ஹிட்லரின் கடைசி நாட்கள்

காட்சி 1: மூன்று போர் வீரர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் வீரன் 1 :                நம்முடைய வாழ்க்கை முடிந்து விடும் போலிருக்கிறது. வீரன் 2 :                ஆமாம். ஹிட்லரின் படையில் இருப்பவர்களுக்கு சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எல்லோருக்கும் தெரிந்தது தானே ? வீரன் 3 :                ஏன் இப்படி சொல்கிறீர்கள் ? நம்மைக் கண்டு மக்கள் நடுங்குகிறார்கள். ஹிட்லர் என்றாலே கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி எறிந்து விட்டல்லவா ஓடுகிறார்கள். நமக்கு இதெல்லாம் பெருமை தானே ? வீரன் 1 :            ...
More

மலர்களே மலர்களே

தினசரி காலையில் விரல் வருடி ஊர்ஜிதப் படுத்துகிறேன் இன்னும் முளைக்கவில்லை மொட்டு. தரையில் ஈரமிருக்கிறதா தேவைக்கு பச்சையம் இருக்கிறதா என பரிசோதனைப் பார்வைகளைப் பதியமிடுகிறேன். உரங்களுக்கும் மண்புழுக்களுக்கும் கூட ஏற்பாடு செய்து பூக்கள் வேண்டி பிரார்த்தனைகளும் செய்தாயின்று. செழித்து வளரும் செடியில் எங்கும் மொட்டுகளைக் காணோம். பூக்களைக் காணும் கனவுகள் வெறித்து கரு விழிகள் இரண்டிலும் கூட பூக்கள் விழுந்து விட்டன. என் பூ தேடலைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்...
More

தினத்தந்தி வாரம் 1 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

செல்போன்கள் பேசுவதற்கானவை எனும் காலம் மலையேறிப் போய்விட்டன‌. செல்போனில் பேசவும் செய்யலாம் என்பது தான் இப்போதையை புது மொழி. காரணம் இன்றைய செல்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் எனும் சின்ன எல்லையிலிருந்து கையடக்கக் கணினி எனும் நிலைக்கு இடம்பெயர்ந்தாகி விட்டது. வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யணுமா ? சோபாவில் அமர்ந்து கொண்டே ஷாப்பிங் செய்யணுமா ? செல்போன் பில், எலக்ட்ரிக் பில், கேபிள் டிவி பில் என பில்களையெல்லாம் கட்டி முடிக்கணுமா ? ஊருக்கு போக டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், விமான டிக்கட் ஏதாச்சும் புக்...
More

கர்வம் தவிர்

  “கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தனக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்” என்கிறார் கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய ஐரிஸ் நாட்டு எழுத்தாளர் சி. எஸ். லூயிஸ். தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை !  மனிதனுடைய வளர்ச்சியின் படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இது தான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும் போது, ...
More

சமூக வலைத்தளம் : தெரியாத அச்சுறுத்தல்கள்

  சமூக வலைத்தளங்களில் போடப்படும் ஒரு செல்ஃபி உங்கள் இருப்பிடத்தைச் சொல்லிவிடும் ! ஒரு செய்தி உங்களை அறியாமலேயே உங்களை சிக்கலில் மாட்டி விடும். ஒரு ஆப் உங்களுடைய தகவலை உங்களுக்குத் தெரியாமலேயே திருடிவிடும். போன்ற செய்திகளை கலைஞர் தொலைக்காட்சி நெஞ்சு பொறுக்குதில்லையே நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டபோது ஐடி நண்பர்களே வியந்து போனார்கள். அந்த பதிவு இதோ.     https://www.youtube.com/watch?v=epwBIi2-L3k
More

வன்முறையை விதைக்கின்றனவா சமூக‌ வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களின் பங்கு சமூகத்திற்கு மாபெரும் வரமாகவும், மிகப்பெரிய‌ சாபமாகவும் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு செய்தி பல இடங்களுக்குப் பரவ வானொலியோ, அச்சுப் பத்திரிகையோ தான் ஊடகமாக இருந்தது. செய்திகள் பரவும் வேகமும், அதன் மூலம் உருவாகும் தாக்கங்களும் ஊகிக்கக் கூடிய அளவிலேயே இருந்தன. ஆனால் இன்று அப்படியில்லை, ஒரு செய்தி விதையாக ஒரு இடத்தில் விதைக்கப்பட்ட உடனே அதை சமூக வலைத்தளங்கள் உலகின் கடை கோடி எல்லை வரைக்கும் எடுத்துச் செல்கின்றன. அந்த செய்தி வாசிப்பவர்களின் கண்ணோட்டத்துக்கு ஏற்ப வ...
More

