சிறுவர்கள் பிடியில்  – பேய்கள்.

ஆவி, பேய் என்றவுடன் இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் என்று தானே நினைக்கிறீர்கள் ? உண்மையில் சிறுவர்கள் தான் பேய்களுடன் தைரியமாய்ச் சண்டை போடுகிறார்கள். சிறுவர்களின் பிடியிலிருந்து தப்பிக்கப் பேய்கள் படும் பாடு இருக்கிறதே… அப்பாப்பா…பதட்டப்படாதீர்கள் ? இதெல்லாம் வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் தான். அலோன் இன் த டார்க். என்றொரு வீடியோ கேம் உண்டு. திக் திக் நிமிடங்களுடன் ஓடும் இந்த விளையாட்டு சிறுவர்களின் பேவரிட். லூசியானாவிலுள்ள பங்களா ஒன்றின் ஓனர் தற்கொலை செய்து கொள்கிறார். அவருடைய பியானோ ஒன்ற...
More

நிஜப் பேய்

    குளிர் என்றால் உயிரை உலுக்கும் குளிர். அமெரிக்காவின் மினிசோட்டாவில் வசிப்பவர்களுக்கு இந்தக் குளிர் பழக்கமானது தான். அந்த குளிர் காலைப் பொழுதில் காரின் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் வழியில் அவளைக் கண்டார்கள். அழகான இளம் பெண். பச்சை நிறை ஆடை அணிந்திருந்தாள். ஆனால் காலில் மட்டும் செருப்பு இல்லை. ஐயோ, இந்தக் குளிரில் செருப்பில்லாமல் நின்றால் விறைத்துப் போய்விடுவாளே என்று பதட்டப்பட்டு நிற்கிறது கார். அவளும் மகிழ்ச்சியுடன் ஏறிக் கொள்கிறாள். என்னை அந்த பார்ம் ஹவுசில் இறக...
More

ஹிரோஷிமா : குண்டு விழுந்ததும்…. வெகுண்டு எழுந்ததும்… !

  அணுகுண்டு எனும் வார்த்தையைக் கேட்டாலே நினைவுக்குள் புரளும் இரண்டு வார்த்தைகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. உலகின் மாபெரும் துயரத் துளியாக அந்த நிகழ்வு வரலாற்றில் உறைகிறது. குண்டு போட்டால் கூட வெகுண்டு எழுவோம் என்பதற்கு அவற்றின் அதிரடி வளர்ச்சியே சான்றாய் இருக்கிறது. ஹிரோஷிமா எதை வேண்டுமானாலும் மறக்கும் ஆனால் 1945, ஆகஸ்ட் 6ம் தியதியை மறக்கவே மறக்காது. உலகிலேயே முதல் முறையாக என்பது ரசிக்கவும் முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை. முதல் அணுகுண்டு அந்த நாட்டின் தலையில் போடப்பட்டது. ச...
More

இதான் “உண்மை” யான கிரைம் ஷோ !

    பிரேசில் நாட்டில் ஒரு சூப்பர் ஹிட் கிரைம் ஷோ நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் பெயர் “கேனல் லிவ்ரே”. நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் வாலஸ் சூஸா. “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” ரேஞ்சுக்கு சுடச் சுட கிரைம் நிகழ்ச்சிகளை முந்தித் தருவது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். கொலையின் பின்னணி என்னவாய் இருக்கும், கொலை எப்படி நடந்திருக்கும், எப்போது நடந்திருக்கும் என்பதையெல்லாம் துவைத்துக் காயப்போடும் நிகழ்ச்சி இது. “கலக்கறாங்கப்பா… எல்லா மர்டரும் இந்த ஷோவுல தான் முதல...
More

காதலியுங்கள், ஆனால் !…

வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று ! “உலகின் மிக அழகான பொருட்களை தொடடோ, பார்க்கவோ முடியாது” என்கிறார் ஹெலன் கெல்லர். அழகானவை பொருட்களல்ல, உணர்வுகளே என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன. அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் தான் உலகின் உன்னதமான விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை ! இளைஞர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் அதிகமாய் வீசும் வாசனை, காதல் ! காதலும், காதல் சார்ந்த இடங்களும் தான் இளைஞர்களின் எல்...
More

