தலைப்பிரசவம்

காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம் காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது. நாளை மனைவிக்கு பிரசவம் என்று நாள் சொல்லியிருந்தார்கள், அதனால் தான் இன்று மனைவி பிரியாவுடன் வந்திருந்தான் விக்னேஷ் சிரிப்பும் கனவுகளுமாக வந்து செக்கப் பண்ணியபோது தான் டாக்டர் முகம் மாறத் துவங்கியது எதிர்பார்க்கவே இல்லை திடீரென்று இப்படி சொன்னபோது இடிவிழுந்தது போல் இருந்தது டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க ? ஒவ...
More

மெளனமாய் ஒரு மரணம்.

  தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்... குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒட்டுமொத்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு வக்கீலை ஏற்பாடு செய்து, வாதிட வைத்து எப்படியாவது விக்னேஷை வெள்ளிக்கொண்டு வரவேண்டுமென்று கத்திமேல் உட்கார்வது போல் ஓரமாக அமர்ந்திருந்த சந்துரு தலையிலடித்துக் கொண்டான். இன்று தீர்ப்பு நாள்... கண்டிப்பாக தீர்ப்பு விக்னேஷ்க்கு சாதகமாக வரும்...
More

ஆட்டோ வேளச்சேரி வருமா ?

  'என்னது நூற்றைம்பது ரூபாவா ? நான் ஆட்டோவை விலைக்கு கேக்கலேப்பா. வேளச்சேரி வரைக்கும் போகணும், அதுக்கு கேட்டேன்' எரிச்சலில் சொன்னேன் நான். 'வேளச்சேரி வரைக்கும் போகணும் இல்லையா சார். இன்னும் சரியா விடியக் கூட இல்லை. திரும்பி வரதுக்கு சவாரி கிடைக்காது சார். நியாயமா தான் கேட்டிருக்கேன்' ஆட்டோக்காரன் எத்தனையாவது முறையாக இதே வார்த்தைகளைச் சொல்றானோ ? நாகர்கோவிலிலிருந்து ஒரு தனியார் பஸ்ஸில் ஏறி அதிகாலையிலேயே கிண்டியில் வந்து இறங்கியாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள் ஓடிக...
More

வழியனுப்பல்

  அடுத்தவாரம் அமெரிக்கா செல்லவேண்டும். புராஜக்ட் மேனேஜர் அவசர அவசரமாய் அழைத்துச் சொன்னபோது விஜயால் நம்ப முடியவில்லை. ஏறக்குறைய இல்லை என்றாகியிருந்த வாய்ப்பு அது, திடீரென மீண்டும் உயிர்கொண்டு எழுந்திருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பே அமெரிக்கன் கவுன்சிலேட்டில் காத்துக் கிடந்து விசா வாங்கியாகிவிட்டது. இதோ அதோ என்று புறப்படும் காலம் வந்ததும் புராஜக்ட் கேன்சலாகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். அதன் பின் வாய்ப்பு வரும் வருமென்று காத்திருந்து கடைசியில் இனிமேல் இப்போதைக்கு அமெரிக்காவை...
More

பாசம்

'மகேஷ் இன்னும் வரலையா ? அவன் வராம பொணத்தைத் தூக்கலாமா ?' கூட்டத்தில் யாரோ கேட்டார்கள். அழுது அழுது சிவந்துபோன கண்களுடன் நித்தியானந்தத்தின் குடும்பமே அவருடைய பிணத்தைச் சுற்றி உறைந்து போய் உட்கார்ந்திருந்தது. அவருடைய மூத்த மகன் மகேஷ் மட்டும் இன்னும் வரவில்லை. சென்னையில் ஒரு நல்ல கம்பெனியில் கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தான் மகேஷ். அவனுக்கு எல்லாமே அவனுடைய அப்பா என்றுதான் இருந்தது. ஆனால் அவன் இன்னும் வரவில்லை. 'தகவல் சொல்லிட்டீங்களா ?' 'காலையிலேயே சொல்லிட்டோம். ஆனா அவனுக்கு ஏதோ அவசர...
More

