நண்பன் என்பவன்..

  செல்லுமிடமெல்லாம் குட்டிகளைக் கவ்விச் செல்லும் பூனையாய் தூக்கித் திரிகிறாய் உன் வீர தீர பராக்கிரமங்களை. அமைதியின் சாலையில் அதிசயமாய் வரும் தூரத்து நண்பன் போல எப்போதேனும் வாய்க்கும் சுகமான இளைப்பாறுதல்களில் சிலுவை சாய்க்கிறாய். உன்னை செயற்கைப் புன்னகையுடன் எதிர்கொண்டு எதிர்கொண்டே என் நிஜமான புன்னகை மறந்து போய் விட்டது. எப்போது தான் புரிந்து கொள்வாய் ? சந்திப்பு என்பது பெருமைகளைப் பறைசாற்றும் பொதுக்கூட்டமல்ல என்பதை ?
More

பழைய நண்பர்கள்

நேர்கின்றன, பழைய நண்பர்களை எதேச்சையாய் சந்தித்துக் கொள்ளும் பரவசப் பொழுதுகள். கண்களில் மிதக்கும் குறும்புகளைத் தொலைத்தும், உரக்கப் பேசும் இயல்புகளைத் தொலைத்தும் புது வடிவெடுத்திருக்கிறார்கள் பலர் பலருடைய மனைவியர் பெயரில் கல்லூரி கால காதலியர் பெயர் இல்லை. ஒருவேளை குழந்தைகளின் பெயரில் இருக்கக் கூடும். ஒல்லியானவர்களை தொப்பையுடனும், குண்டானவர்களை ஒல்லிக்குச்சானாகவும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சாலையோர தேனீர் கடையில் டீ குடித்து நினைவு கிளறிய நிம்மதியில் விடை ...
More

கவிதை : ஒரு நண்பனுக்கு…

உனக்கு நான் அனுப்பிய கண்ணீர்த் துளிகளை உப்புத் தயாரிக்க நீ உபயோகித்துக் கொண்டாய். இருட்டில் நடந்துகொண்டே உன் நிழல் களவாடப்பட்டதாய் புலம்புகிறாய் பாறைகளில் பாதம் பதித்துவிட்டு சுவடு தேடி சுற்றிவருகிறாய். நீ பறக்கவிடும் பட்டத்தின் நூலறுந்ததை மறந்துவிட்டு வாலறுந்ததற்காய் வருந்துகிறாய். முதுமக்கள் தாழிக்குள் மூச்சடக்கி முடங்கிவிட்டு சுதந்திரக்காற்று சிறைவைக்கப் பட்டதாய் அறிக்கைவிடுகிறாய். உன் இறகுகளை உடைத்துவிட்டு சிறைகள் திறக்கவில்லையென்று வாக்குவாதம் செய்கி...
More

கவிதை : கூடா நட்பு

உன் ஊசிக்குத்தல்கள் இணைக்க என்றே நினைத்திருந்தேன் நீ நூல் கோர்க்காமல் குத்திக் கொண்டிருந்த சேதி தெரியாமல். நீயோ இன்னும் குத்திய இடத்திலேயே குத்திக் கொண்டிருக்கிறாய் என் கிழிசல் ஒட்டுப் போடப்படவில்லை. காயங்களின் காலங்கள் நீண்டபோது என் உறக்கம் கலைத்து எட்டிப் பார்த்தேன், நூல் இல்லா நிலையும் அறிந்தேன். காரணமற்ற காரணங்களுக்காய் என் முதுகைக் காட்டிக் கொண்டிருந்த அறியாமையால் இன்னும் கொஞ்சம் கூடிப் போனது வலி. நூல் கோர்த்துக் கொள் இல்லையேல் கிழிசலோடு எனை வாழவிட...
More

