கவிதை : வாழ்வின் மகத்துவம்

அடுத்தவர் வாழ்க்கை அமைதியாய் கழிவதாகக் கருதிக் கொள்கிறது ஒவ்வொருவர் வாழ்க்கையும். ஒப்பீடுகளின் உரசல்களால் எரிந்து கொண்டிருக்கின்றன உறவுகளின் காப்பீடுகள். அழுகையையும் இயலாமையையும் புதைக்க எல்லோரும் தேடுகின்றனர் சதுர அடிகளில் சில அறைகள். திரைச் சீலைகளும் தாழிட்ட சன்னல்களும் மம்மிகளை உள்ளுக்குள் நிறைத்து பூங்காக்களை வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன எப்போதேனும் ஆறுதல் தேடி அடுத்த வீட்டுக் கிணற்றடியில் அமரும் பெண்களும், எதேச்சையாய் பார்களில் சந்தித்துக் கொள...
More

கவிதை : ஏதேனும் ஓர் சொல்

ஏதேனும் ஒரு செயல் சந்தேகப் பொறியை சொல்லாமல் பற்ற வைக்கிறது. ஏதேனும் ஒரு சொல் சந்தேகப் பொறியாய் மாறி எலி வாலுக்காய் வாய் திறக்கிறது. சொல் கற்பனையில் வாக்கியங்களை இடைவிடாமல் இணைத்து பெருங்கதையாய் மாற, செயல் நிகழாதவற்றை நிதமும் படம்பிடித்து நீள் படமாயும் நிரம்பி வழிகிறது. அந்த செயல் குறித்து அவளோ, அந்தச் சொல் குறித்து அவனோ பேசிக் கொள்ளாத கவலையில், மௌனப் படுக்கைக் கால்களருகே கவிழ்ந்து படுத்து கதறி அழுகின்றன அந்த அப்பாவிச் சொல்லும் செயலும் .
More

கவிதை : தொலை நகரம்

இன்னும் கொஞ்ச தூரம் தான் கால்களைக் கொஞ்சம் வலுவாக்கு. அடுத்தவன் கனவுகளுக்குள் படுத்துக் கிடக்கும் உன் பார்வைகளின் சோர்வகற்று. அறுவடைக் காலத்தில் நண்டு பிடிப்பதை விட கதிர் அறுப்பதல்லவா அவசியம், வா, இன்னும் கொஞ்ச தூரம் தான். அதோ தெரிகிறதே ஓர் வெளிச்ச பூமி அங்கு தான் செல்லவேண்டும். பரிச்சயமான பிரதேசமாய் தோன்றுகிறதா ? அது வேறெங்கும் இல்லை உன்னுள் தான் இருக்கிறது. நீதான் வெகுதூரம் சென்று விட்டாய்.
More

கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்

ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு. நானாய் ஜனிக்கும் ஜனனம். எனக்குள் ஏராளம் சிலந்தி வலைச் சிந்தனைகள், அறுக்க அறுக்க அனுமார் வாலாய், வெட்ட வெட்ட இராவணத் தலைகளாய் சளைக்காமல் முளைக்கின்றன. என் ஜனனத்தின் ஜன்னலோரம் நான் கண்விழித்தபோதே இமை மூடிக் கிடந்தது எனக்கான வாழ்க்கை. என் பால்ய வயதுப் பருவத்தின் அரை டிராயர் அவசர காலங்களில், என் கால்களுக்குக் கீழே ஒட்ட வைக்கப்பட்டிருந்தன எனக்கான பாதைகள். என் கல்லூரி கால நிறச் சாலைகளில் என் சிறகுகளுக்கான சாயம் தனிக் குடுவைகளில் காத்...
More

கவிதை : பிரமிப்பு

அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த ஆழமாய், மிரட்டலாய் தோன்றியது ஆலமர நிழலில் கிடந்த அந்த சர்ப்பக் குளம். தென்னை மரத்துக்கு இத்தனை உயரமா ? பேருந்துகள் இத்தனை பெரிதா ? எங்கள் வயல் தான் எம்மாம் பெரிசு, எங்கள் கிணறு தான் என்ன ஆழம். எல்லா ஆச்சரிய முடிச்சுகளும் என் வாலிபப் பருவத்தில் பட் பட்டென்று விலக சட்டென்று சின்னதாகிப் போனது. முடியாது எ...
More