பிழையற்ற பிழைகள்

  இன்னும் கொஞ்ச நேரத்தில் இரயில் வண்டி சென்னையை அடைந்து விடும். நீண்ட நாட்களுக்குப் பின்பு சென்னை வருகிறேன். அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை வராமலேயே ஊருக்குப் போயிருந்தேன். சென்னை இரயில்வே நிலையத்தில் மாமாவும் குடும்பமும் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவேளை வரலேண்ணா மாம்பலத்துல இறங்கி ஆட்டோ பிடிக்க வேண்டியது தான். ஆட்டோ சார்ஜ் இப்போ எவ்வளவோ ? பதினான்கு மணி நேரப் பயணம் என்பது மிகவும் சலிப்பான பயணம் தான். இரயிலில் என்பதால் கொஞ்சம் தூங்கவாவது முடிகிறது. பஸ் என்றால் அவ்வளவு தா...
More

சிறுகதை : சர்ப்ப தோஷம்

அந்த ஆலமரத்தின் விழுதுகள் போல தோன்றும் பல உண்மையில் விழுதுகள் அல்ல, பாம்புகள் !! என்னும் பயம் பாபுவுக்கு சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டுமல்ல அந்த கிராமம் முழுவதுக்குமே அந்த தகவல் தான் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருந்தது. எனவே அந்த ஆலமரம் அந்த ஒட்டு மொத்த கிராமத்துக்குமே ஒரு பயத்தின் சின்னமாக நிமிர்ந்து நின்றது. ஆலமரத்தின் கீழே இருந்த சிறு சிலையில் நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது. ஆலமரத்தின் இடது பாகத்தில் சின்னதாய் ஒரு நாகராஜா கோயில். கிராமத்தில் நாக தோஷம் ஏதும் வந்த...
More

இன்னொரு ஜனனம் – ஒரு அறிவியல் புனைக் கதை

வினயன் சொல்லச் சொல்ல விழிகளில் அதிர்ச்சியும், வியப்பும் ஒன்று சேர இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷனி. வினயன் ஒரு சின்னச் சிரிப்போடு தொடர்ந்து கொண்டிருந்தான். மனிதனுடைய மூளையில் எதை வேண்டுமானாலும் எழுதலாம். அவன் படிப்பவை, கேட்பவை எல்லாமே அவனுடைய மூளையின் வெவ்வேறு பாகங்களில் பதிவாகி இருக்கும் அவற்றை இன்னொரு மனிதனின் மூளைக்குள் பிரதியெடுக்க என்னால் முடியும். அது தான் என்னுடைய ஆராய்ச்சியின் முடிவு. உனக்கு இப்போது சங்கீதம் தெரியும், ஆனால் பரதநாட்டியம் பற்றி எதுவும் தெரியாது, ஆன...
More

பேய்

வீட்டின் கூடத்தில் அமர்ந்திருந்தாள் அந்தக் கிழவி. அவளுக்கு முன்னால் ஏற்றப் பட்டிருந்தது ஒரு குத்துவிளக்கு. விளக்கு எரிந்து கொண்டிருக்க, விளக்கின் மேல் பகுதியை வலதுகையால் பிடித்துக் கொண்டே கண்களை மூடி மெளனமாய் இருந்தாள் அவள். அவளுக்கு முன்னால் அந்த வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் ஒரு அரைவட்ட வடிவில் அமர்ந்திருந்தார்கள். கிழவி திடீரென மெளனத்தைக் கலைத்தாள். 'குஞ்ஞன் யாரு ?' கண்களைத் திறக்காமலேயே கேட்டாள் கிழவி. 'அவரு எங்க தாத்தாவோட அண்ணன். செத்துப் போயி ஏழெட்டு வருஷம் ஆச்சு' 'வள்ளியம்மா ?' ...
More

பதினோராவது பொருத்தம்

பளார்... என்று கன்னத்தில் அறை விழும் என்று எதிர்பார்த்தாள் ஆனந்தி. கோபக்குரல்களில் வீடே உடைந்து விழும், வானுக்கும் பூமிக்குமாய் அப்பா குதிக்கும் போது கூரையில் இடிக்கக் கூடும் என்று எதிர் பார்த்தாள்... எதுவும் நடக்கவில்லை. நான் சொன்னதை சரியாக விளங்கிக் கொண்டிருக்க மாட்டார்களோ ? ஏன் இன்னும் ஒரு அதிர்ச்சிப் பார்வை கூட அப்பா வீசவில்லை ? கேள்விகள் ஆனந்தியின் மனதில் கடலலை போல அரித்துக் கொண்டிருந்தது. "பிள்ளையாண்டான் பேரென்ன ?" - மெதுவாகக் கேட்டார் வேதாச்சலம். அழுத்தம் திருத்தமாக நெற்றியில் பூ...
More