க‌விதையும், அழகும்

எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. பிரசவத்தின் வலியை சிரித்துக் கொண்டே சொல்வதும், சிரிக்கும் குழந்தையை அழுது கொண்டே அறிவிப்பதும் சாத்தியமில்லை. குருதிப் போரையும் கண்ணீர்ப் பூவையும் ஒற்றைச் சாடிக்குள் சொருகி வைக்கவும் முடிவதில்லை. பேனாவும் காகிதமும் விரலும் மாறுவதில்லை தான். வலிகளும் வரிகளும் மாறி மாறித் தானே வருகின்றன. எல்லா கவிதைகளும் அழகாக இருக்க வேண்டியதில்லை. கவிதைகளாய் இருந்தால் போதும்.
More

ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல…

  ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல தேடிக் கொண்டிருக்கிறேன் கவிதை வரிகளை, அது யாராலோ களவாடப்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே வெளியேறிச் சென்றிருக்கலாம். முள் செடிகளிடையே முடங்கியிருக்கலாம். பள்ளத்தில் விழுந்து காயமாகியிருக்கலாம். அல்லது வெள்ளத்தில் விழுந்து மாயமாகியிருக்கலாம். எனினும் தேடல் தொடர்கிறது. கட்டப்படாத வார்த்தைக்குக் கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது. தொலைந்த ஆட்டின் வரவுக்காய் மலையடிவாரத்திலேயே காத்திருக்கின்றன மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளு...
More

கவிதைப் பயணம்

ஏதோ ஓர் தூரத்து இலக்கை இலட்சியமாய்க் கொண்டு என்னுடைய கவிதைகள் ஓடத்துவங்குகின்றன. பல வேளைகளில் மரத்துப் போய்க்கிடக்கும் கால்களை நான் தான் வலுக்கட்டாயமாய் வெளியே அனுப்புகிறேன். எல்லையின் வரைபடத்தை உள்ளுக்குள் எழுதிக் கொண்டாலும் அது தலை தெறிக்க ஓடுகிறது தாறுமாறாய்ப் பாய்கிறது. நான் தடுப்பதில்லை. அதற்குரிய சுதந்திரத்தை நான் கொடுப்பதில்லை, அதுவாய் எடுத்துக் கொள்கையில் எதிரே நிற்பதும் இல்லை. திசைகளையும் பருவங்களையும் மறந்து விட்டு பல வேளைகளில் அது எங்கோ ச...
More

கவிதைகள்

  கவிதைகள் தாலாட்டுகளாய் இருக்கவேண்டும் என்கிறார்கள் சிலர் போராட்டங்களாய் இருக்கவேண்டும் என்கிறார்கள் சிலர். கவிதைகள் ஆன்மீகத்தின் திறவுகோல் என்பவர்களும் காதலின் களவுகோல் என்பவர்களும் முறைத்துக் கொள்கிறார்கள். கவிதைகள் உள்ளொளிப் பயணம் என்பவர்களும் புறவெளிப் பயணம் என்பவர்களும் எதிர்த்துக் கொள்கிறார்கள். பிள்ளை பிடிப்பவர் போல உள்ளம் பிடிப்பவை தானே கவிதைகள். கவிதைகள் இப்படிக் கூட இருக்கலாம் என்கிறேன் நான்.
More

என் வாகனப் பயணம்

  சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்ட இரும்பு இதயம் வேண்டும் போலிருக்கிறது. என் பழகமில்லாப் பயணத்தில் வண்டிக் கண்ணாடியை உரசி நகர்கின்றன ந(த)கரப் பேருந்துகள். பச்சை விளக்கு பல் காட்டியபின், மைக்ரோ வினாடியில் வாகனம் பாய்ந்தாக வேண்டும், வழுக்குப் பாறைகளிடையே விரால் மீன் பிடிப்பதாய் கவனம் தேவை கால்களிலும், கைகளிலும். இல்லையேல் கட்சிமாறும் அரசியல் வாதியாய் முன்னெச்சரிக்கையின்றி முகம் திருப்பிக் கொள்ளும் ஆட்டோக்கள் மூர்க்கத்தனமாய் முத்தமிடும். பேருந்தின் நசுக...
More

