பால்ய ஆடைகள்

சில ஆடைகள் விசேஷமானவை. சிறுவயதில், விழாக்கால நாள் வரை காத்திருந்து பெற்றுக் கொள்ளும் புத்தாடை மணம் இன்னும் நாசிகளில் உயிர்ப்புடன். வருட இடைவெளி வாங்கிக் குவித்த ஆடைகள் ஆயிரமெனினும் இன்னும் நினைவிருக்கும் பால்ய கால ஆடைகளின் டிசைன்கள். அம்மாக்களின் அலமாரிகளில் திருமண வாசம் மாறாமல் மௌனித்திருக்கும் பட்டுப் புடவைகள் விலைமதிப்பற்றவை. காதல் பரிசளித்த ஆடை நேசம் பரிமளித்த ஆடை என எல்லோரிடமும் இருக்கக் கூடும் ஏதேனும் ஓர் ஆடை. காலக் கரையான் தின்று தீர்த்தாலும் இன்னு...
More

முக்கியமற்ற முக்கியங்கள்

முத்து தேடிய காலங்களில் மீன் பிடிக்கத் துவங்கியிருந்தால் சில முத்துக்களை இப்போது வாங்கியிருக்கக் கூடும். நாகக் கல் தேடி ஓடிய தூரத்தை நீளமாய் போட்டிருந்தால் கைகூடியிருக்கும் ஏதேனும் ஓர் மாரத்தான் வெற்றி. காதலுக்காக நழுவ விட்ட கணங்களை இறுகப் பிடித்திருந்தால் ஒருவேளை முற்றத்தில் பூத்திருக்கக் கூடும் சில காதல்கள் என்ன செய்வது முக்கியமற்றதாய் தோன்றும் நிகழ்வுகளின் கூட்டுத் தொகையில் தான் வாங்க முடிகிறது முக்கியமான சில இலட்சியங்களை.
More

மரணம்

சாவு ஊர்வலத்தில் சிந்திய வீதியோரப் பூக்களை மிதிப்பவர்களின் கண்களில் மின்னி மறைகிறது மரண பயம். ஃ எட்டு காலில் சுடுகாட்டுப் பயணமெல்லாம் செவிவழிச் செய்தியாகி விடக்கூடும் விரைவில். நான்கு சக்கரப் பாடைகள் தான் தெருவெங்கும் நகர்கின்றன. ஃ குடித்துக் குடித்துக் குடல் வெந்து செத்தவனுக்கு முன்பாகவும் ஆட்டம் போடுகிறது சாராய வாசனை.
More

மழையவதாரம்

சாலை நெரிசலில் நனைந்து, சேறு வீசிய வாகனத்தைச் சாபமிட்டு, சாலை நீரில் அசுத்தமாகி, 'மழையும் மண்ணாங்கட்டியும்' என எரிச்சல்பட்டு, ஒரு வழியாய் வீடு சேர்ந்து தலை துவட்டி உடை மாற்றி... தேனீரும் கையுமாய் சன்னலோரத்தில் நிற்கையில் அழகாய் தெரிந்தது மழை.
More

மரித்து மீண்டவர்கள்

மரித்து மீண்டவர்களின் வாக்குமூலங்கள் வியப்பூட்டுகின்றன. சிலர் வெளிச்சச் சுரங்கத்துள் வழுக்கிச் சென்றார்களாம். சிலர் வானவில்லுக்கு மேலே பயணித்து மேகத்தின் உள்ளே சுவர்கத்தில் அமர்ந்தார்களாம். சிலர் இயேசுவை நேரில் கண்டு நலம் விசாரித்தும், சிலர் கைலாயத்தில் சிவனோடு கை குலுக்கியும், சிலர் ஆனந்தப் பூந்தோட்டத்தில் நர்த்தனம் ஆடியும் திரும்பி வந்தார்களாம். ஆனந்தக் கதைகள் அளப்பவர்கள் மீண்டும் மரித்துப் போக மறுத்து விடுவது தான் வியப்பளிக்கிறது. -  
More