கவிதை : கண்ணாடிகளற்ற அறைகள்

கண்ணாடிகளற்ற அறைகள் இறுக்கமாய் இருக்கின்றன. நெரிசல் பேருந்தில் நெருக்கி நுழையும் பெரியவரைப் போல அவஸ்தையாய் இருக்கின்றன அவை. மழலைகள் அழகு காட்டி ஆடிப் பாடும் பரவசமும், அழகைப் பார்த்து கர்வம் கூட்டும் கன்னியரின் பெருமிதமும் இன்றி இடிபாடுகளுக்கிடையே மூச்சுத் திணறும் இயலாதவன் போல இருக்கின்றன அவை. எட்டிப் பார்க்கையிலெல்லாம் நான் உயிருடன் இருப்பதை உறுதி செய்கின்றன கண்ணாடிகள் கடந்த பின்போ பிம்பங்களை உதிர்த்து ஏதுமறியாமல் நிற்கின்றன சிக்னலில் கையூட்டு வாங்கும் க...
More

கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி !

கவலைகளின் மீது கல்லெறியக் கற்றுக் கொண்டேன். நேற்றுவரை என் இதயத்துக்குள் விழுந்த இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு சோகத்தை மட்டுமே ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில். புரிந்து விட்டது... வாழ்க்கை என்பது கவலை ஆணிகளால் நெய்யப்படும் சவப்பெட்டி அல்ல. அதோ அந்த நீள் கடலின் சிறு துளி நான்... இதோ இந்த மணல் மேட்டின் ஒரு அணு நான்... என் கரங்களின் ரேகையைப் பிடுங்கி விட்டு பூமத்திய ரேகையைப் புகுத்த முடியாது. அழுத்தமாய் இழுத்தாலும் அட்சக்கோடுகள் அறுந்து விழப்போவதில்லை ...
More

முதல் வரி..

முதல் வரி எழுதுவதற்கு ரொம்பவே சிரமப் படுகிறேன். வாசலை வெறுத்து யாரும் திரும்பிச் சென்று விடக்கூடாதெனும் படபடப்பில் வாசல்தோரணத்தை மயில்பீலித் தன்மையில் வரைகிறேன். ஆனாலும் பலருக்கு மாவிலை வாசலும், சிலருக்கு அலங்காரமற்ற வாசலும் தான் அதிகம் பிடிக்கிறது. துலக்கித் துலக்கி வைக்கும் என் கவிதைகளை வாசல்களின் வளைவு கண்டு யாரும் விலக்கி விடக்கூடாதெனும் கவலை எனக்கு. நான் வாசல் கட்டியபின், உள்ளே கவிதைப் பந்தலை கவிதையே கட்டிக் கொள்கிறது. என் பளிங்குத் தரைகளில் பலர் பாத...
More

கவிதை : வாடகை அலைகள்

உன் வாழ்க்கை உனக்கான விருது, யாரோ தைத்த பொருந்தாத சட்டைக்குள் நீ நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன ? நிலம் மாறி நட்டாலும் மல்லி வாசம் மாறி வீசுமா ? தோட்டக் காரன் நட்டாலும் வீட்டுக் காரன் வைத்தாலும் ரோஜா பாகுபாடின்றி பூத்திடாதா ? உன்னை நீயே வனைந்து முடி, உன்னை விட அதிகமாய் உன்னை நேசிப்பவன் யார் ? உன்னை விட அழகாய் உன் இயல்புகள் அறிந்தவன் யார் ? உள்ளுக்குள் முத்திருக்கும் உண்மையை சிப்பியை விட அருகில் சீக்கிரமே உணர்வது யார் ? உன் வாழ்க்கையின் அடித்தளத்தை நீயே அ...
More

கவிதை : ஒரு துளித் தனிமை

  நேசமாய்த் தான் இருந்தேன். ஒவ்வோர் இதழ்களிலும் மெல்லியத் தழுவல், செடியின் கால்களுக்குக் காயம் தராத தண்ணீர் பாசனம். ஆனாலும் பூக்கள் புகார் செய்ததில் என் தோட்டக்காரன் வேலை தொலைந்து போய் விட்டது. எந்தச் சிறகையும் சிக்கெடுக்கும் நேரத்திலும் சிதைத்ததில்லை. எந்த அலகிலும் முத்தம் இட மறந்ததில்லை. இருந்தாலும் அத்தனை பறவைகளும் என்னை விட்டுப் பறந்து எங்கோ போய்விட்டன. நீந்தி வந்து இரைகொத்தும் என் நீச்சல் குள மீன்கள் கூட சத்தமின்றித் தோணியேறி அடுத்த ஆற்றுக்கு அவசரமாய் ...
More