வறண்ட சிந்தனை

  பயமாக இருக்கிறது. நேற்று வரை நினைக்கும் போதெல்லாம் அறுவடை செய்ய முடிந்த என் வயலில் இப்போது வைக்கோல் கூட வளரக் காணோம். நினைக்கும் போதெல்லாம் நான் ஈரம் இழுத்தெடுத்த என் கூரை மேகத்தைக் காணவில்லை. அகலமான ஆறு ஓடிக் களித்த என் முற்றத்தில் கால் நனைக்கக் கால்வாய் கூட காணப்படவில்லை. கிளைகள் வளரவில்லையேல் பரவாயில்லை முளைகளே வரவில்லையேல் என்ன செய்வது. தானே நிரம்பிக் கொள்ளும் என் காகிதக் கோப்பைகளில் காலம் வந்து ஓட்டை போட்டு விட்டு ஓடிவிட்டதா ? எனக்குள் சிறகுவ...
More

நெருக்குதல்கள்

  கவிதை எழுத மறந்து விட்டேன். எத்தனை முயன்றும் வரவில்லை. என் கவிதைச் செடிகளுக்கு செயற்கைத் தண்ணீர் பச்சையம் தரப் போவதில்லை. என் விரல்களின் நுனிகளில் இறுகக் கட்டியிருந்த வீணை நாண்கள் வெறும் கம்பிகளாய் நீள்கின்றன. என் நகங்களுக்குள்ளும் நான் நட்டுவைத்திருந்த நந்தவனங்களுக்கு, இயந்திர வாசம் இப்போது. பூக்களைப் பறித்துக் கொண்டு சாலையில் இறங்கினால் புழுதி வந்து போர்வை போர்த்துகிறது. கண்ணாடிக் கவிதையோடு வாசல் தாண்டினால் நெரிசல்களால் நெரிபட்டுப் போகிறது. அடை...
More

போலித் தீர்க்கத்தரிசி.

  அந்த அறை கவலை முகங்களால் அடுக்கப்பட்டு கலைந்து கிடந்தது. அழுவதற்காகவே தயாரிக்கப் பட்ட கண்களோடு காத்துக் கிடந்தது கூட்டம். அவர்களின் கவலைக் கைக்குட்டைகள் காய்ந்திருக்கவில்லை, கடலில் விழுந்த பஞ்சு மூட்டையாய் இதயமும் பாரமேறிக் கிடந்தது. அவர் வந்தார், அவர் கைகளில் துன்பத்தைத் துரத்தும் மந்திரக்கோல் இருப்பதாகவும், பாசக்கயிறோடு போட்டியிடும் கருப்புக் கயிறு இருப்பதாகவும் நம்பிக் கிடந்தது கூட்டம். அவர் பேசினார், அவருக்கு கடவுளே அகராதி அளித்ததாய், அவர...
More

உனக்கு வயசாச்சு

முன்பெல்லாம், இருசக்கர வாகனம் உறுமிக் கொண்டு ஓடினால் தான் ஒத்துக் கொள்வாய், காதோடு ஒட்டவைத்த ஒலிபெருக்கி காது மடல்களையும் அதிரவைத்தால் தான் இசையென்று இயம்புவாய், காயப் போட்டிருக்கும் சேலையைக் கூட காமக் கண்ணோடு பார்ப்பாய், மாலை வேளைகளை தேவதைகளின் ஊர்வல நேரமென உற்சாகமாய் மொழிபெயர்ப்பாய், போங்கப்பா, உங்களுக்கு எதுவுமே புரியாது என்று அப்பனுக்கே கலாச்சார அகரம் கற்றுத் தருவாய், கோயிலுக்கு உள்ளே வரவே முப்பது முறை முரண்டு பிடிப்பாய். இப்போது உன்னில் புது மாற்றங்...
More

கவிதை : ஒரு நண்பனுக்கு…

உனக்கு நான் அனுப்பிய கண்ணீர்த் துளிகளை உப்புத் தயாரிக்க நீ உபயோகித்துக் கொண்டாய். இருட்டில் நடந்துகொண்டே உன் நிழல் களவாடப்பட்டதாய் புலம்புகிறாய் பாறைகளில் பாதம் பதித்துவிட்டு சுவடு தேடி சுற்றிவருகிறாய். நீ பறக்கவிடும் பட்டத்தின் நூலறுந்ததை மறந்துவிட்டு வாலறுந்ததற்காய் வருந்துகிறாய். முதுமக்கள் தாழிக்குள் மூச்சடக்கி முடங்கிவிட்டு சுதந்திரக்காற்று சிறைவைக்கப் பட்டதாய் அறிக்கைவிடுகிறாய். உன் இறகுகளை உடைத்துவிட்டு சிறைகள் திறக்கவில்லையென்று வாக்குவாதம் செய்கி...
More