இரகசியம்

உன்னிடம் இரகசியங்கள் இல்லையென்றே கருதியிருந்தேன் அக்கணம் வரை. நீ சொல்லியவை எல்லாமே இரகசியங்கள் என்றும் பிரசுரிக்கத் தகுதியற்றவை என்றும் அக்கணம் தான் எனக்கு அறிவித்தது. இரகசியங்கள் இரசிப்பதற்கானவை அல்ல அவை குருதி தோய்ந்த வலிகள் என்பதையும் அக்கணமே தெரிவித்தது எனக்கு. இனிமேல் என்னிடம் சொல்ல உனக்கு இரகசியங்கள் இருக்கப் போவதில்லை. நானே உனக்கு ஓர் இரகசியமாகி விட்ட பிறகு.
More

நீயின்றி …

ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியும் போது வலி உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது. இதயம் துடிக்கும் ஓசை இடிவிழும் ஓசையாய் செவிகளை உடைக்கிறது. என் மன இருக்கையை நீ மடித்து வைக்கும் போது. நீ பற்றவைக்கும் பார்வைகளை என் மீது உரசிப் போடாமல் புறக்கணிக்கும் போதெல்லாம் எரிந்து போகிறேன். இத்தனையும் சொன்னபின்னும்...
More

ஐந்தாம் வகுப்பு நண்பன்.

ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன். ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும் பாதி தர தவறாதவன். வீட்டுப் பாடங்களை எழுத மறந்து போன நாட்களில் எல்லாம், ஆசிரியர் வரக்கூடாதெனும் என் பிரார்த்தனையில் தவறாமல் அவனும் பங்கெடுப்பதுண்டு. 'குளமாங்கா ' உடைத்துத் தின்றும், கடலை மிட்டாய் கடித்துச் சிரித்தும், புன்னை மரத்தடியில் புன்னக்காய் பொறுக்கிக் கோலி விளையாடியும், எங்கள் முதல் ஐந்தாண்டுக்...
More

நண்பா

'அதை நினைத்துச் சொல்லவில்லை... ' என்கிறாய்... ஆனால் இதைச் சொல்லும்போது கூட அதையே தான் நினைக்கிறாய். எதற்காகச் சொல்கிறாயோ 'அதற்காக இல்லை ' என்றே அமைதியாய் ஆரம்பிக்கிறாய். 'நான் எப்போதுமே... ' என்று இழுத்துப் பிடித்து நான் எப்படி இருக்கவேண்டுமென்பதை எனக்குள் அழுத்துகிறாய். உனக்கு எதெல்லாம் முக்கியமோ அதெல்லாம் முக்கியமில்லை என்ற முன்னுரையோடு முன்வைக்கிறாய்... அறிவுரை என்று ஆரம்பித்து சில கட்டளைகளை விட்டுச் செல்கிறாய். நான் அப்படியில்லை என்று சொல்லும் பக்கங்களில் ...
More

நண்பன்

ஒரு காலத்தில் அவன் என் பிாியத்தின் பிரதிநிதி நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள் திணிக்க முடியாத தோழன். என் பள்ளிக்கூட நாட்களின் பல்லாங்குழிச் சினேகிதன். தவளைக்குளத்தில் நீச்சலடித்து, தூண்டில் நுனியில் மண்புழு சொருகி ஓடைக்கரையில் மீன் பிடித்து அணில் மேல் கோடு வரைந்தது யாரென்று விவாதம் செய்யும் பொழுதுகள் வரை என் விரல் தொட்டே நடந்தவன். ஒரு விடலைப்பருவத்தின் விளங்காப் பொழுதில் காரணமே இல்லாமல் சண்டையிட்டோம். முகம் இறுக்கி கரம் முறுக்கி முடிச்சிட்டு முடிச்சிட்டு இருட்டுக...
More

நட்புக் கவிதைகள்

"எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! " என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ? ஃ அப்பப்போ போன் பண்ணுடா… எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு “கண்டிப்பா” என நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே. ஃ பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன. “நேற்று கூட பேச நினைத்தேன்” என யாரோ பேசிக் கடக்கிறார்கள் செல்போனில் ஃ அவளா இது ? மீன் வாங்கிச் செல்லும் பெண்ணிடம் கொஞ்...
More