ஆண்டவன் கட்டளை : கிராமம் vs நகரம் ( திரை விமர்சனம் )

கிராமம், அடிமைகளையும் ராஜாவாய் உலவ வைக்கும் நகரம், ராஜாக்களையும் அடிமைகளாய் அலைய வைக்கும் புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை இரண்டாய் மடித்து அதன் நிறம் வெளியே தெரியக்கூடிய ஒரு மெல்லிய சட்டையில் போட்டுக் கொண்டு, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு நடப்பான் கிராமத்து ராஜா. அவனுக்கு வேறெதைப் பற்றியும் கவலையில்லை. முற்றத்துக்கு வெளியே கிடக்கும் காற்றும், காற்று முதுகு தடவிவிடும் நாற்றும், சோர்வுகளைக் கழற்றி எறியும் ஆறும் அவனுக்கு இலவச சேவை செய்யும். உறவுகளும், நட்பும், ஆடம்பரங்கள் தேவைப்படாத வ...
More

கிடாரி ஒரு தாமதமான‌ விமர்சனம்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப் பூ பூக்கும் என்று சொல்வார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் திரைத்துறையில் உதவி இயக்குனர், நிர்வாகத் தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றிய பிரசாத் முருகேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சுமார் இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக ஒரு பேட்டியில் அவர் சொன்ன ஞாபகம். இருக்கட்டும் படத்துக்கு வருவோம். கொம்பையா பாண்டியன் எனும் சாத்தூர் பகுதி கட்டப்பஞ்சாயத்து கில்லாடி குத்தப்படுகிறார். "என்னது ஆணிவேரையே சாச்சுடாய...
More

Movie : 12 ANGRY MEN

  “கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை. ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம். வினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன...
More

HELL HOLE (நரக வாசல் )

நரகமல்ல, அதைவிடக் கொடியது ! உயிரை உலுக்கும் ரகசிய டாக்குமெண்டரி படம் ஒன்று ஜிம்பாவே சிறைகளின் இருண்ட அறைகளைப் படம்பிடித்து உலகத்தின் மனிதாபிமான மனங்களையெல்லாம் உலுக்கி எடுத்திருக்கிறது. ஜிம்பாவேயின் சிறைகள் எப்படி இருக்கின்றன ? அங்கே கைதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் எனும் உண்மை முதன் முறையாக உலகத்தின் பார்வைக்கு HELL HOLE (நரக வாசல் ) எனும் இந்த ரகசிய செய்திப்படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சிறைகளெங்கும் எழும்பி நிற்கவே வலுவற்ற உதிர்ந்து விடும் நிலையில் எலும்புக் கூடாய்...
More

Short Film : Man On Wire

இத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. 1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப் பற்றியோ, அதன் பின்னணி பற்றியோ ஏதும் பேசாமல் முடிவுறும் தருவாயிலிருந்த இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே கம்பி க...
More

டாப் 5 ஹாலிவுட் சைக்கோ  மூவீஸ்

  ஹாலிவுட்டில் சைக்கோப் படங்களுக்குப் பஞ்சமில்லை. காரணம் பெரும்பாலான சைக்கோக்கள் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிரட்டிய ஹாலிவுட் திரைப்படங்களில் சில. சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ் (Silence of the Lambs ) அந்தோணி ஹாப்கின்ஸ் சைக்கோ கொலையாளியாக பின்னிப் பெடலெடுத்த திரைப்படம் இது. மன நல மருத்துவராய் இருந்து சைக்கோ ஆனவர். மனிதர்களைக் கொன்று தின்னும் ஹானிபல் வகை வேறு ! அவருடைய பார்வையும் அசைவுகளும், முகபாவமும் நரம்புகளில் பயத்தை ஊற்றுவது சர்வ நிச்சயம். ஹாலிவுட்டின...
More