மனிதருக்குச் சிறகில்லை.

  இந்த மரத்துக்கும் எனக்கும் தலைமுறைப் பழக்கம். நான் சிறகு விரித்ததும் என் அடைகாப்பின் அடைக்கலமும் இந்த மரம் தான். இதன் கடந்த கால இலைகளுக்கும், நிகழ்கால முளைகளுக்கும் என் அலகுகள் வாழ்த்துச் சொன்னதுண்டு. இதன் கிளைகள் எல்லாம் என் நகப் பதிவுகளை புன்னகையோடு பெற்றுக் கொண்டவை தான். நான் மாடியில் கட்டிய குடிலுக்கு, அஸ்திவாரம் இதன் பூமியில் புதைந்த வேர்கள் தானே. இந்த மரம் தான் என் தாய் வீடும், நான் தாவும் வீடும். எனக்கும் இந்த மரத்துக்குமான உறவு உனக்க...
More

நேசிய கீதம்

    பாட்டி, இன்னும் கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள். நீ சொன்ன இடம் தூரமில்லை. நீ நடக்கவேண்டாம். அங்கே செல்வதற்குள் உன் பாதத்தின் சுவடுகளில் மரணம் வந்து படுத்துக் கொள்ளலாம். நான் சுமக்கின்றேன், எம் தந்தையர் தலைமுறையையே சுமந்தவள் நீ, உன்னைச் சுமப்பதே என் தலைமுறையின் தலையாய கடமை. வலுவானதாய் உன்னிடம் இருப்பதே இந்தக் கைத்தடி மட்டும் தான் இறுகப் பற்றிக் கொள். கசக்கிப் போட்ட கதராடையாய் கிடக்கிறது உன் மேனி, என் பாசச்சூட்டில் கொஞ்ச நேரம் சுருக்கம் கள...
More

உயிர்கள்

உயிர்கள்   குருதிக் கொசுக்களை மின் பேட்கள் எரித்துச் செரிக்கும். இருட்டுக் கரப்பான்களை ஹிட் வாசனை துடிதுடித்துச் சாகடிக்கும் தெரு நாய்களை முரட்டுக் கற்கள் முதுகில் தேய்க்கும் தேவையற்ற ஜந்துக்கள் அனைத்தும் மதில்சுவர் தாண்டி ஜடமாய் தெறிக்கும் பின், திருப்தியாய் வந்தமர்ந்து வாசிக்க மிச்சமிருக்கும் சில மனித நேயக் கவிதைகள்.
More

பெறுதல்

ஆயிரம் பேர் கூடியிருக்கும் அவையில் எனக்குப் பொருளுதவி செய்யாதே. விரும்பினால் என் குடிசைக்கு வந்து யாருமறியாமல் தந்து போ நீ தரவிரும்பியவற்றை. கனம் குறைந்திருந்தாலும் மனம் நிறையும் எனக்கு. உன்னுடைய அன்பளிப்புகளை ஆலய முற்றங்களில் கூனிக் குறுகிப் பெற்றுக் கொள்ள வலிக்கிறது. நான் ஏழையென்பதை பிரகடனப் படுத்துவதற்காய் பொதுக்கூட்டங்கள் போடாதே. பசியை விட பட்டினியை விட சாவை விடக் கொடுமையானது எல்லோரையும் விட நான் தாழ்ந்திருப்பதாய் நீ அறிவிப்புக் கூட்டம் நடத்துவது. ...
More

விழாக்கால வாழ்த்துக்கள்

வயலோர ஒற்றையடிப்பாதையில் சாயமிழந்து போன சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வருவார் தபால்காரப் பெரியவர். கிறிஸ்மஸ், புது வருடம், பொங்கல் என ஒவ்வோர் பண்டிகைக்கும் அவருக்கான காத்திருப்பு அதிகரிக்கும். காத்திருத்தலைக் கலைக்க ஒரு சில வாழ்த்துக் கடிதங்களேனும் இருக்கும் அவருடைய கைகளில் எனக்காய், எப்போதும் தோன்றியதே இல்லை அவருக்கும் ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.
More