Working Women – 1 : இண்டர்வியூ தயக்கம்

அபினயா உற்சாகமாய் இருந்தாள். கையில் இருந்தது அவளுடைய கனவு நிறுவனத்திலிருந்து வந்திருந்த இண்டர்வியூ கார்ட். இந்த வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும். அவளுடைய மனதில் ஆர்வமும், பதட்டமும் சரி விகிதத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. கூடவே உள்ளுக்குள் ஓயாத ஸ்ருதியாய் ஒரு பயமும், திகிலும் கூட அவளை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த ஆறு மாதங்களாக அவள் பல நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறாள். வேலை கிடைத்தபாடில்லை. எழுத்துத் தேர்வுகளிலெல்லாம் வ...
More

கட்டுரை : விலைவாசி வெயிலும், தற்காப்பு நிழலும்

  ( இந்த வார தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) விலைவாசியை அண்ணாந்து பார்த்தே பழக்கப்பட்டிருக்கிறது நமது வாழ்க்கை. இப்போது பணவீக்கம் விண்கலம் போல நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் சென்றபின் விலைவாசியும் மாரத்தான் ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது கையில் பணத்தைக் கொண்டு போய் பையில் பொருட்கள் வாங்கிவரும் காலம் போய், பையில் பணத்தைக் கொண்டு போய் கையில் பொருட்கள் வாங்கிவரும் சூழல் இது என்பார்கள் இந்த சூழலை. சரி இந்த சூழலில் ஏதேனும் செய்து சூப்பர் மார்கெட் செலவை மட்டுப்படுத...
More

கட்டுரை : புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்

( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே. உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முத...
More

தாய்மை ஸ்பெஷல் : தாய்ப்பால் என்னும் அதிசயம்

  ( World Breastfeeding Week Special ) தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்னும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்றை பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி  தாய்ப்பாலுக்கு இருக்கிறது என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகும். உலக அளவில் சுமார் முப்பது கோடி பேர் ஆஸ்த்மா நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. குழந்தைகளுக்கு தா...
More

கட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம்

  ( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியானது ) உலகெங்கும் வெடிகுண்டுகள் வெடிப்பது சர்வ சாதாரணமாகி விட்ட சூழல் இது. இலங்கை, ஈராக் என போர் பிரதேசங்களில் நிகழ்ந்து வந்த வெடிகுண்டுகள் இப்போதெல்லாம் எங்கு வேண்டுமாலாலும் வெடிக்கலாம் எனும் சூழல். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 2765 பேர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியாகியிருக்கின்றனர். இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முடிய இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த தீவிரவாதப் படுகொலைகளின் எண்ணிக்கை சுமார் பதினான்காயிரத்து ஐநூறு என்கிற...
More

வாங்க சிரிக்கலாம்…

உற்சாகமாக பட்டாம்பூச்சியைப் போல ஓடித் திரியும் பலருக்கு உடலும் மனமும் இளமையாக இருப்பதை நாம் கவனித்திருக்கக் கூடும். கவலைகளற்ற, அல்லது தேவையற்ற கவலைகளை மூட்டைகளைப் போல முதுகில் தூக்கிச் சுமக்காத மனிதர்களுக்கு வாழ்க்கை என்பது உற்சாகப் பயணமே. வயிறு குலுங்கச் சிரிப்பது இதய நோயையே கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்லும் என்கிறது அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.  மன அழுத்தம் மாரடைப்பின் முதல் காரணி. மன அழுத்தமானது நமது இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதெலியத்தை வலுவிழக்கச் செய்து இரத்தக் கு...
More

பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும்

உலகம் பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. ஆலமரம் என கருதப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் அடியோடு சாய்ந்து அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நீண்ட நெடிய நெருக்கடி நிலையில் விழுந்து கிடக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி உலகெங்கும் சல்லி வேர் பரப்பி உலகின் எல்லா பாகங்களிலும் அதன் பாதிப்பு பலமாகவே இருக்கிறது. நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான ஆட்களை வேலையை விட்டு உதறிக்கொண்டே இருக்கிறது. வீதியில் வேலை தேடுவோர் எண்ணிக...
More

மூளையைப் பாதுகாப்போம்

  தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன. 1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் மூலம்...
More

தேர்வு எழுதுகிறீர்களா ?

மார்ச் மாதம் வந்தாலே மாணவ, மாணவியருக்குப் படபடப்பும் கூடவே வந்து தொற்றிக் கொள்கிறது. காரணம் ஆண்டு இறுதித் தேர்வு. மாணவர்கள் கொஞ்சம் சகஜமாய் இருந்தால் கூட பெற்றோரின் படபடப்பும், பரபரப்பும் எகிறிக் குதிக்கிறது. கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும், சுற்றுலா, ஷாப்பிங், சொந்த பந்தங்கள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்படும். வாசல் தாண்டுவது கூட ஆயிரம் முறை யோசித்தபின்பே அனுமதிக்கப்படும் எனுமளவில் தேர்வு காலங்கள் குடும்பங்களை தலை கீழாய்ப் புரட்டிப் போட்டு விடுகின்றன. பயத்துக்கான காரணிகளைப் பார்த்தால...
More

கோடை – எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம்

  வறுத்தெடுக்கும் வெயிலில் பல்வேறு சிக்கல்கள் விக்கிரமாதித்ய வேதாளமாய் விடாமல் நம்மை வந்து தொற்றிக் கொள்கின்றன. உடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என பட்டியல் நீளும். இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அள...
More