வீட்டில் ஒற்றைக் குழந்தையா ?

  குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து விடுபவர்கள் பல வேளைகளில் குழந்தைகளின் அருமையைப் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகள் கடவுளின் குட்டி வடிவம். மகா சக்தியின் மினியேச்சர். அதை கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கிறார். "குழந்தைகள் உங்களால் வரவில்லை, உங்கள் மூலமாய் வந்திருக்கிறார்கள்" என்கிறார் கலீல் ஜிப்ரான். அந்தக் குழந்தைகளை மிகச் சரியான வகையில் வளர்க்கும் பொறுப்பு ந...
More

குழந்தைகளுக்குத் தனி அறை வேண்டுமா ?

குழந்தைகளுக்குத் தனி அறை வேண்டுமா ? இது பளார்ன்னு குழந்தைகளை அறையற சமாச்சாரமில்லை. அப்பா அம்மா கூட குழந்தைகளைப் படுக்க வைக்கலாமா ? இல்லை அவர்களைத் தனியே ஒரு ரூமில் படுக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வி. எதுக்கு இப்படி ஒரு தேவையில்லாத கேள்வி என நினைக்காதீங்க. இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. காரணம் ஒன்று, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் குழந்தை பிறந்த உடனேயே ஒரு தனி அறையில் போட்டு விடுகிறார்கள். குழந்தை அழுதாலோ, சத்தமிட்டாலோ பெற்றோரின் அறையில் அலாரம் அடிக்கும் ! அவர்கள் ஓடிப் ப...
More

கட்டுரை : பதறாயோ நெஞ்சமே…

2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்கா கீழே இறங்க முதலிடத்தில் இந்தியா அவமானகரமாக அமர்ந்திருப்பதாகச் சொல்கிறது யூனிசெஃப் ...
More

கலாட்டா + கல்வி = கல்லூரி

முதுமைக் காலத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது வாழ்க்கை அனுபவத்தைப் புரட்டிப் பார்க்கும் அனைவருடைய வாழ்க்கையிலும் நிச்சயம் மின்னி மறையும் அவர்களுடைய கல்லூரி கால நினைவுகள். அப்படி நினைவுக்கு வரவில்லையேல் ஒன்று அவர்கள் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பைப் பெறாதவர்களாய் இருக்க வேண்டும், அல்லது நடந்தவற்றையெல்லாம் மறந்து விடும் நோய் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கல்லூரிக் காலத்தை “கனவுகளை நெஞ்சில் விதைத்து கண்களில் அறுவடை செய்யும் காலம்” என்று சொல்லலாம். சுவாரஸ்யங்கள், சவால்கள், சாதனைகள், வாழ்வு...
More

சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?

நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ? எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்...
More

குட் டச், பேட் டச்

“குட் டச், பேட் டச்” ன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க. நல்ல தொடுதல், மோசமான தொடுதல். பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் இது. ஆனாலும் இன்னிக்கும் பல்லாயிரம் பேர் இதனால பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். சுருக்கமா இதைச் சொல்லணும்ன்னா, நல்ல தொடுதல் ஒரு அம்மாவோட அரவணைப்பைப் போல அன்பானது. எந்தவிதமான கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நேசம் உடையது. குறைந்த பட்சம் எந்த தப்பான சிந்தனையும் இல்லாத தொடுதல் நல்ல தொடுதல். மோசமான தொடுதல்ங்கறது தலை கீழ். தப்பான சிந்தனையோட தொடறது. குறிப்பா பெ...
More

குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை.  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.  சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொ...
More