இண்டர்வியூ

வாணியைத் தவிர அந்த வரவேற்பறையில் இன்னும் ஏழெட்டு பேர் இருந்தார்கள். மெயின்பிரேம் என்னும் கணிப்பொறி சார்ந்த நேர்முகத் தேர்வுக்காக எல்லோரும் பதட்டம் பூசிய முகத்தோடு காத்திருந்தார்கள். "நீங்க இண்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க ?" அருகிலிருந்த இளைஞனிடம் வாணி மெதுவாய்க் கேட்டாள். 'என்னங்க கேள்வி இது ? புதுசா ஐயர்ன் பண்ணின வெள்ளைச் சட்டை போட்டுட்டு வந்திருக்கேன். இண்டர்வியூ நடக்கிற ரூமுக்கு வெளியே காத்திருக்கேன். இண்டர்வியூவுக்கு வராம கிளிஜோசியம் பாக்கவா வந்திருக்கேன். குளிச்சிட்டிருக்கிறவனைப் பார்...
More

சம்பள உயர்வு

சீக்கிரம் வாடா.. மணி பத்தரையாச்சு. காஃபி டைம். செல்போனில் கூப்பிட்டான் நட்டு என்கிற நடேசன். இப்போ தாண்டா வந்தேன் ஆபீசுக்கு. நீ போ நான் அப்புறமா வரேன். ஜெயராஜ் தயங்கினான். 'டேய் வெண்ணை. நீ எண்ணிக்குதான் சீக்கிரமா வந்திருக்கே. அதான் இப்போ ஆஃபீசுக்கு வந்தாச்சுல்ல, கீழே வா காண்டீனுக்கு.. முதல்ல காஃபி சாப்பிட்டு ஒரு தம் போட்டுட்டு அப்புறமா பாத்துக்கலாம் உன்னோட வேலையை' நடேசன் தொடர்ந்தான். நடேசனுடைய தொந்தரவு பொறுக்க முடியாத ஜெயராஜ், தனக்கு முன்னால் இருந்த கணிப்பொறியை லாக் செய்து விட்டு கேண்ட...
More

மிருகத்துவம்

  மெதுவாக கையை நீட்டி முதுகைச் சொறிய வால் தட்டுப்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பினேன். வால் தான். ஐயோ என்னவாயிற்று எனக்கு என்று நடுங்கியபோது தான் கவனித்தேன். கைகளில் எல்லாம் கொத்துக் கொத்தாய் முடி... ஓ... நோ, குரங்காய் மாறிவிட்டிருந்தேன் நான் !! எப்படி? எப்படி ?? வித்யா..... அலறினேன். வித்யா ஓடி வந்தாள். அவளும் குரங்காய் மாறி இருந்தாள். அவளுடைய வயிறைத் தொற்றியபடிக் கிடந்தான் எங்கள் ஆறு மாதக் குழந்தை அருண். மெல்ல மெல்ல ஆடி ஆடி நடந்து என்னருகே வந்து கீர்ச்ச்ச்... கிரச்ச்ச் என்கிறாள். ஆனால் என...
More

கடவுள் கேட்ட லிஃப்ட்

சார்.. என்னை தேனாம்பேட்டை வரை லிப்ட் தர முடியுமா ? காரை வழிமறித்துக் கேட்ட சிறுவனின் கண்களில் இருந்த கபடமின்மை என்னை கட்டிப் போட்டது. கதவைத் திறந்து விட்டேன். முன் இருக்கையில் வந்து அமர்ந்து புன்னகைத்தான். யாரு தம்பி நீ ? இங்கே சைதாப்பேட்டையிலே தான் தங்கியிருக்கிறாயா ? தேனாம்பேட்டையில் வேலை பார்க்கிறாயா ? காரை மெல்ல ஓட்டிக் கொண்டே கேட்டேன் நான். நான் கடவுள். சிறுவன் சொன்னான். நான் சிரித்தேன். கடவுள் ந்னு உனக்கு பேரு வெச்சிருக்காங்களா ? புன்னகைத்துக் கொண்டே கேட்டேன். கடவுள் என்ன...
More

அறிவியல் புனைக் கதை : நவீனன்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை மாலை 6 மணி. “யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே ... “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்ல...
More

சிறுகதை : இரண்டாவது சாவு

( என் நண்பனின் கல்லூரியில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட சிறுகதை) சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி .... எதிரே இருந்த கல்லூரி கேண்டீன் சுவரில் மோதியது படுவேகமாக.... என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷும், பின்னால் அமர்ந்திருந்த விக்கியும். காண்டீன் முன்னால் கட்டிட வேலைக்காக மணலும், கருங்கற்களும் கொட்டப்பட்டிருந்தது. பின்னால் இருந்த விக்கி மணல் மீது விழுந்து சிறிய ...
More

சியர்ஸ் !!!

