திருட்டு : உண்மை கலந்த கதை

ஐயோ... என் பையைக் காணோமே.... என் பையைக் காணோமே... விடியற்காலை நாலு மணிக்கு இரயிலில் கேட்ட கதறல் குரலுக்கு எல்லோரும் எழுந்து விட்டார்கள். இரயில் விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. கதறிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடி எல்லா இருக்கைகளின் அடியிலும் தவழ்ந்து தவழ்ந்து தேடிய அந்த அம்மாவுக்கு குறைந்த பட்சம் ஐம்பது வயதாவது இருக்கும். ஒட்டிய தேகம், கலைந்த தலை, சாயம்போய் ஆங்காங்கே கிழிவதற்குத் தயாராய் இருக்கும் சேலை. அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத வண்ணத்தில் ஜாக்கெட். என்னம்மா ... என்ன இருந்...
More

சிறுகதை : கவிதைத் தொகுப்பு

சார். இதெல்லாம் என்னோட கவிதைகள் சார். இதை ஒரு புத்தகமா போடணும்ன்னு தான் ஒவ்வொரு பதிப்பகமா ஏறி இறங்கிட்டிருக்கேன். யாருமே முன் வர மாட்டேங்கறாங்க. நீங்க தான் மனசு வெச்சு இதை ஒரு புத்தகமா போடணும். தன் கையிலிருந்த ஒரு கட்டு கவிதைகளை பதிப்பாசிரியர் பாலராஜன் முன்னால் வைத்தான் மூர்த்தி. 'மூர்த்தி. கேள்விப்படாத பேரா இருக்கே ? ஏதாச்சும் புனைப்பெயர்ல கவிதைகள் எழுதறீங்களா ?' பாலராஜன் கேட்டார் இல்லை. என்னோட சொந்தப் பெயர்ல தான் எழுதறேன். பத்திரிகைகள்ல அதிகமா பிரசுரம் ஆனதில்லை. 'ம்.. அதான் புதுப...
More

காணவில்லை

'இங்கே தானே வெச்சிருந்தேன். எங்கே போச்சு ? காலைல கூட இருந்துதே' கண்ணன் கத்திய கத்தலில் பயந்து போய் ஓடி வந்தாள் வளர்மதி. 'என்னங்க ? என்ன வெச்சிருந்தீங்க ? கொஞ்சம் சத்தம் போடாம சொல்றீங்களா ? ' 'ஐநூறு ரூபாய் நோட்டு ஒண்ணு. இங்கே டி.வி பக்கத்துல தான் வெச்சிருந்தேன். காலைல ஆபீஸ் போற அவசரத்துல எடுக்க மறந்துட்டேன். இப்போ பாத்தா காணோம்.' கண்ணன் எரிச்சல் பட்டான். 'நானும் ஆபீஸ் போயிட்டு இப்போதான் வந்தேன். எனக்கென்ன தெரியும் நீங்க காசு எங்கே வெக்கிறீங்கன்னு. உங்களோட ஞாபக சக்தி தான் எனக்குத் தெர...
More

வெள்ளக்காரன் சாமி

'வெள்ளக்காரன் சாமி இறந்துட்டாராம்' - பரக்குன்று கிராமத்தின் தெருக்களில் இந்த செய்தி பரவியபோது தெருக்களை ஒருவித சோக இருள் கவ்விக் கொண்டது. கடையிலிருந்த முதியவர்களின் நினைவுகளெல்லாம் பழைய நாட்களை நோக்கி ஓடியிருக்க வேண்டும் அவர்களுடைய கண்களில் ஒரு திடீர்ச்சோகம் பற்றிக் கொண்டது. சந்தையிலும் அந்த செய்தி கூறு வைத்த மீன்களிடையே பரவியது. சில பெண்கள் கதறியழத் துவங்கினார்கள். பலர் உச்சுக் கொட்டினார்கள். சந்தையின் வியாபாரச் சந்தடிகளிலும் ஒருவித கனத்த மௌனம் வந்து தொற்றிக் கொண்டது. சற்று நேரத்துக்கெல...
More

கசப்புப் பதனீர்

  விஷயம் தெரியுமா உங்களுக்கு ? என்றபடி வந்தாள் செல்லம்மாள். செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை. எந்த நிறத்தில் எப்போது வாங்கியதென்று தெரியாத ஒரு இரவிக்கை. தினமும் நடக்கிற விஷயம் தான் இது. காலையில் ரேடியோ கேட்பது போல செல்லம்மாவின் செய்தியை பக்கத்து வீட்டிலிருப்போரெல்லாம் கேட்டாக வேண்டும். தினமும் சந்தையில் காய்கறியும், மீனும் வாங்கும் போதே காற்றுவாக்கில் வரும் எல்லா செய்திகளையும் கேட்டு வீட்டுக்கு வந்து ஒலிபரப்புவது தான் செல்லமாவின் முக்கியமான பொழுதுபோக்கு. என...
More

