100. பரிசேயர்

இயேசுவின் காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு குழு இருந்தது, அது பரிசேயர் குழு. கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தாங்கள் மிகச்சிறந்த ஆன்மீகவாதிகள் என தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் மத அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். சட்டங்களின் அடிப்படையில் தவறாமல் நடந்து வந்தவர்கள். சட்டமா ? மனிதநேயமா எனும் கேள்வி எழும்போதெல்லாம் சட்டமே முக்கியம் என சட்டத்தின் பக்கம் சாய்பவர்கள். மறைநூலை அலசி ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை அறிந்து வைத்திருப்பவர்கள். தங்கள் செயல்கள் எதுவும் நியமங்களை மீறிவிடக...
More

99. லூசிபர்

  முதல் பாவம் ஏவாள் விலக்கப்பட்ட கனியைத் தின்பதில் துவங்கியது என்பதே பலருடைய எண்ணம். உண்மையில் அதற்கு வெகு காலத்துக்கு முன்பே முதல் பாவம் தோன்றிவிட்டது. அதற்குக் காரணமாய் இருந்தவன் லூசிபர். லூசிபர் விண்ணுலகில் கடவுளோடு இருந்த ஒரு தேவ தூதன். மிகவும் அழகானவன். வானதூதர்களிலேயே மிகவும் உயர்ந்தவன். அவனுடைய அந்தஸ்தினாலும், அழகினாலும், அறிவினாலும் அவனுக்கு கர்வம் உண்டாயிற்று. அந்த கர்வம் தான் முதல் பாவம். தன்னைப் போல யாரும் இல்லை என நினைத்த அவன் அடுத்த இடத்துக்கு ஆசைப்பட்டான். அது தான் கடவுளின...
More

98. தூய ஆவி

  கிறிஸ்தவத்தின் கடவுள் மூவொரு கடவுள் என அழைக்கப்படுகிறார். தந்தை, மகன் மற்றும் தூய ஆவியானவர் என்பதே திருத்துவத்தின் மூன்று நிலைகள். இயேசு கிறிஸ்து மனிதனாக அவதாரம் எடுத்து மனிதர்களின் மீட்புக்காய் தன்னைப் பலியாக்கினார். தூய்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். "அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்" ( 1 யோவான் 2 :6) என்கிறது பைபிள். அதாவது கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போன்ற ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழவேண்டும் எ...
More

97. யூதா ததேயு

  இயேசு கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு உணவின் போது இயேசு தான் மரணமடையப் போவதையும், பின்னர் உயிர்த்தெழப் போவதையும் பற்றி சீடர்களிடம் பேசினார். அப்போது ஒரு சீடர் அவரிடம், "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?" என்று கேட்டார். அந்தக் கேள்வியைக் கேட்டவர் யூதா ததேயு. அதற்கு இயேசு  "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. என் ப...
More

96. பிலிப்பு

  பிலிப்பு, இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர். பைபிளில் அதிகம் பேசப்படாத நபர். ஒரு முறை இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" என்றார். அப்போது பிலிப்பு, "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். இயேசுவோ, "பிலிப்பே, என்னைக் காண்பதும் தந்தையைக் காண்பதும் ஒன்று தான். என் மீது அன்பு கொள்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவன் மீது என் தந்தையும், நானும் அன்ப...
More

95. மத்தேயு

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் ம‌த்தேயு. அவ‌ர் சுங்க‌ச்சாவ‌டியில் அம‌ர்ந்து வ‌ரி வ‌சூல் செய்யும் ப‌ணியைச் செய்து வ‌ந்தார். ஒரு நாள் இயேசு அவ‌ரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா” என்றார். சுங்கச்சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடனே இயேசுவைப் பின்சென்றார். இயேசு த‌ன‌து திருத் தூத‌ர்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌போது, எல்லோரையும் வேலையில் இருந்த‌போது தான் தேர்ந்தெடுத்தார். அதே அடிப்ப‌டையில் தான் ம‌த்தேயுவையும் தேர்ந்தெடுத்தார். வரிவசூலி...
More

94. நத்தானியேல்

நத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. "இறைவாக்கின‌ர்க‌ளும், மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண்டோம்" என‌ பிலிப்பு ந‌த்தானியேலை அழைத்தார். நத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார் ந‌த்தானியேல் இயேசுவைத் தேடி வ‌ந்தார். ந‌த்தானியேலைப் பார்த்த‌ இயேசு...
More

93. யாக்கோபு

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு சீட‌ர்க‌ளில் ஒருவ‌ர் யாக்கோபு. இவ‌ர் இயேசுவின் ச‌கோத‌ர‌ர்க‌ளில் ஒருவ‌ர் என‌ அறிய‌ப்ப‌டுகிறார். இயேசுவுக்கு யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்று நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். கூடவே சகோதரிகளும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் என்று ஒருசாராரும், உடன்பிறந்தவர்கள் அல்ல உறவினர்கள் தான் என்று இன்னொரு சாராரும் நம்புகிறார்கள். அக்கால வழக்கப்படி பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளும் கூட சகோதரன் என்றே அழைக்கப்படுவதுண்டு இயேசுவின் தாய் மரியாள் தூய ஆவியினால் கரு...
More

92. கானானியனாகிய சீமோன்

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் கானானிய‌னாகிய‌ சீமோன். இவ‌ரை தீவிர‌வாதியாகிய‌ சீமோன் என்றும், செலோத்தே என‌ப்ப‌டும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிற‌து. இவ‌ருடைய‌ சொந்த‌ ஊர் கானாவூர். எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார். கானாவூரில் தான் இயேசு த‌ன‌து முத‌லாவ‌து அற்புத‌த்தைச் செய்தார். ஒரு திரும‌ண‌ வீட்டில் திராட்சை இர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. இயேசு ஆறு க‌ற்சாடிக‌ளில் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார். இயேசுவின் சீடர்க...
More

91. அந்திரேயா

அந்திரேயா இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் முதலில் இயேசுவோடு இணைந்தவர். முதலில் இவர் திருமுழுக்கு யோவானின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டு அவர் தான் மெசியா என்னும் எண்ணத்தில் அவருடைய சீடரானவர். பின் திருமுழுக்கு யோவானே இயேசுவைச் சுட்டிக் காட்டி " இயேசுவே உண்மையான கடவுள்" என்று சொன்னதால் இயேசுவோடு இணைந்தவர். அந்திரேயா கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தவர். தன் சகோதரரோடு சேர்ந்து மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அந்திரேயாவின் சகோதரர் தான் இயேசுவின் முக்கியமான சீடரான பேதுரு. பேதுரை ...
More