உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு !

நேர்மையாய்  இருங்கள் “எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது. எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை. நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் நெட்டோட்டம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம். அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடச...
More

மன்னிச்சுக்கோங்க‌

மன்னிப்பு மகத்துவமானது ! வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு நாள் சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வா...
More

ஸ்மார்ட்டா வேலை பாருங்க.

  வாழ்க்கை என்பது பாரம் இழுக்கும் பாதையல்ல. சிந்தனைகளைக் கூர் தீட்டி பாரங்களையும் வரங்களாய் மாற்ற வேண்டிய பயணம். “ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கைல முன்னேற முடியும்” இப்படி ஒரு வாக்கியத்தை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோருமே கேட்டிருப்போம். ஆனால் இன்றைய உலகம் இந்த சிந்தனையை விட்டுக் கொஞ்சம் விலகியிருக்கிறது. “கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்” என்கிறது நவீன உலகம். “ஸ்மார்ட் வர்க்” என இந்த நுண்ணறிவு வேலையைக் குறிப்பிடுகிறார்க...
More

நுனிப்புல் மேயாதீங்க

சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடமும் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும் போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன் பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது ஸ்பெஷாலிடி என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ் சோறாகிப் போகும். கொஞ்சம் ஆர அமர உட்கார்ந்து உங்களுடைய “பெஸ்ட்” திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய ...
More

மரியாதை மனசுல மட்டுமல்ல‌

  ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு முன்னால் அமர்வதற்கே இளம் வயதினர் ஆயுள் காலத் தயக்கம் காட்டுவார்கள். அப்பாவை “ஐயா” என பணிந்து கைகட்டி மதிக்கும் பழக்கம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வ சாதாரணம். இப்போதைய ஹைடெக் யுகம் மரியாதையைத் தூக்கி வெளியே வீசிவிட்டதோ எனும் கவலை எழுகிறது. கிராமத்துப் பெரியவர்களுக்கும், முதியவர்களுக்கும் தலை முறை தலைமுறையாக தரப்பட்டுக் கொண்டிருந்த மரியாதையிலும் விரிசல் விழுந்திருக்கிறது. அவர்கள் வேண்டாத சுமைகளாகப் பார்க்கப்படும் துயரமான நிலையும் உருவாகிவிட்...
More

வல்லினம், மெல்லினம், பாலினம்.

  இளம் வயது என்று சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு உற்சாகம் கரை புரள்கிறது. இளமை எதையும் சாதிக்கும் வயது. தொழில் நுட்பங்களின் பின்னணியில் பரபரப்பதும், வீரத்தின் முன்னணியில் பயணிப்பதும், சமூகத்தின் மையத்தில் இயங்குவதும் இளமையே ! திகைப்பூட்டும் வேகமும், வியப்பூட்டும் விவேகமும் கலந்த கலவை தான் இளமை. “பத்து இளைஞர்களை என்னிடம் தாருங்கள், உலகை மாற்றிக் காட்டுகிறேன்” எனும் விவேகானந்தரின் கூற்று நூறு முறையேனும் நமது காதுகளை எட்டியிருக்கும். முதுமைக்கும் இளைமைக்கும் ஒரே ஒரு வேறு பாடு தான். இள...
More

சேமிப்பதல்ல, செலவு செய்வதே புது டிரென்ட்

  “நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே” என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. உங்களுக்கு எதிரே...
More

பாராட்டலாமா ? வேண்டாமா ?

  “மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. “இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிற...
More

கூடப் பொறந்த பாசம் !

கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளை “கூடப் பொறந்ததுக” என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம். சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும்  ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள்.  இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது த...
More

கூடா நட்பு கூடாது !

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா – என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம். நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நம...
More