பிளாஸ்டிக் இனி மெல்லச் சாகும்…

ஆடித் தள்ளுபடிக்கு கடையில் புடவை எடுத்து ஒவ்வொரு புடவையையும் ஒவ்வோர் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வாங்கி வரும் அம்மாக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீங்கு பற்றி ? பயணத்துக்குச் செல்லும் போதெல்லாம் நான்கைந்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி, தண்ணீரைக் குடித்து முடித்தபின் அலட்சியமாய் தூக்கி வீசும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது பிளாஸ்டிப் பொருட்கள் பூமியை மாசுபடுத்தி விடுமே எனும் கவலை ? சற்றே நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பாருங்கள் எத்தனை பொருட்கள்...
More

குழந்தைகளுக்கான சி.டிக்கள், நல்லவையா ?

ரோட்டோரங்கள் முதல் மிகப்பெரிய ஷோரூம்கள் வரை எங்கே சென்றாலும் பார்க்கலாம் விதவிதமாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் சிடிக்கள், டி.வி.டிக்கள். ஒரு டிவிடியைப் போட்டுவிட்டால் குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான், நமக்கு வீட்டு வேலை செய்யவோ, அலுவலக வேலை செய்யவோ தொந்தரவு இருக்காது என நினைக்கும் பெற்றோரும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனாலேயே புதிது புதிதாய் டிவிடிக்கள் வாங்கிக் குவிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. போட்டி போட்டு வாங்கிக் குவிக்க கலியுகப் பெற்றோர் தயாராக இருப்பதால், வ...
More

விடுபடா மர்மம்

  எட்வர்ட் லீட்ஸ்கால்னின் ஐந்து அடி உயரமும், வெறும் நாற்பத்து ஐந்து கிலோ எடையுமுள்ள மெல்லிய மனிதர். ஆனால் அவருக்குள் டன் டன்னாய் ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. தனது 25வது வயதில் பட்டாம் பூச்சிக் கனவுகளுடன் பதினாறு வயதான ஆக்னஸ் எனும் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் பாவம், திருமணத்துக்கு முந்தின நாள் ராத்திரி “மாப்பிள்ளை புடிக்கலை” என்று சொல்லி பெண் எஸ்கேப். எட்வர்ட் மனசில் அந்த தேவதை சிறகடித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் வேறு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் அ...
More

பில்லி டிப்டனிடம் இருந்த உலக மகா ரகசியம் !

அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமாவில் 1914ல் பிறந்தார் இசைக்கலைஞர் பில்லி டிப்டன். சிறு வயதிலேயே அவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். அவருடைய இளம் வயதிலேயே பெற்றோர் டைவர்ஸ் வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்கள். அதனால் உறவினர் ஒருரிடம் ஐக்கியமாகி வளர்ந்தால் பில்லி. அதற்குப் பின் அவருடைய பெற்றோரைக் குறித்து அவரும் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை. இசை ஆர்வம் அவருக்குள் கொழுந்து விட்டு எரிய ஜாஸ் பயின்றார். பின்னர் சாக்ஸபோன், அது இது என இசையில் வளர்ந்தார். ஊரிலுள்ள சிறு சிறு இசைக் குழுக்களில் முதலில் பாடினார். ...
More

விடுபடா வயலின் ரகசியம்

ஆண்டானியோ ஸ்ட்ராடிவரி : வயலின் ரகசியம் வரலாற்றையே வியக்க வைத்த இவர், இசைக்கருவிகள் செய்பவர். 1644க்கும் 1737க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். இவருடைய பேவரிட் இசைக்கருவி வயலின். தனக்கே உரிய ஸ்பெஷல் பார்முலா படி அவர் உருவாக்கிய வயலின்கள் அதி அற்புதம். அதை எப்படி உருவாக்கினார், என்ன கணக்கு வைத்திருந்தார் என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தாத மாபெரும் ரகசியம். பழைய வயலின்களின் பார்முலாக்களை இவர் ஒதுக்கித் தள்ளினார். தனக்கென சில ஐடியாக்களை உருவாக்கினார். கன கட்சிதமாக ஒவ்வொரு பாகத்தையும் உரு...
More