் கட்டுகளை வெட்டிப் போடும். சோம்பேறிகளாய் சொக்கித் திரியாதீர்கள். தலைவனோ, கண்காணிப்பாளனோ, அதிகாரியோ இல்லாத எறும்புகளை பொறுமையாய் பாருங்கள். கோடையில் சேமிக்கிறது பசியால் வாடையில் உண்க...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 3

அறிவைத் தேடுதலே அறிவு. ஞானம் தேடுதலே உண்மை ஞானம். அதை நீ உயர்வாய் கொள் உன்னை அது உயர்த்தும். வேண்டாமென்போரை அது தீண்டாது. நேரிய பாதை உன்னை இடறாது, ஏனென்றால் உன் நடையில் தெளிவுகள் இருக்கும். சறுக்காத பாதை அது ஏனெனில் நீ வெறுக்காத ஞானம் அது. தீயவர்களோ, தீவினை உண்டு கொடுஞ்செயல் குடித்து இருட்டின் மடியில் குருடாய் கிடக்கிறார்கள். அவர்கள் கண்களை வைகறை உறுத்தும். நல்லோருக்கோ வைகறை மெல்ல மெல்ல விரிந்து நண்பகல் நோக்கி நடக்கும். உன் கோட்டைகளை காவல் செய்வ...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 2

    உணவுக்கான ஓடுதலோடு உணர்வுக்கான தேடுதலையும் வளர்த்துக் கொள். மெய்யறிவுக்காய் மன்றாடு. சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வத்தை ஞானம் தோண்டுவதில் நடத்து. அறிவும், ஞானமும் ஆண்டவன் அருள்வதே. மாசற்றோனுக்கான கேடயம் கடவுளே. அவருடைய வரைபடத்தில் வருபவை எல்லாம் நேர்மையின் பாதைகளே. நீதியையும், நேர்மையையும் நீ பற்றிக் கொள். ஞானம் வந்து உன்னைத் தொற்றிக் கொள்ளும். பின், உன் நுண்ணறிவும் மெய்யறிவும், உன் வழியை உருவாக்கும். உன் நிழல் விழும் ஓரமும் ...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 1

ஆண்டவன் மீதான அச்சமே, அற்புத ஞானத்தின் ஆரம்பம். பெற்றோரிடம் உள்ளது. அறிவின் முதல் படி. தவறாமல் அதைக் கடைபிடி. அதுவே, உன் தலையை அலங்கரிக்கும் தங்கக் கிரீடம், கழுத்தைத் தழுவும் பவழ மாலை. தீயவர்களின் வார்த்தைகளுக்கு வானவில் போல ஏராளம் வண்ணங்கள். அப்பாவிகளைக் கொள்ளையடிப்பதும், பாதாளச் சமாதிக்குள் வேதாளங்களாய் சுற்றி வருவதும், யாரையேனும் அழித்து அந்த செல்வம் சுருட்டி மிரட்டும் மாளிகை கட்டுவதும், என, கொடியவன் வார்த்தைகளில் இனிப்பு விஷ‌ம் கனியும். நீ, அவர்களோ...
More

மன்னிப்பு

சிலுவையின் சிரத்தில் விரித்த கரத்தில் குருதி குளிப்பாட்டிய ஆணிகளுடன் வடிந்தன மன்னிப்பின் வார்த்தைகள். பாவங்களின் படிக்கட்டுகளில் நிரந்தரப் பாய் விரித்து படுத்துக் கிடந்தவர்களிடமும் இயேசுவின் மனம் மன்னிப்பு வினியோகம் செய்தது. சினத்தை சுருக்குப் பையில் சொருகி, மன்னிப்பை மறுகன்னத்திலும் ஏந்தி நடக்கச் சொன்னார். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும் என்பதும், மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை மன்னிப்புகள் மட்டுமே கொளுத...
More

உன்னத சங்கீதம் (சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய கவிதை)

  சாலமோன் அரசரின் ஓர் சரித்திரப் புகழ் கவிதை இது. இதன் ஒவ்வோர் வரிகளிலும் காதலின் வாசம். ( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )   1   தலைவனே, உன் இதழ்களுக்குள் நீர் இறுக்கி வைத்திருக்கும் முத்தத்தின் முத்துக்களை என் இதழ்கள் மேல் இறக்கி வைத்து விடுக. உமது காதல், போதையின் படுக்கை, அது திராட்சை இரசத்தின் போதையைக் கடந்தது. உமது பரிமள தைலம் எல்லைகளை வெட்டி ...
More

கோபத்துக்கும் கோபம் வரும்

கோபப்படுகிறேன். கோபப்படக் கூடாதென நான் எடுக்கும் அதிகாலை முடிவுகளெல்லாம் கோபத்தீயில் கருகும் போதும், விட்டு விட வேண்டுமென பிடுங்கி எறியும் விரலிடை வெள்ளைச் சாத்தான் பிடிவாத வேதாளமாய் புகைந்து தொலைக்கும் போதும், யாரோ என்மேல் எறியும் கோபக் கனல்கள் வீட்டில் மனைவி மேல் தெறிக்கும் போதும், எனக்கு நானே கோபப்பட்டுக் கொள்கிறேன். என்னைத் தவிர யார்மீதும் கோபப்படும் உரிமை எனக்கில்லை. என் புலன்களுக்கே நான் முடி சூடிய அரசனாக முடியவில்லை அடுத்தவன் சாம்ராஜ்யத்தில் சக்கரவ...
More

செலவுகள்

கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி மின்சார மின்மினிகளை வரிசையாய் நிற்க வைத்தேன், உச்சியில் சின்னதாய் ஓர் செயற்கை நட்சத்திரத்தையும் செய்து வைத்தேன். யதார்த்தமான ஒரு குடிலை வாங்கி குழந்தை இயேசுவை உள்ளே இளைப்பாற வைத்தேன். சுவரைச் சுத்தமாக்கி காயாத பூக்களை சாயாமல் ஒட்டி வைத்தேன். வாசலிலும், அறைகளிலும் தோரணத் தொங்கல், கூரைகளில் கூட நட்சத்திர ஊஞ்சல். எல்லாம் செய்து வைத்தேன். பொருளாதாரத்தைக் கொஞ்சம் சுரண்டித் தின்றாலும், இந்த விழாக்கால ஏற்பாடு இதமான உறக்கம் தந்தது இரவில். ...
More