விபத்து

மதியம் மணி ஒன்று. அந்த அமெரிக்கச் சாலை தன் மேல் போர்த்தப் பட்டிருந்த பனி ஆடையை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தண்ணீராய்க் கழற்ற ஆரம்பித்திருந்தது. வெயில் அடித்தாலும் விறைக்க வைக்கும் குளிர் காற்றில் நிரம்பியிருக்க, வாகனங்கள் மணிக்கு நூற்றுச் சொச்சம் கிலோமீட்டர்கள் என்னும் வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன. தன்னுடைய டயோட்டா காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விமல். அருகிலேயே விக்னேஷ். பின் இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருந்தார்கள் ஆனந்தியும், ஹேமாவும். கார் உள்ளுக்குள் கதகதப்பாய் வெப்பக் காற்றை நி...
More

அவன்

  கடிகாரம் சத்தமிட்டு அழைத்தது. நல்ல தூக்கம், போர்வையை விலக்கப் பிடிக்கவில்லை விக்னேஷிற்கு. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். கால்வாசி கூட விரியாத இமைகளின் வழியே சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான் விக்னேஷ். ஆறு மணி. இன்னும் ஒரு பத்து நிமிடம் தூங்கலாம், யோசனையோடு  போர்வையை நன்றாகப் போர்த்தி கைகளைக் கட்டிக் கொண்டி பக்கவாட்டில் சுருண்டு படுத்தவனை தட்டி எழுப்பினான் அவன். எரிச்சலோடே கண் விழித்தான் விக்னேஷ். அவனே தான். கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி வந்து தொந்தரவு செய்து விட்டு, காணாமல் போய்...
More

மீண்டும் மீண்டும் தோல்வி

  ( கல்கி இதழில் வெளியான எனது சிறுகதைகளில் ஒன்று ) அமெரிக்காவின் அந்த சாலையில் அப்போது யாருமே இருக்கவில்லை, வெறிச்சோடிக் கிடந்தது அந்த 'பிரீ வே' என்று அழைக்கப்படும் சிக்னல்களே இல்லாத நெடும் சாலை. என் சிந்தனைகள் எங்கோ ஓட அதைத் துரத்திப் பிடிக்கும் வேகத்தில் என் வண்டியும் அதைத் தொடர்ந்து ஓடியிருக்க வேண்டும். கவனிக்கவேயில்லை, சட்டென்று என் காருக்குப் பின்னால் போலீஸ் வண்டியின் சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தபோது தான் பக்கென்று ஆகிவிட்டது. பிடிபட்டு விட்டோ ம் ! மனசுக்குள் சட்டென்று தி...
More

ஏலி ஏலி லெமா சபக்தானி

(திண்ணை - மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற, சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சிறுகதை) தன்னுடைய கையிலிருந்த வாட்சை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள்  அந்த இருவரும். சரியான காலத்துக்குத் தான் வந்திருக்கிறார்கள். இனிமேல் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். எங்கும் எந்தப் பிசிறும் நேரக்கூடாது. ஏதாவது தப்பிதம் நடந்தால் மரணம் தான். தப்பிக்கவே முடியாது' 'நாம் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டிலிருந்து வந்ததாக இங்கிருக்கு...
More

சைக்கிள்

ரண்டேல் மால் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் இல் அமைந்திருந்த அந்த வணிக வளாகம் அந்தப் பதினோரு மணி மதியப் பொழுதில் பரபரப்பாய் இருந்தது. ஆஸ்திரேலியா எனக்குப் புதுசு. அவசரமாக ஒருமாதப் பயணம் என்று என்னுடைய மென்பொருள் நிறுவனம் என்னை குண்டுக்கட்டாய்த் தூக்கி அடிலெய்ட்ல் எறிந்துவிட்டது. என்ன செய்வது ? வேலை என்று வந்துவிட்டால் இப்படிப்பட்ட அவசரப் பயணங்களைத் தவிர்க்க முடிவதில்லை. என்னுடைய மகளுக்கு பத்து மாதங்கள் தான் ஆகிறது அவளைப் பார்க்காமல் என்னால் ஒரு மாதம் தனியாக இருக்க முடியாது ...
More