தினத்தந்தி வாரம் 6 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் வைரஸ்கள் மிரட்டலாய் வடிவெடுத்திருக்க இன்னொரு காரணம் அது பரவக்கூடிய வேகம். அல்லது அது பரவலாம் என எதிர்பார்க்கப்படும் வேகம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 17.6 மில்லியன் அமெரிக்கர்கள் சுமார் 8.6 பில்லியன் டாலர்களை மொபைல் வைரஸ், மொபைல் ஏமாற்று அழைப்புகள் போன்றவற்றால் இழந்திருக்கிறார்கள் என்கிறது ட்ரூகாலர் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று. பத்து ஆப்ஸ் களில் ஒன்றில் ஏதோ ஒரு மால்வேர் இருக்கிறது என கடந்த ஆண்டு நடந்த 'சீட்டா மொபைல்' ஆய்வு ஒன்று தெரிவித்தது. அதில் அறுபது சதவீதத்துக்கும் மேலானவை...
More

தினத்தந்தி வாரம் 4 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ? ஒரு எளிய வழி சொல்கிறேன். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களின் பட்டியலுக்கு செட்டிங்ஸ் வழியாகச் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் தரவிறக்கம் செய்யாத ஏதேனும் ஒரு ஆப்ஸ் அதில் இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அது வைரஸின் வேலையாய் இருக்கலாம். நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் எதையும் புதிதாக நிறுவவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்ட சூழலில் கூட உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உண்டு. அது ...
More

தினத்தந்தி வாரம் 3 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா ? அப்படியென்றால் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், உங்கள் மொபைல் போனிலுள்ள தகவல்களையெல்லாம் எப்படி சுடலாம் என எங்கோ ஒருவர் மென்பொருட்களால் சில்மிஷ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். அவர்கள் முக்கியமாகக் குறி வைப்பது உங்கள் மொபைல் போனில் இருக்கும் நண்பர்களின் செல்போன் எண்களை. உங்கள் கணினிக்குள் வைரஸை எப்படியாவது நுழைத்து விட்டால், பின்னர் உங்கள் போனின் தகவல்களெல்லாம் அவர்கள் கைக்குப் போய்விடும். நீங்கள் அனுப்பாமலேயே நண்பர்களுக்கு...
More

தினத்தந்தி வாரம் 2 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

கம்ப்யூட்டர் வைரஸ் ! எனும் வார்த்தை முதலில் அறிமுகமான காலத்தில் எல்லோரும் பயந்தார்கள். அது கணினியின் கீபோர்ட் வழியாகவும், மானிட்டர் வழியாகவும் மக்களைத் தாக்கும் என நினைத்தார்கள். அதனால் கிளவுஸ் போட்டுக்கொண்டு கீபோர்டைப் பயன்படுத்தியவர்கள் ஏராளம். ஃப்ளாப்பி டிஸ்கை ஏசி காற்றில் காட்டி விட்டு கணினியில் போடுங்கள் என அறிவுறுத்தியவர்கள் பலர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ் என்பது மென்பொருள் என்பதும், அது பன்றிக் காய்ச்சல் போல கண், காது, மூக்கு, கைவிரல் வழியே பரவாது என்றும்...
More

ரகசியத்தை விற்கும் வாட்ஸப்.

கடந்த சில மாதங்களாக வாட்ஸப் பயனர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்த ஒரு செய்தி தகவல் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. வாட்ஸப் தகவல்களையெல்லாம் ஃபேஸ்புக் எடுத்துக் கொள்ளப் போகிறது எனும் அச்சம். இந்த அச்சம் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் நிறுவனத்தை 2014ல் வாங்கியதில் இருந்தே மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது தான். சமீபத்தில் வாட்ஸப் அதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டது. தன்னை விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்துக்கு தன்னிடமிருக்கும் தகவல்களைக் கொடுக்கப் போகிறேன் என்பது தான் அது. இதில் அ...
More

தினத்தந்தி வாரம் 1 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

செல்போன்கள் பேசுவதற்கானவை எனும் காலம் மலையேறிப் போய்விட்டன‌. செல்போனில் பேசவும் செய்யலாம் என்பது தான் இப்போதையை புது மொழி. காரணம் இன்றைய செல்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் எனும் சின்ன எல்லையிலிருந்து கையடக்கக் கணினி எனும் நிலைக்கு இடம்பெயர்ந்தாகி விட்டது. வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யணுமா ? சோபாவில் அமர்ந்து கொண்டே ஷாப்பிங் செய்யணுமா ? செல்போன் பில், எலக்ட்ரிக் பில், கேபிள் டிவி பில் என பில்களையெல்லாம் கட்டி முடிக்கணுமா ? ஊருக்கு போக டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், விமான டிக்கட் ஏதாச்சும் புக்...
More

உலக அதிசயங்கள் : மீட்பர் கிறிஸ்து சிலை

மீட்பர் கிறிஸ்து சிலை (Christ the Redeemer) பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இயேசு சிலை புதிய உலக அதிசயமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் 130 அடி. எழுநூறு டன் எடையுள்ள இந்த வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான். இந்த சிலை எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் ! ...
More

டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்

இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் !  இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்...
More

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன. பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது ! ...
More

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

    நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான...
More