காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை

    மகிழ்ச்சி !   காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆரம்பப் பள்ளியின் அரும்பு நாட்களில் கண்களுக்குள் சின்ன மின்மினிக் காதல் ஒன்று விட்டு விட்டு ஒளிகொடுக்கும். கணக்கு பாடத்தின் விடையைக் காட்டிக் கொடுத்ததன் மூலமாகவோ, இருந்த பலப்பத்தை இரண்டாய் ஒடித்து பாதி கொடுத்த பாசத்தின் பார்வையிலோ அந்த மின்மினிகள் தோன்றியிருக்கலாம். காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழையாத, ...
More

காதலியுங்கள், ஆனால் !…

வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று ! “உலகின் மிக அழகான பொருட்களை தொடடோ, பார்க்கவோ முடியாது” என்கிறார் ஹெலன் கெல்லர். அழகானவை பொருட்களல்ல, உணர்வுகளே என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன. அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் தான் உலகின் உன்னதமான விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை ! இளைஞர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் அதிகமாய் வீசும் வாசனை, காதல் ! காதலும், காதல் சார்ந்த இடங்களும் தான் இளைஞர்களின் எல்...
More

உடல் எடையும், புற்றுநோயும்

அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பது எப்போதுமே ஆபத்தானதே. இப்படி அதிக எடையுடன் இருக்கும் பெண்களுக்கு கருக்குழாய்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. அதிலும் மாதவிலக்கு நின்று போன, நடுவயதைத் தாண்டிய பெண்கள் அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு இந்த புற்று நோய் வரும் வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம் என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகம் சுமார் ஒரு இலட்சம் பெண்களை கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதன் விள...
More

தன்னம்பிக்கையில் தடுமாறும் பதின் வயதுப் பெண்கள் 

பதின்வயது ரொம்பவே பக்குவமாய்க் கையாள வேண்டிய வயது. சட்டென உடைந்து விடும் முட்டையைப் போல சில நேரம், உடைக்கவே முடியாத பாறை போல சிலநேரம் என வித்தை காட்டும் அவர்களுடைய மனம் புதிர்களின் புகலிடம். “தன்னம்பிக்கையெல்லாம் பெரியவர்களுக்கான விஷயம்” என பல வேளைகளில் நாம் ஒதுக்கி வைப்பதுண்டு. உண்மையில் தன்னம்பிக்கை பதின் வயதுப் பெண்களுக்கு ரொம்பவே தேவை. இன்றைய வாழ்க்கைச் சூழல் பதின் வயதுப் பெண்களின் மீது ஏகப்பட்ட சுமைகளை வைக்கிறது. அவளுக்கு முன்னால் விளம்பர மாடல்களும், திரை நட்சத்திரங்களும் ரோல் மாடல்க...
More

Working Women – 3 : வர்க் – லைஃப் பேலன்ஸ்…

  “எனக்கு ஏழுமணிக்கு முன்னாடி ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அனுப்பிடுங்க” தெளிவான ஆங்கிலத்தில் அழுத்தமாய்ச் சொல்லி விட்டுப் போன மேனேஜரைப் பார்க்கப் பார்க்க எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது கலைவாணிக்கு. நேற்றும் இப்படித் தான் கடைசி நேரத்தில் கான்பரன்ஸ் கால் இருக்கிறது, மண்ணாங்கட்டி இருக்கிறதென்று சொல்லி எல்லா பிளானிலும் மண் அள்ளிப் போட்டு விட்டான். வீட்ல சினிமா டிக்கெட்டோட காத்திருந்த வின்னேஷைச் சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. “ஸோ..… உனக்கு வேலை தான் முக்கியம். டிக்கெட் வாங்கி ...
More

Working Women – 1 : இண்டர்வியூ தயக்கம்

அபினயா உற்சாகமாய் இருந்தாள். கையில் இருந்தது அவளுடைய கனவு நிறுவனத்திலிருந்து வந்திருந்த இண்டர்வியூ கார்ட். இந்த வேலையை எப்படியாவது வாங்கி விட வேண்டும். அவளுடைய மனதில் ஆர்வமும், பதட்டமும் சரி விகிதத்தில் படபடத்துக் கொண்டிருந்தது. கூடவே உள்ளுக்குள் ஓயாத ஸ்ருதியாய் ஒரு பயமும், திகிலும் கூட அவளை ஆக்கிரமித்திருந்தன. அவளுடைய பயத்துக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த ஆறு மாதங்களாக அவள் பல நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருக்கிறாள். வேலை கிடைத்தபாடில்லை. எழுத்துத் தேர்வுகளிலெல்லாம் வ...
More

பெண்கள் மீதான வன்முறை

பெண்ணே நீ - இதழில் வெளியான எனது கட்டுரை... 0  பெண்களின் முன்னேற்றம் இன்று பல துறைகளில் வளர்ந்து வருகிறது என்பதை ஆனந்தத்துடன் ஒத்துக் கொள்ளும் நாம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தீரவில்லை என்பதை அவமானத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பெண்கள் மீதான சமூகத் தாக்குதல் முடிந்து போய் பெண்கள் இன்று பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள் என்று நம்பச் செய்வது கூட ஒரு வகையில் ஆணாதிக்கச் சிந்தனையின் தப்பித்தல் வார்த்தைகளே. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் தன்னுடைய கட்டுரை ஒன்றில் பெண்கள் ஆண்கள் அளவுக...
More

குடும்ப வாழ்க்கை பலவீனமடைகிறதா ?

(தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை) வாழ்க்கை உறவுகளின் மீது கட்டப்பட்ட புனிதமான ஆலயத்தைப் போன்றது. இந்த ஆலயம் சிதிலமடைகையில் மனித மாண்புகளும், வாழ்வின் புரிதல்களும் அர்த்தமிழந்து போகின்றன. உயரிய பண்பாடுகளினாலும், அடர்த்தியான கலாச்சார வாழ்க்கை முறையினாலும் உலகின் கவனத்தைக் கவர்ந்த இந்திய குடும்ப வாழ்க்கை முறை சமீபகாலமாகச் சரிவடையத் துவங்கியிருப்பது குடும்ப உறவு முறையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது. பலவீனமான குடும்ப வா...
More

பெண்களும், மன அழுத்தமும்.

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று. மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது. சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வ...
More

கட்டுரை : விலைவாசி வெயிலும், தற்காப்பு நிழலும்

  ( இந்த வார தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) விலைவாசியை அண்ணாந்து பார்த்தே பழக்கப்பட்டிருக்கிறது நமது வாழ்க்கை. இப்போது பணவீக்கம் விண்கலம் போல நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் சென்றபின் விலைவாசியும் மாரத்தான் ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கிறது கையில் பணத்தைக் கொண்டு போய் பையில் பொருட்கள் வாங்கிவரும் காலம் போய், பையில் பணத்தைக் கொண்டு போய் கையில் பொருட்கள் வாங்கிவரும் சூழல் இது என்பார்கள் இந்த சூழலை. சரி இந்த சூழலில் ஏதேனும் செய்து சூப்பர் மார்கெட் செலவை மட்டுப்படுத...
More