ஒரு சொல்லும், ஒரு செயலும்

ஏதேனும் ஒரு செயல் சந்தேகப் பொறியை சொல்லாமல் பற்ற வைக்கிறது. ஏதேனும் ஒரு சொல் சந்தேகப் பொறியாய் மாறி எலி வாலுக்காய் வாய் திறக்கிறது. சொல் கற்பனையில் வாக்கியங்களை இடைவிடாமல் இணைத்து பெருங்கதையாய் மாற, செயல் நிகழாதவற்றை நிதமும் படம்பிடித்து நீள் படமாயும் நிரம்பி வழிகிறது. அந்த செயல் குறித்து அவளோ, அந்தச் சொல் குறித்து அவனோ பேசிக் கொள்ளாத கவலையில், மௌனப் படுக்கைக் கால்களருகே கவிழ்ந்து படுத்து கதறி அழுகின்றன அந்த அப்பாவிச் சொல்லும் செயலும்.
More

What is that கடல் எல்லை ?

மீன் பிடிக்கப் போனவர்கள் எல்லை தாண்டி விட்டார்கள். எல்லை தாண்டியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இதெல்லாம் சமீப காலமாக இந்திய மீனவர்களின் உயிரை உலுக்கும் பிரச்சினை. கடலுக்குப் போன மீனவன் திரும்பி கரைக்கு வரும் வரை அவனுடைய குடும்பம் அருவாமனை மீனாகிறது. மீனவனுக்குக் கடல் அமுத சுரபி. அவனுடைய தாய்மடி. அதில் எல்லைகள் போட்டு தொல்லைகள் தொடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனும் தார்மீகக் கேள்வி எல்லோருக்குள்ளும் உண்டு. அதற்கு முன் இந்த கடல் எல்லை சமாச்சாரத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது. முன்...
More

டிஜிடல் வணக்கம்

அதிகாலையில் எழுந்ததும் பைபிள் வாசிப்பது என் அப்பாவின் பழக்கம் சூரிய நம்ஸ்காரம் செய்வதோ நமாஸ் செய்வதோ உங்கள் அப்பாவின் வழக்கமாய் இருந்திருக்கலாம். அம்மாக்களுக்கு இருள் விலகாத கொல்லைப்புற தாழ்ப்பாழ் விலக்கி சத்தமிடாத பாத்திரங்களோடு சகவாசம் செய்வது மட்டுமே கற்காலப் பழக்கம். எனக்கும் உனக்கும் இதில் எதுவும் பழக்கமில்லை. விடிந்தும் விடியாமலும் போர்வை விலக்கா அதிகாலைகளில், வாட்ஸப்பின் நெற்றி தேய்த்து தூக்கம் கலைக்கிறோம். நள்ளிரவின் திடீர் விழிப்புகளிலும் வெளிச்ச...
More

உலகெங்கும் இந்திய சென்டிமென்ட்ஸ் !!!

  “மணமகளே மருமகளே வா… உன் வலது காலை எடுத்து வைத்து வா…” எனும் பாடல் ஒலிக்காத கல்யாண வீடுகள் முன்பெல்லாம் இல்லை. வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைவது வீட்டுக்கு வளத்தைக் கொண்டு வரும் என்பது நமது நம்பிக்கை. வலது காலை வைத்து தான் புகுந்த வீட்டுக்குள் பெண் நுழைவார். ரோமர்களுக்கும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. வீட்டுக்குள் நுழையும் போது வலது காலை வைத்து தான் நுழைவார்கள். இங்கிலாந்தில் இந்த செண்டிமெண்ட் இன்னும் ஒரு படி மேலே. அவர்கள் செருப்பு போடும் போது கூட வலது காலைத் தான் மு...
More