    ஐந்தாறு கோப்பைகள் செல்லமாய் மோதிக் கொள்ள உயர் ரக வைன் கோப்பைகளின் விளிம்பைத் தாண்டி வழிந்தது. மேஜை முழுதும் கமகமக்கும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பியிருந்தன. தங்கள் மெல்லிய தொப்பைகளையும், பணக்காரத் தனம் புரளும் ஆடைகளையும் தட்டி விட்டுக் கொண்டு சிரித்தார்கள். 'லைஃப் ரொம்ப ஜாலியா இருக்கு... நீங்க எல்லாம் இங்கே வந்து டைம் ஸ்பென்ட் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம்' இப்படி அடிக்கடி விருந்து கொடுக்கிற உனக்கு தாண்டா நாங்க நன்றி சொல்லணும். வாழ்க்கை அனுபவிக்கறதுக்காக கடவுள் கொடுத...
More

அறிவியல் புனைக் கதை : உண்மையா அது என்ன ?

இன்று தனக்கு முன்னால் கூடியிருந்த பதினேழு விஞ்ஞானிகளின் முன்னிலையில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி விளக்கத் துவங்கினார் வர்மா. இந்தக் கருவி ஆராய்ச்சியாளர்களுக்காகவே கண்டுபிடிக்கப் பட்ட கருவி. வரலாறுகளைத் துருவித் திரிபவர்களுக்கு இந்தக் கருவி ஒரு கடவுள் என்று கூட சொல்லலாம். உதாரணமாக அகழ்வாராய்ச்சி போன்றவற்றில் கிடைக்கும் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு அந்தக் காலகட்டத்தை துல்லியமாகவும் விரிவாகவும் இந்தக் கருவி மூலம் கண்டுபிடிக்கலாம். வெறும் ஊகங்கள் எனும் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல வரலாற்று ...
More

சிறுகதை : யோவ்… இண்டர்நெட் வேலை செய்யலைய்யா…

  "சுவிட்சை ஆன் பண்ணியிருக்கீங்களா சார் " மறு முனையில் பேசிய கஸ்டமர் சர்வீஸ்காரனுடைய பேச்சைக் கேட்கக் கேட்க கிருபாவுக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டு பதில் சொன்னான். "ஆன் பண்ணியிருக்கேன்" "உங்க மோடம்ல லைட் எரியுதா ?" "சுவிட்சைப் போட்டா லைட் எரியாம மோடமேவா எரியும்?" "சார்… பிளீஸ் சொல்லுங்க.. எத்தனை லைட் எரியுது ? "நாலு லைட்… பச்சை பச்சையா எரியுது" "அப்போ ஏதோ மிஸ்டேக். இரண்டாவதா இருக்கிற லைட் மஞ்சள் கலரா எரியணும்" "பாஸ்… இதையெல்லாம் நான் லாஸ்ட் ஒன் வீக்கா உங்க கிட்டே டெ...
More

அம்மாவைப் பாக்கணும்

"லேய். ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ? ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ? " தங்கசுவாமி மாமாவின் குரலில் கவலை இருந்தது. எதுவுமே பேசாமல் போனை வைத்தான் வசந்தன். பொதுவாகவே மாமாவின் பேச்சை அடுத்த வினாடியே மறந்து விட்டு வேலையைப் பாக்கப் போய்விடுவான். ஆனால் இன்று ஏனோ மனசு ரொம்பவே வலித்தது. ஊருக்கும் தனக்கும் உள்ள ஒரே உறவு தங்கசுவாமி மாமாவின் அவ்வப்போதைய அழைப்பு தான். சில வினாடிகள் நலம் விசாரித்தல், விஷயம் பகிர்தல் அதைத் தாண்டி அந்தப் பேச்சில் எதுவுமே இருக்காது. எப்...
More