பந்தல்கள்

  பேதங்கள் இல்லாமல் கட்டப்படுகின்றன பந்தல்கள் திருமண வீட்டின் கெட்டி மேளச் சத்தங்களில் அட்சதை தூவும் பந்தல்கள், தங்கள் அடுத்த பயணமாக சாவு வீடுகளின் விசும்பல்களை விழுங்குகின்றன. பூப்புனித நீராட்டு விழாக்கள் முடிந்த கையோடு பாராட்டு விழாக்களுக்குப் பயணப்படுகின்றன. அரசியல் கூட்டங்களில் காது பொத்திக் கிடப்பவை மறு நாள் சாதிக் கூச்சல்களுக்குக் கூரையாகிக் கொள்கின்றன. பந்தல்களுக்குப் பேதம் இல்லை. துயரங்களையும், ஆனந்தங்களையும் சுமந்து சுமந்து மறு பேச்சு பேசாமல் அ...
More

மேன்ஷன்

எல்லா மேன்ஷன்களிலும் காணக்கிடைக்கிறது. கட்டிலுக்கு அடியில் காலி பீர் பாட்டில்கள், ஆஷ்டிரே-வாகிப்போன சிகரெட் கவர்கள், மூலையில் பதுங்கிக் கிடக்கும் பீடித் துண்டுகள், இவைகளோடு சேர்ந்து வேலையில்லை என்று வரப்பெற்ற நிராகரிப்புக் கடிதங்களும், எங்கிருந்தோ வந்திருக்கும் நலம் விசாரிப்பு லெட்டர்களும் ஃ
More

Kavithai : என் நிலம்

என் கிராமத்து வீட்டைச் சுற்றி செழித்து வளர்ந்திருந்த‌ செடிகளை. எங்கிருந்தோ ஒடித்து வந்து ஏனோ தானோவென‌ நட்டு வைத்த‌ செம்பருத்தி முணு முணுக்காமல் முளைத்து வளரும். ஒட்டுப் போட்டுக் கட்டி வைத்த ரோஜாக்கள் புதிய வர்ணத்தில் பூக்களை விரிக்கும். பிச்சியும் முல்லையும் உத்திரத்தை எட்டிப் பிடித்து கூரைகளில் குடியிருக்கும் கிள்ளிப் போட்ட‌ பத்துமணிச் செடிகள் மள மளவென‌ முளைவிட்டு முற்றம் நிரப்பும். வேலிகளுக்குக் கூட‌ குரோட்டன்ஸ் வைத்தே பழங்கப்பட்ட‌ கிராமத்து நாட்கள் அவை. ...
More

தோளில் சாய்பவர்

என் தோள்மீது பாரமாய் சாய்கிறது பக்கத்து இருக்கைக் காரரின் தலை. தோளைக் குலுக்கி அவர் தூக்கத்தை உலுக்கிப் போடும் என் எரிச்சலைக் கொஞ்சம் ஒத்தி வைக்கிறேன். அதீத உழைப்பின் பிரதி பலிப்பாகவோ, எப்போதேனும் கிடைக்கும் தனிமை ஓய்வாகவோ, தூக்கத்தைத் தொலைத்த இரவுகளின் தொடர்ச்சியாகவோ, இருக்கலாம் இந்த தூக்கம். என் தோள் மீது தூங்கி விழவேண்டுமென்று அவர் சதித் திட்டம் வகுத்திருக்க சாத்தியமில்லை. விழட்டும். தோளில் விழுதல் ஒன்றும் நாகரீகக் குறைவில்லை காலில் விழுவத...
More

கைகள்

      நெரிசல் சாலையில் தடுமாறுபவர்களை சாலை கடத்தும் கைகளை விட,   நெருப்புச் சாலையில் வியர்வை ஆறு வழிய வழிய பாரம் இழுப்பவருக்கு உதவும் கைகளை விட,   தபால் அலுவலகத்தில் நலமா எனும் நாலுவரிச் செய்தியை முதியவர் எவருக்கோ பிழையுடனேனும் எழுதித் தரும் கைகளை விட,   நீளும் வறுமைக் கைகளை வெறும் விரல்களோடேனும் தொட்டுப் பேசும் கைகளை விட,   எந்த விதத்திலும் உயர்ந்ததில்லை கவிதை எழுதும் கைகள்.
More