பாசம் இலவசம்

  'இன்னிக்கும் கடுதாசி வரல பெரியவரே...' சொல்லிவிட்டுக் கடந்து போன தபால்க்காரனையே பார்த்துக்கொண்டிருந்தார் வேதாச்சலம். வேதாச்சலத்துக்கு வயது அறுபத்து ஐந்து இருக்கும். பார்வை இப்போதெல்லாம் அவருக்கு சரியாகத் தெரிவதில்லை. ஒரு ஆரம்பப்பாடசாலையில் வாத்தியார் வேலை செய்து ஐம்பத்து எட்டு வருடங்களை நகர்த்தியாகி விட்டது. காலில் அவ்வப்போது வந்து போகும் வீக்கம். முகத்தில் சோர்வின் தழும்புகள். முதுமை ஒரு கொடுமை என்றால் முதுமையில் தனிமை அதை விட கொடுமையானது...  இளமையில் வறுமை யும் முதுமையில் தனிமையும் இரண்டும...
More

விசா கிடைக்குமா ?

அமெரிக்கன் கவுன்சிலேட் நுழைவு வாயில் பரபரப்பான இந்திய முகங்களால் நிறைந்து கிடந்தது. மேய் மாதத்தின் அக்கினி வெயிலும், மேம்பாலத்தின் வாகனப் புழுதியும் உடம்புக்குள்ளிருந்த நீரை எல்லாம் வியர்வையாக வெளியேற்றிக் கொண்டிருந்த மதியப் பொழுது. நுழைவு கேட்டை ஒட்டியபடி இருந்த வாயிலின் அருகே ஒரு செயற்கைக் குளிரூட்டப்பட்ட அறை. உள்ளே இருந்தவனுக்கு சென்னை வெயிலின் வீரியம் புரிந்திருக்க நியாயமில்லை. வெகு நிதானமாய் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தான். கையிலிருந்த பாஸ்போர்ட்டையும், தயாராய் எழுதி வைத்...
More

கேட்டால் காதல் என்பீர்கள்

தொலைபேசியில் கேட்ட குரலால் அதிர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளப்பட்டேன். அவள் தான் பேசுகிறாள். எப்படியும் இரண்டு மூன்று வருடங்களாவது இருக்கும் அவளோடு பேசி. இருந்தாலும் அந்த ஒரே குரலில் கண்டுபிடிக்குமளவுக்கு அவளுடைய குரல் மனசுக்குள் பதியமிடப்பட்டிருந்தது. ஏன் இப்போது பேசுகிறாள் ? ஆச்சரியம் ஒருபுறம், கிளர்ந்தெழும்பும் நினைவுகள் ஒருபுறம் .... ஏன் இந்த திடீர்த் தேடல் ? புரியவில்லை... ஹலோ... மறு முனையில் மீண்டும் அவள் குரல்.... "சொல்லு சந்தியா.... என்னை கிள்ளிப்பார்த்துட்டு இருக்கேன்......
More

சிறு கதை : தற்காப்புத் தலைவலி

 போலீஸ் குடியிருப்புக்குள் பயங்கர நிசப்தம். பொழுது இன்னும் விடியவில்லை. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மெதுவாய் கதவு திறந்து பார்த்தான் ஆன்றணி  . வெளியே, சக தொழிலாளி ஜேம்ஸ்? நின்றிருந்தார். வாப்பா ஜேம்ஸ்.. என்ன காலங்காத்தால ? கேட்டுக் கொண்டே கதவை முழுசாய்த் திறந்த ஆன்றணி க்கு வயது 40 இருக்கும். ஆனால் 32 க்கு மேல் சத்தியம் பண்ணிச் சொன்னால் கூட யாரும் நம்பமாட்டார்கள். போலீஸ் அதிகாரி. அதற்கே உரிய கம்பீரம். துணிச்சல், நேரான பார்வை. காவல் துறையில் "அதிரடிப்படை" எனும் பிரிவில் பணிபுரிக...
More

மேலும் சில மனிதர்கள்.

அப்பா. என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங். டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு.. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ? கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா. அபினயா, பரந்தாமனின் செல்ல மகள். ஒரே மகள், லண்டனில் போய்ப் படித்து விட்டு இப்போது தான் தந்தையின் கிராமத்துக்கு வருகிறாள். பரந்தாமனுக்கு கிராமத்தில் ஏகப்பட்ட சொத்து. அந்த கிராமத்திலிருந்து வெளிநாட்டில் போய்ப் படித்த ஒரே நபர் அபினயா தான். அந்த பெருமை எப்போதும் பரந்தாமனின் பேச...
More

இனியும் விடியும்.

அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உற்சாகமும் மொத்தமாய் வற்றிப்போய் விட்டது. சட்டைக்காலரில் பொருத்தப்பட்டிருந்த மைக் வழியாக இன்னும் அவர் பேசிக் கொண்டிருந்தார். . இந்த முடிவுக்குக் காரணம், நீங்களோ, நானோ அல்ல. உங்கள் உழைப்பை நாங்கள் மதிக்கிறோம், இதுவரை இந்த சாப்ட்வேர் டெவலப்மெண்ட்...
More

சந்தித்த கண்கள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கேள்வியோடு தலையை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தான் ரமேஷ். மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளறையில் ரம்யா ஏதையோ புரட்டிக் கொண்டிருந்தாள். இன்னும் தூங்கவில்லை. சன்னல் வழியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டும், இருட்டு சார்ந்த இடங்களுமாய் இருந்தது. தெருவிளக்குகள் இரவின் அடர்த்தியை ஆங்காங்கே அழித்திருந்தன. தெருநாய்களில் சில இரவின் அமைதியைக் தவணை முறையில் கலைத்துக் கொண்டிருந்தன. டொக்.டொக். கதவு மென்மையாய் தட்டப்பட்டது. ரமேஷ் கதவை நெருங்கி, கதவில் பொ...
More

ஜீ..பூம்..பா

மந்திரவாதி தன்னுடைய கையிலிருந்த மந்திரத் தண்ணீர் இருந்த பாட்டிலை சிறுவனின் கையில் கொடுத்தான். "இதிலிருப்பது மந்திரத் தண்ணீர். உன்னுடைய தோட்டத்துச் செடிகள் வளரவேண்டுமென்றால் ஒரு சொட்டு மந்திரத் தண்ணீரை எடுத்து ஒரு செடியின் தலையில் விட்டால் போதும். செடி செழித்து வளரும்" சிறுவனுக்கு ஒரே குஷி. அவனுடைய செடிகள் ரொம்ப நாளாவே வளரவில்லை. எப்படியாவது வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறான் முடியவே இல்லை.  அப்பா வேறு ரொம்ப கடுமை பார்ட்டி. ஒரு செடியைக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியலை என்று பிரம்பை எடுத்த...
More

பழைய காதலி !

  போச்சுடா. நேத்தும் நைட் ஃபுல்லா தூங்காம இருந்து சுடர் கூட கடலை போட்டியா ? சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான். வாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். 'ஆமா மச்சி. அவள மறக்க முடியல. அவளும...
More